பிராமண பெண்ணுக்கு பெரியாரை பிடிக்க காரணம்! நெகிழ்ச்சியான அந்த வார்த்தை.. ஜேம்ஸ் வசந்தன் போட்ட பதிவு
சென்னை: செய்தி வாசிப்பாளராக இருந்து பிரபல இசை அமைப்பாளராக மாறிய "ஜேம்ஸ் வசந்தன்" சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ செய்து வரும் ஜேம்ஸ் வசந்தன் அரசியல், சினிமா, மதங்களை வைத்து பேசுபவர்களையும் அடிக்கடி விமர்சித்து வருகிறார்.
அதுபோல கிறிஸ்தவ மத போதகர்கள் குறித்தும் அடிக்கடி வீடியோ வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் தற்போது தான் படித்ததில் பிடித்தது என்று ஒரு பிராமண பெண் எழுதியதாக "ராஜ்குமார்" என்பவர் பகிர்ந்த பதிவை ஜேம்ஸ் வசந்தன் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

அதில், பிராமண பெண்ணான எனக்கு ஏன் பெரியாரை பிடித்தது ?...என்னுடைய சிறுவயது முதற்கொண்டு பெரியார் என்றால் சூத்திரன், பிராமண துவேஷி என்று மட்டுமே என் வீட்டு பெரியவர்கள் என்னிடம் கூறி நான் கேட்டுள்ளேன்.அது சிறுவயதில் என்னுடைய மனதில் மிக நன்றாகவே பதிந்தது. அன்றிலிருந்தே என்னுடைய நண்பர்களிடம் பெரியாரை பற்றி எந்தவித புரிதலும் இல்லாமல் தவறாக பேசியதே மிக அதிகம்.
பின் என்னுடைய கல்லூரி நாட்களில் எல்லாதவிதமான மாணவர்களுடனுமே நட்பு வைத்திருந்தேன். அதில் ஒரு நண்பன் மூலம் பெரியாரை பற்றின சரியான புரிதலை கிடைக்கப்பெற்றேன். அன்று நான் முக்கியமாக புரிந்துகொண்ட விஷயம் பெரியாரின் மூலம் பிராமணப் பெண்கள் நிறையவே பலன் அடைந்துள்ளனர்.
பால் தினகரனின் மனைவி பேச்சுக்கு எதிராக ஜேம்ஸ் வசந்தன் எழுப்பிய அடுக்கடுக்கான கேள்வி.. குவியும் கமெண்டுகள்
பொதுவாக இந்த ஜாதி கட்டமைப்பு மற்றும் ஆணாதிக்கத்தின் அழுத்ததின் காரணமாக பெண்கள் தங்களுடைய ஜாதி பெருமையை நிறைய பேசுவார்கள். குறிப்பாக பிராமண பெண்கள் நிறையவே பேசுவார்கள். அப்படி தன்னுடைய ஜாதி பெருமையை பேசவில்லை என்றால் பிராமண ஆண்கள் தங்களை பிராமண பெண்களாக ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்ற பயமும் கூட இவர்கள் தங்களுடைய ஜாதி பெருமையை பேசுவதற்கான ஒரு முக்கியமான காரணம்.
அப்படி என்ன பெரியார் பார்ப்பன பெண்களுக்கு செய்துவிட்டார்?..அந்த காலத்தில் "மொட்டை பாப்பாத்தி" என்ற கிண்டலான சொல்லாடல் இருந்தது, அது முக்கியமாக பார்ப்பன பெண்கள் தன்னுடைய கணவனை இழந்த பிறகு மொட்டை அடித்து காவி புடவையுடன் வீட்டின் ஓரமாக உட்கார வைத்து விடுவார்கள். அது பல வருடங்களாக வழக்கத்தில் இருந்தது.
பெரியாருடைய பெண் விடுதலை போராட்டத்தின் பின் இந்த வழக்கம் முழுவதுமாக தமிழ்நாட்டில் இருந்து கைவிடப்பட்டது.
அது மட்டும் இல்லாமல் மனுஸ்மிருதியின்படி பெண்களுக்கு சொத்தில் சம உரிமை தரக்கூடாது என்றும், அவர்களை மாதவிடாயின் போது ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற வழக்கங்களை பார்ப்பன ஆண்கள் அவர்களுடைய வீட்டு பெண்களிடம் காண்பித்து வந்தனர்.
பின் பெரியார், இது எந்த அளவிற்கு முட்டாள் தனம், பெண்களுக்கு கண்டிப்பாக சொத்தில் சம உரிமை கொடுக்க வேண்டும் என்று கூறினார்.
பின் பெண்கள் அடக்கு முறையில் உள்ள காலகட்டத்தில், மறுமணம் என்பது நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு கடினமான ஒன்றாக இருந்துள்ளது.
அதை மிக முற்போக்காக அன்றே மறுமணம் கண்டிப்பாக பெண்கள் செய்து கொள்ள வேண்டும் என்று பேசியவர் பெரியார்.
கருத்தடுப்பு, பெண்கள் கல்வி போன்ற பலதரப்பட்ட பிரச்னைகளை பார்ப்பனியம் தனக்கு சாதகமாக உபயோகித்து கொண்டதை தடுத்து அவர்களுக்கு கண்டிப்பாக சம உரிமை தரவேண்டும் எனக் கூறியவர் பெரியார். தேவதாசி முறையை அடியோடு கிள்ளி எறிவதற்காக முத்துலட்சுமி ரெட்டி உடன் போராடியவர்.
மேலே குறிப்பிட்ட அனைத்துமே சாஸ்திரத்தின் மூலம் பிராமண பெண்களை ஒடுக்கி வைத்தனர். பின் பெரியாரின் பெண்கள் அடிமைத்தனத்திற்கான குரல் கண்டிப்பாக பார்ப்பன பெண்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இன்றளவும் இருந்துவந்துள்ளது.
உதாரணத்திற்கு எல்லா பார்ப்பன வீடுகளிலுமே பெரியாரைவிட மஹாபெரியவாளுக்கு கூடுதல் மதிப்பு இன்றளவும் உள்ளது.
பார்ப்பன பெண்கள் சந்திரசேகர ஸ்வாமிகளை தங்களுடைய உயிராக மதித்து வணங்குகின்றனர். ஆனால் பெண்களுக்கான சம சொத்து உரிமை சட்டம் இயற்றப்பட்ட பொழுது, அதை எதிர்த்து, பெண்களுக்கு எதற்கு சொத்தில் சமஉரிமை, என டெல்லியில் போராட்டதையெல்லாம் முன்னெடுத்தவரே பெரியவா ஸ்வாமி சந்திரசேகர்தான்.
கர்த்தர் பெயரில் கொள்ளை! ஜெபக்கூட்டத்தில் நகைகளை கேட்ட பெண்.. ஜேம்ஸ் வசந்தன் வெளியிட்ட பதிவு
ஆனால் பெரியார், கடைசி வரை பெண்களுக்கான மிக முற்போக்கான சிந்தனை மற்றும் செயல்களை முன்னெடுத்தார்.
உங்கள் தங்கையிடமோ, அக்காவிடமோ சென்று, அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு, என்று கேட்டுப்பாருங்கள். அண்ணன் என்றும் பார்க்காமல், செருப்பு பிஞ்சிடும், என்று பதிலளிப்பார்கள். அங்கே வாழ்கிறார் பெரியார்.
தான் பார்ப்பனீயத்துக்கு அடிமையாக இருக்கிறோம் என்று கூட தெரியாமல், பெரியார் என்ன செய்தார் என்று கூட தெரியாமல், அவரை திட்டும் பார்ப்பன பெண்கள் ஒருமுறை நினைவுபடுத்தி பார்க்க வேண்டும். தற்பொழுது தமிழ்நாட்டில் அவர்களால் படிக்க முடிகிறது என்றால், அதற்கு பெரியாருடைய பங்கு கண்டிப்பாக உண்டு. அதற்கு வாழ்நாள் முழுக்க கடமைப்பட்டுத்தான் உள்ளோம். அவர் கிழவர் அல்ல, எல்லாருக்குமான கிழக்கு திசை.... என்று இருக்கிறது. இந்த பதிவிற்கு அதிகமான லைக்குகளும் கமாண்டுகளும் குவிந்து வருகிறது.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications