ஜனநாயகன் படத்தை லீக் செய்தது இவங்கதான்! திட்டமிட்டு நடந்த சதி, விஜய்க்கு சம்பந்தம் இல்ல! நடிகை சனம் ஷெட்டி ஆதங்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படம் தியேட்டரில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம், தமிழ் சினிமாவிலும் அரசியல் வட்டாரங்களிலும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரம் குறித்து பலரும் தங்களது கருத்துகளை வெளியிட்டு வரும் நிலையில், நடிகை சனம் ஷெட்டி பேசியது தற்போது சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது.

Vijay Sanam Shetty Jana nayagan Tamil Cinema

நடிகை சனம் ஷெட்டி பேட்டி

இந்த சர்ச்சை குறித்து சனம் ஷெட்டி பேசும்போது, "ஒரு படம் லீக் ஆகிறது என்பதே மிகவும் தவறான விஷயம். அது எந்த ஹீரோவின் படம் என்றாலும் கூட இது ஏற்றுக்கொள்ள முடியாதது. 'ஜனநாயகன்' படம் லீக் ஆனாலும், அதனால் அந்தப் படத்தின் வெற்றி பாதிக்கப்படும் என்று நான் நினைக்கவில்லை. தியேட்டரில் படம் வந்தால் மக்கள் கண்டிப்பாக வந்து பார்ப்பார்கள். இந்த படம் நல்ல வரவேற்பைப் பெறும், வசூலும் நன்றாக இருக்கும்" என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

ஏற்கனவே ரீ ரிலீஸ் செய்யப்பட்ட கில்லி, ஃபிரண்ட்ஸ் எல்லாம் எத்தனை முறை பார்த்தோம், அதேபோல இந்த படமும் எல்லோராலும் மீண்டும் மீண்டும் பார்க்கப்படும் அதனால் பயம் எதுவும் இல்லை என்று கூறினார். மேலும் அவர், "இந்த லீக் சம்பவம் திட்டமிட்டு செய்யப்பட்டதுபோல தோன்றுகிறது. குறிப்பாக தேர்தல் நேரத்தில் இப்படம் கசிந்தது சந்தேகத்தை உருவாக்குகிறது.

ஜனநாயகன் லீக் சம்பவம்

சிலர் விஜய்யே இதற்கு காரணம் என்று சொல்கிறார்கள். ஆனால் அது எந்த வகையிலும் நியாயமான குற்றச்சாட்டு அல்ல. இவ்வளவு பெரிய படத்தை அவரே லீக் செய்வார் என்றால் அதில் அவருக்கு என்ன லாபம்? இது அவரை பாதிக்கவே செய்யும். அதனால் இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை நான் ஏற்க முடியாது" என்று தெளிவாக தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், "இந்த மாதிரி திருட்டுத்தனமாக படம் வெளியிடுவது ஒரு குற்றம். இதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆரம்பத்தில் ஆதரவு

சனம் ஷெட்டி விஜய் கட்சி தொடங்கியதில் இருந்தே அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்தார். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக விஜய் தனது குடும்ப வாழ்க்கை குறித்து பொதுவாக பேசியபோது, அதற்கு சனம் விமர்சனம் செய்திருந்தார். "பல ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த குடும்பத்தை பற்றி அப்படி சொல்லக்கூடாது" என்று அவர் கூறிய வீடியோக்களும் அப்போது வைரலாகின.

ஆனால் தற்போது அதே சனம் ஷெட்டி, 'ஜனநாயகன்' லீக் விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக பேசுவது புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. சமூக வலைத்தளங்களில் இதைப் பற்றி இருவிதமான கருத்துகள் நிலவுகின்றன. சிலர், "முன்பு விமர்சித்து இப்போது ஆதரிக்கிறார்" என்று கேள்வி எழுப்புகின்றனர். இந்நிலையில், 'ஜனநாயகன்' படம் வெளியாவதற்கான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது. லீக் சர்ச்சையை தாண்டியும், படம் தியேட்டரில் எப்படி வரவேற்பைப் பெறும்? வசூலில் எந்த அளவுக்கு சாதிக்கும்? என்பதே தற்போது அனைவரின் கவனமாக மாறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+