Jananayagan: மக்கள் நினைக்காமல் மாற்றம் பிறக்காது.. விஜய்க்கு ஹைப் ஏத்திய ஜனநாயகன் ப்ரோமோ! இவ்வளவுதானா?
சென்னை: எச் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தின் இரண்டாவது சிங்கிள் ப்ரோமோவை பட குழு வெளியிட்டு இருக்கிறது. அந்த ப்ரோமோவில் "ஒரு பேரே வரலாறு" என தொடங்கும் இந்த பாடலை அனிருத், விஷால் மித்ரா இணைந்து பாடி இருக்கின்றனர். இந்த பாடல் நாளை வியாழக்கிழமை மாலை 6:30 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
விஜய் நடிப்பில் உருவாகி பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் ஜனநாயகன் படத்தின் அப்டேட் தெரிந்து கொள்வதற்காகவே ரசிகர்கள் ஆர்வத்தோடு இருக்கின்றனர். வரும் பொங்கலுக்கு பிரபாஸின் ராஜாசாப் மற்றும் சிவகார்த்திகேயன் பராசக்தி உள்ளிட்ட பெரிய படங்களுடன் விஜய்யின் ஜனநாயகன் படமும் வெளியாக இருக்கிறது.

அதிலும் ஜனவரி ஒன்பதாம் தேதி உலகம் முழுவதும் விஜயின் ஜனநாயகம் வெளியாக உள்ள நிலையில் இந்த இதன் இசை வெளியீட்டு விழா இந்த மாதம் இறுதியில் மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது
இப்படியான நிலையில் அனிருத் இசையில் உருவாகியுள்ள ஜனநாயகன் செகண்டு சிங்கிள் பாடலின் ப்ரோமோ வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஜனநாயகன் படத்தில் விஜயுடன் பூஜா ஹெட்டே, மமீதா பைஜூ, பாபி தியோல், பிரியாமணி, பிரகாஷ்ராஜ் உட்பட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்காக "ஒரு பேரே வரலாறு" பாடல் 6.30 மணிக்கு வெளியாக உள்ள நிலையில் அதற்கான வீடியோ வெளியாகி இருக்கிறது.
அதில், "ஒரு பேரே வரலாறு.. அழித்தாலும் அழியாது.. அவன் தானே ஜனநாயகம்.. நம்ம மக்கள் நினைக்காமல் ஒரு மாற்றம் நடக்காது" என அரசியல் வரிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. டிசம்பர் 18ஆம் தேதி நாளை மாலை ஆறு முப்பது மணிக்கு இந்தப் படத்தின் பாடல் வெளியாக இருக்கிறது. அதேபோல பராசக்தி படத்தின் 10 நிமிட வீடியோ காட்சியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ள நிலையில் சோசியல் மீடியாவே நாளைக்கு கொந்தளிக்க போகிறது என்று தெரிகிறது.
ஏற்கனவே பராசக்தி படம் ஜனநாயகனுக்கு போட்டியாக வருகிறதா என்றும் விஜய் துப்பாக்கியை கொடுத்ததும் சிவகார்த்திகேயன் அவருக்கு எதிராகவே நிற்கிறாரே என்றெல்லாம் பேசப்பட்டு வரும் நிலையில் நாளை என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
எனக்கு Clean அரசுதான் வேணும்! காதுக்கு ஏதாவது வந்தது தொலைச்சிடுவேன்! அமைச்சர்களுக்கு விஜய் வார்னிங் -
தமிழக சட்டசபை 18 ஆம் தேதி கூடுகிறது.. “தமிழ்த்தாய் வாழ்த்து” பற்றி சஸ்பென்ஸ் வைத்த சபாநாயகர்! -
Mayor பிரியா - தவெக MLA பல்லவி மோதல்.. மேயர் vs எம்எல்ஏவில் பெரியவர் யார்? சட்டம் சொல்வது என்ன? -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது! -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
தன் பதவியையே காப்பாற்ற முடியாத ஜோதிடர்.. விஜய்க்கு வழிகாட்டுகிறாராம்! விளாசிய மா.கம்யூ., சண்முகம் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சேலத்துல ஓட்டுக்கு பணம் கொடுத்துதான் ஜெயிச்சாங்க! பஞ்சாயத்தை கிளப்பிய தவெக வேட்பாளர்! விஜய் சொன்னது? -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம்












Click it and Unblock the Notifications