பெட்ரூமுக்கு அழைக்கிறான் சந்தோஷ்... பாத்ரூமில் குமுறி அழறா ஜனனி.. என்னாச்சு!
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியில் திருமணம் சீரியல் ரொம்ப நல்லாவே இருக்கு. அடக்கமான ஒரு பொண்ணு, அலட்டல் இல்லாத ஒரு பையன்... இருவரையும் காலம் கல்யாண பந்தத்தில் இணைத்துவிட...பிரிவோமா..வாழ்வோமான்னு இவர்கள் வாழ்க்கை நகர்ந்துக்கிட்டு இருக்கு.
சந்தோஷ் குடும்பத்தில் அண்ணி மாயா, பூஜை, பரிகாரம் என்று பொய் சொல்லி, ஜனனியை அவள் அம்மா வீட்டுக்கு அனுப்ப என்ன செய்யணுமோ அதை கச்சிதமா செய்துடறாங்க.
ஜனனி தனது அம்மா வீட்டில், சும்மாதான் வந்தேன். அவர் ஊரில் இருந்து வந்தவுடனே என்னை அழைச்சுக்கிட்டு போயிருவாருன்னு சொல்லி சமாளிச்சுடறா.. இதே போல, வீட்டில் அனைவரையும் சமாளித்த பிறகு குளியல் அறைக்கு செல்கிறாள்.

குளியலறை
பிறந்த வீட்டு குளியலறையில் எத்தைனை புது மணப்பெண்கள் கண்ணீர், குளியல் தண்ணீரோடு கலந்திருக்குமோ.. இப்போது ஜனனியின் கண்ணீரும் குளியலறை நீரோடு கலந்தது.எப்போதும் சாந்தமான முகத்தோடு, எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், சலனமற்ற முகத்துடன் புகுந்த வீட்டில்; வளைய வந்த ஜனனிக்கு பொத்துக்கொண்டு வந்தது அழுகை, பீறிட்டு வந்தது கண்ணீர். குமுறி குமுறி அழுதாள்.

கல்யாண ஆல்பம்
சந்தோஷ் கல்யாண ஆல்பத்தை எடுத்து பார்த்துகிட்டு இருக்கான். அப்போது அறைக்குள் ஜனனி வர்றா. ஐயோ.. வந்துட்டீங்களா ஜனனி.. உங்களை நான் ரொம்ப மிஸ் பண்ணினேன் ஜனனின்னு சொல்றான்.

வாங்க
இதுக்கே இப்படி சொல்றீங்களே... நிரந்தரமா பிரிஞ்சுட்டா என்ன பண்ணுவீங்கன்னு கேட்கறா ஜனனி. என்ன நடந்துகிட்டு இருக்குதோ, அதுஅதை அப்படி அப்படியே விட்டுடனும் ஜனனி.. இங்க பக்கத்துல உட்காருங்கன்னு சொல்றான்.

பக்கத்தில் அமர
ஜனனி பக்கத்தில் அமர, அவளிடம் திருமண ஆல்பத்தை காண்பித்து பேசறான். ஜனனி. அப்புறம்.. நீங்க போக வேணாம் ஜனனி இங்கேயே இருந்துருங்க... இப்போ எப்படி இருக்கோ அப்படியே போகட்டும்னு சொல்றான்.

கை வச்சு
ஜனனி சந்தோஷின் நெத்தியில் கை வச்சு பார்க்கறா.. உடம்பு ஒன்னும் சரியில்லையா... இல்லியே நல்லாத்தானே இருக்கேன்னு சொல்றான் சந்தோஷ். இல்லை... எப்பவும் இல்லாம இன்னிக்கு இவ்ளோ தத்துவமா பேசறீங்களே அதான்னு சொல்றா...

சீரியஸா பேசினா
பார்த்தீங்களா சீரியஸா பேசினா.. ஜோக் பண்றீங்க.ன்னு சந்தோஷ் சொல்ல.. சரி படுங்கன்னு சொல்லிட்டு, படுக்கையை விரித்துப் போட்டு கீழே படுக்கறா ஜனனி.படுத்திருக்கும் அவளையே பார்த்துக்கொண்டு இருக்கான் சந்தோஷ்.

சந்தோஷை
படுத்தபடியே ஜனனியும் சந்தோஷை பார்த்துகிட்டு இருக்கா...தூக்கம் வந்துவிட, ஜனனி அந்த லைட்டை நிறுத்திருங்க ஜனனின்னு சொல்றான். அங்க ஜனனி இல்லை... இதுவரை அவன் கற்பனையில் இதெல்லாம் நினைச்சு இருக்கான்.

கீழே ஜனனி
பிறந்த வீட்டிலும் ஜனனி தங்கையுடன் கட்டிலில் படுக்காமல், கீழே படுத்துக்கறா. அவளுக்கு சில நினைவுகள்.. திடீரென சந்தோஷ் போன் செய்யறான். அதை கட் பண்ணி விடுகிறாள் ஜனனி. அடுத்து சாப்டீங்களான்னு மெசேஜ்... ம்ம்ம்.. என்று மட்டும் ஜனனி பதில்..ஒண்ணுமே பேசாமல் அவன் வெறும் மெசேஜ் அனுப்ப. இவள் குட்நைட் என்று முடிச்சுக்கறா.
ஒரு இதமான காதல் கதையை படமாக பார்ப்பது போலத்தான் இருக்கு திருமணம் சீரியல்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications