For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உங்க வாசம் ரொம்ப பிடிச்சிருக்குங்க.. என்னங்க சொல்றீங்க ஜனனி.. உருகி வழியும் காதல்!

Google Oneindia Tamil News

சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியல் கதை நல்ல கதை. ஆனா, இவ்ளோ மெதுவா நகர்த்தணும்னு என்ன அவசியமோ தெரியலை. ஆமை வேகம்..

விஜய் டிவிதான் இந்த பாணியை முதலில் ஆரம்பிச்சு வச்சாங்க.. தேவை இல்லாம க்ளோசப் காட்சிகள்..ஒரு வசனத்தை பேசினத்துக்கு, குடும்பத்தில் உள்ள மொத்த பேரின் உணர்வுகளின் முக ரீ ஆக்ஷனை தனித்தனியாக க்ளோசப்பில் காண்பிப்பதுக்குள் ஒரு எபிசோட் முடிஞ்சுருது.

அப்புறமென்ன கதையும் விடிஞ்சுருது... எல்லா சேனலையும் பே சேனலாக்கிட்டு, மொத்த நேரத்தையும் விரயம் பண்றது இவங்களுக்கு கை வந்த கலையா இருக்கு. விஜய் டிவி பாணியை காப்பி அடிச்சுத்தான் ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் சேனல்கள் சீரியல்கள் எடுக்கின்றன.

ஸ்வேதாவுக்கு பிட்டு போடறான் சஞ்சய்.. நிலா கூட வாழ்வானா? ஸ்வேதாவுக்கு பிட்டு போடறான் சஞ்சய்.. நிலா கூட வாழ்வானா?

குருஜி

குருஜி

குடும்பம் நல்லா இருக்கணும்னு ஆஸ்ரமத்துக்கு போயி, குருஜி நடத்தும் பூஜையில் கலந்துக்க சந்தோஷ் குடும்பம் முடிவு செய்யறாங்க. அதன் படி காலையில எல்லாரும் கிளம்பணும்... இரவு சந்தோஷின் துணிகளை அயர்ன் செய்து வச்சுடறா ஜனனி. எதுக்கு ஜனனி இந்த வேலை எல்லாம் செய்யறீங்க.. இது என்னோட வேலைதானே ஜனனின்னு சொல்றான்.

உங்க புடவையை

உங்க புடவையை

இதுல என்ன இருக்குங்க..இதுவும் என் வேலைதான்னு சொல்றா ஜனனி. அப்போ இருங்கன்னு சொல்லி ஜனனி பீரோவைத் திறந்து அவ புடவைகளை மடிச்சு வைக்கறான். ஜனனிக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சியா இருக்கு. உங்களுக்கு தெரியும்தானே.. கல்யாணம் செய்த அன்னிக்கே இவங்க டிவோர்ஸ் செய்ய முடிவு பண்ணிட்டாங்கன்னு. காரணம் சந்தோஷ் சக்தின்னு ஒரு பொண்ணை காதலிச்சு இருந்திருக்கான்.

சந்தோஷின் மேல்

சந்தோஷின் மேல்

காரில் ஆஸ்ரமத்துக்கு கிளம்பும் போது ரொம்ப தூர பயணத்தில் சந்தோஷின் தோளில் சாய்ந்து தூங்கிடறா ஜனனி. ஆஸ்ரமம் வந்தவுடன் சந்தோஷ் ஜனனியை எழுப்ப, ஜனனி விழிக்கும்போது, சந்தோஷின் தோளில் இருக்கா. சாரின்னு சொல்லிட்டு விலகிக்கறா.. ஆஸ்ரமத்துல 3 ரூம்தான் இருக்குன்னு சொல்றாங்க. சந்தோஷ், ஜனனிக்கு ஒரு ரூம், சந்தோஷின் நண்பன், அப்பா, தம்பிக்கு ஒரு ரூம், சந்தோஷ் தங்கச்சி, அண்ணி, அண்ணியின் தங்கைக்கு ஒரு ரூம்னு முடிவு செய்யறாங்க. நான் ஃபிரஷ் ஆயிட்டு வரேன் ஜனனின்னு சந்தோஷ் போயிட்டு வர்றான்.

வாசம்

வாசம்

நீங்க ஃபிரஷாகுங்க ஜனனி.. நான் வெளியில இருக்கேன்னு சொல்லிட்டு சந்தோஷ் போக, இவளுக்கு புடவையை மாத்திக்க மனமில்லை. காரணம் என்னன்னு பார்த்தா, அந்த புடவையில் சந்தோஷின் வாசம் வீசுது. அவன் மேல் சாஞ்சுகிட்டு வந்தா இல்லையா...அதான்.

புடவை புடிச்சுருக்கு

புடவை புடிச்சுருக்கு

என்ன ஜனனி அப்படியே இருக்கீங்கன்னு கேட்கறான்.. இல்லை உங்களோட இந்த வாசம் புடிச்சிருக்குன்னு சொல்றா. வாசமா.. என்ன வாசம்னு அவன் கேட்க, இந்த ரூமோட வாசம் நல்லாருக்கு இல்லைன்னு கேட்கறா...ஓ..சரி புடவையாவது மாத்திக்கலாம்ன்னு அவன் கேட்க.. இல்லைங்க இந்த புடவை எனக்கு ரொம்ப புடிக்கும்னு சொல்றா.

ஒரு நிமிஷத்துல

ஒரு நிமிஷத்துல

வாழ்க்கையை சூழ்நிலை ஒரு நிமிஷத்துல புரட்டி போட்டுடுது இல்லைங்கன்னு சொல்றா ஜனனி. ஆமாங்க.. வாழ்க்கை பல நேரத்துல ஒரு நல்ல ஆப்ஷனைத்தான் நமக்கு கொடுக்கும். அது நம்ம நினைச்சதை விட பெட்டராத்தான் இருக்கும். நாம்தானே அதை புரிஞ்சுக்கறதில்லைன்னு பூடகமா ரெண்டு பேரும் பேசிக்கறாங்க.

சொன்னாத்தான் அது காதல்.. ரெண்டு பேரும் மனசுல இருக்கறதை சீக்கிரம் பேசிக்குங்களேன்.. ஏற்கனவே கதை ஆமை வேகம்.. இதுல நீங்க வேற!

English summary
Let's say it's love .. Speak quickly in both minds. slow Story telling speed of story already ..
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X