முதல்வர் மகன் ஜேசன் சஞ்சயின் சிக்மா ரிலீஸ் தேதி வந்தாச்சு.. ப்ரோமோஷனுக்கு வரும் விஜய்- சங்கீதா? ட்விஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகம் ஆகும் சிக்மா படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அக்டோபர் 2 என அறிவிக்கப்பட்டுள்ளது. காந்தி ஜெயந்தி அன்று இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் இதன் பிரமோஷனில் விஜய் மற்றும் சங்கீதா கலந்து கொள்வார்களா? என்பது தான் ரசிகர்களின் அடுத்த எதிர்பார்ப்பாக மாறி இருக்கிறது.

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகும் படம் என்பதால் ஆரம்பத்தில் இருந்து அந்த படத்தை பற்றி எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. லைக்கா புரொடெக்ஷன் தயாரிக்கும் சிக்மா படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கிறார். பிரியா அப்துல்லா கதாநாயகியாக நடிக்க தமன் இசை அமைக்கிறார். ஆக்சன், அட்வென்ச்சர், காமெடி போன்ற பல அம்சங்கள் கலந்த படமாக இது உருவாகி இருக்கிறது.

விஜய் மகன்

ஏற்கனவே இந்த படத்தை ஜூலை 31ஆம் தேதி வெளியிட திட்டமிட்ட லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. ஆனால் அதே காலகட்டத்தில் விஜய் நடித்த ஜனநாயகன் ஜூலை 23ஆம் தேதி வெளியாக்கியதால் சினிமா ரிலீஸ் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் செப்டம்பர் மாதத்தில் படம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி தினத்தில் சினிமா திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Jason Sanjay vijay

சிக்மா படம் ரிலீஸ் தேதி

இங்கேதான் இந்த ரிலீஸ் தேதிக்கு ஒரு சுவாசமான பின்னணி இருக்கிறது. விஜய் தனது பயணத்தில் கடைசி படமாக ஜனநாயகன் படத்தில் நடித்திருக்கும் நிலையில் அவரது மகன் ஜேசன் சஞ்சய் அதே ஆண்டில் தனது முதல் படத்தை இயக்குனராக திரைக்கு கொண்டு வருகிறார். அதுவும் நடிகராக இல்லாமல் இயக்குனராக தனது முதல் அடியை எடுத்து வைத்திருப்பது ஜேசன் தனிப்பட்ட முடிவாக பார்க்கப்படுகிறது.

இப்போ கூட அப்பா இதைத்தான் சொன்னாரு.. அம்மாவுக்கும் சந்தோசம் தான்! விஜய் பற்றி மகன் ஜேசன் சஞ்சய் பெருமிதம்
வெளிநாட்டில் திரைப்பட உருவாக்கம் மற்றும் திரைக்கதை தொடர்பான படிப்பை முடித்து அவர் 2023 புல் த டைகர் என்ற குறும்படத்தை இயக்கியிருந்தார். சினிமாவில் விஜய் நடிக்கவில்லை ஆனால் படத்தின் பின்னணியில் விஜய்யின் மகன் என்று இருக்கும் பெயர் காரணமாக இது விஜய் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நேரத்தில் ரசிகர்களின் மிகப்பெரிய கேள்வி ஜேசன் சஞ்சய்யின் முதல் படத்திற்கு விஜய் நேரடியாக ப்ரமோஷனுக்கு வருவாரா? என்பதுதான்.

Jason Sanjay vijay

ஜேசன் சஞ்சய் பேட்டி

ஏற்கனவே ஜேசன் கொடுத்த பேட்டியில் தன்னுடைய அப்பாவை பற்றி பெருமையாக பேசிவிட்டார். இதனால் விஜய் ப்ரமோஷனுக்கு வந்தால் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்று பலரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். அதே போல விஜய் மனைவி கொடுத்த விவாகரத்து வழக்கையும் வாபஸ் வாங்கி விட்டார். தன்னுடைய அப்பாவிற்கு கிடைத்த வரலாற்று வெற்றி தனக்கும், தன்னுடைய குடும்பத்திற்கும் பொறுப்பை கொடுத்திருக்கிறது.. அதனால் அப்பாவிற்கு கலங்கம் வராத வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்று தானும் தன்னுடைய தங்கையையும், குடும்பத்தினரும் பொறுப்புடன் நடந்து கொள்வதாக ஜேசன் கூறியிருந்தார்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

அதே பொறுப்பு விஜய் மற்றும் சங்கீதா இருவருக்கும் இருக்குமா? என்பதுதான் இப்போது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. தன்னுடைய மகனைப் பற்றி சமீப காலமாக பேசாமல் தவிர்த்து வரும் விஜய் அவருடைய முதல் படத்தின் ப்ரோமோஷனில் வந்து பேசுவாரா? என்ற கேள்வி பலருக்கு இருக்கிறது. அக்டோபர் மாதம் இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் அதற்கு முன்பு செப்டம்பர் மாதத்திலேயே ப்ரோமோஷன் அதிகமாக இருக்கும். ஏற்கனவே போன மாதத்தில் இருந்து ப்ரோமோஷன் தொடங்கி இருந்தாலும் அடுத்த மாதம் நடைபெறும் ஆடியோ லான்ச் தான் அனைவருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனாலும் என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+