உருண்டு பிரண்டாலும்.. கல்பனா ஹவுஸில் சிக்கிய ஜெயம் ரவி.. நல்ல மனுஷனை ஓடவிட்டு நீலிக்கண்ணீர்: பிரபலம்
சென்னை: வருமானத்தையும் பிடுங்கிக்கிட்டு, 6 கோடி கடனையும் ஜெயம்ரவி மீது தூக்கிபோட்டு, பெற்றோரையும் பார்க்க விடாமல், சுதந்திரத்தையும் பறித்து, குழந்தைகளையும் பார்க்க விடாமல், எத்தனை நாளைக்கு இப்படி செய்ய முடியும்? கைதித்தனமான வாழ்க்கையை யாருமே விரும்ப மாட்டார்கள் என்கிறார் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு.
AramNaadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு "மாமியார் கொடுமைக்கு ஆளானார் ஜெயம் ரவி.. கணவன் மனைவி எடுக்க வேண்டிய முடிவுகளை மாமியார்தான் எடுத்துள்ளார்.. மனைவியிடம் கிடைக்காத அன்பும், ஆதரவும் கெனிஷாவிடம் ஜெயம் ரவிக்கு கிடைத்துள்ளது. பொன் முட்டையிடும் வாத்து, கூடாரத்தை விட்டு ஓடிவிட்டது.. இன்று அந்த வாத்து வேறு கூடாரத்தில் சரணடைந்துவிட்டது.

நீலிக்கண்ணீர் வடித்து இழந்த வாழ்க்கையை திரும்ப பெற வேண்டும் என்று நினைக்கிறார்கள்.. அழுது உருண்டாலும், உருண்டு பிரண்டாலும் மாண்டோர் மாண்டோர்தான். அதுபோல் ஜெயம் ரவிக்கும் ஆர்த்திக்கும் இருந்த காதல் செத்துப்போய்விட்டது. இனிமேல் அதற்கு உயிர் தர முடியாது.
கல்பனா ஹவுஸ்
அவர்களின் திருமண வாழ்க்கையில், நாம் இந்த அளவுக்கு அழுத்தமாக கருத்து சொல்வது தவறாக இருக்கலாம். ஆனால், எனக்கு சில விஷயங்கள் தெரியும்.. அந்த அளவுக்கு ஜெயம் ரவி காயப்படுத்தப்பட்டார். தாய் தகப்பனை பார்க்க அவருக்கு அனுமதி தர மறுக்கப்பட்டது, பேரக்குழந்தைகளை பார்க்க ஜெயம் ரவியின் பெற்றோருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
சுஜாதா விஜயகுமார், ஆர்த்தி என்ற கட்டுப்பாட்டுக்குள், கல்பனா ஹவுஸ் என்ற காம்பவுண்டுக்குள் சென்றதுமே, ஜெயம் ரவி மூலம் வரும் மொத்த பணத்தையும் தாங்களே சம்பாதித்து கொள்ள வேண்டும் என்ற குறுகிய மனப்பான்மைக்கு வந்துவிட்டது.
தனி ஒருவன் பாகம் 2
தனி ஒருவன் பாகம் 2 எடுப்பதற்கு, ஜெயம் ரவியின் தேதி வாங்க, அவரது சொந்த அப்பாவே 6 வருடமாக போராடுகிறார்..
அப்பாவுக்கு உதவி செய்ய ஜெயம்ரவியும் விரும்புகிறார்.. ஆனால், அவர் தடுக்கப்படுகிறார். சந்தேகப்பார்வையுடன் ஜெயம் ரவியை பார்த்தே துன்புறுத்தப்பட்டார். சாப்பிட, தூங்க, ரெஸ்ட் எடுக்கக்கூட மனைவியின் பர்மிஷன் தேவையா?
கணவனுடன் கருத்து வேறுபாடு என்றால், குழந்தைகளை கருவியாக பெண்கள் பயன்படுத்துகிறார்கள்.. ஓட ஓட விரட்டிட்டு, இன்றைக்கு ஒப்பாரி வைக்கிறார்கள்.
கெனிஷா வாழ்க்கை துணை
ஆர்த்தியை பிரிவதுதான், அடுத்த வாழ்க்கை என்று ஜெயம் ரவி தீர்க்கமாக முடிவுக்கு வந்துவிட்டார். இனி மிச்சமிருக்கும் வாழ்க்கை சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். கெனிஷா ஆறுதலாகவும், அன்பாகவும் இருப்பதால், அந்த கூடாரத்தில் சரணடைந்துவிட்டார்.
என்னுடைய வாழ்க்கை துணை இனி கெனிஷாதான் என்று சொல்கிறார். எந்த அளவுக்கு காயப்பட்டிருந்தால், இன்று உடைத்து பேசியிருப்பார்? ஆனால், ஜெயம் ரவி பற்றி தவறான வதந்திகளும் பரப்பப்படுகிறது.. உண்மையிலேயே அவர் நல்லவர்.. 25 வருடமாக சினிமாவில் அப்பழுக்கற்றவர்...
ஆனாலும் குடும்பத்தில் கொடுமைப்படுத்தப்பட்டார்.. சொந்தமாக பேங்க் அக்கவுண்ட்கூட ஜெயம் ரவிக்கு இல்லால், அவரை தனித்து செயல்பட விடாமல் முடக்கி வைத்திருந்தார்கள்..
காசு காசு காசு
ஜெயம் ரவியை வைத்து, அடங்க மறு என்ற படத்தை வேறு ஒரு தயாரிப்பாளர் எடுக்க முன்வந்தால், ஜெயம் ரவியின் மாமியாருக்கு அங்கேயும் காசு ஆசை வந்தது. எல்லாத்திலும் காசு, காசு, காசு..!!
வருமானத்தையும் பிடுங்கிக்கிட்டு, 6 கோடி கடனையும் ஜெயம்ரவி மீது தூக்கிபோட்டு, பெற்றோரையும் பார்க்க விடாமல், சுதந்திரத்தையும் பறித்து, குழந்தைகளையும் பார்க்க விடாமல், எத்தனை நாளைக்கு இப்படி செய்ய முடியும்? கைதித்தனமான வாழ்க்கையை யாருமே விரும்ப மாட்டார்கள்.
நல்ல மனுஷனை எல்லா விதத்திலும் காயப்படுத்தி, காயப்படுத்தி ஓடவிட்டது ஆர்த்தியும், சுஜாதா விஜயகுமாரும்தான்.. ஜெயம் ரவி நல்ல மனிதன், அதிலும் ஈரமுள்ள மனிதன்" என்று தெரிவித்துள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications