40 லட்சம் ஜீவனாம்சம் கேட்ட ஆர்த்தி.. கலாய்த்து ரவி மோகன் போட்ட போஸ்ட்.. இந்த பிரச்சனை முடியாது போல!
சென்னை: நடிகர் ரவி மோகன் (ஜெயம் ரவி) தன்னுடைய மனைவியை பிரிவதாக கடந்த வருடத்தில் அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து இவர்களுடைய விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இன்று விசாரணையின் போது ரவி மோகன் மனைவி ஆர்த்தி தரப்பிலிருந்து 40 லட்சம் மாதம் ஜீவனாம்சமாக தரவேண்டும் என்று கூறப்பட்டதாக கூறப்படுகிறது. இதை கலாய்க்கும் வகையில் ரவி மோகன் தன்னுடைய insta பக்கத்தில் பகிர்ந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் ரவி மோகனின் குடும்ப பிரச்சினை தான் சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்பட்டு கொண்டிருக்கிறது. கடந்த வருடத்தில் ரவி மோகன் தன்னுடைய மனைவி ஆர்த்தியை பிரியப்போதாக அறிவித்திருந்தார். அதற்கு ஆர்த்தி மறுப்பு தெரிவித்து இருந்தார். ஆனால் ரவி மோகன் விவாகரத்து வழக்கு தொடர்ந்து இருந்த நிலையில் அது நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

குடும்ப அறிக்கை
இந்த நிலையில் கடந்த வாரத்தில் ரவி மோகன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவருடைய தோழி கெனிஷாவுடன் ரவிமோகன் வந்திருந்ததால் கோபமான ஆர்த்தி ரவி ஒரு நீண்ட அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்கு பதில் கொடுப்பது கொடுத்து ரவி மோகன் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து ஆர்த்தி நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.
ரசிகர்களின் கருத்து
மாறி மாறி இவர்களுக்குள் அறிக்கை வெளியாகி பரபரப்பு ஏற்பட்டு கொண்டிருக்கிறது. என் மீது தப்பில்லை என்று இருவரும் மாறி மாறி கூறிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் இவர்களில் யார் சரி, யார் தப்பு என்பது இணையத்தில் அதிகமாக பேசப்படுகிறது. சிலர் ரவி மோகன் மீது தப்பே இல்லை என்று சொல்கிறார்கள். இன்னும் ஒரு சிலர் ரவி மோகன் தோழி கெனிஷாவுடன் பழகுவதால் தான் அவர்களுடைய குடும்பத்திற்குள் பிரச்சனை என்று கூறி வருகிறார்கள்.
ஆர்த்தி ரவி கேட்ட ஜீவனாம்சம்
சிலர் ஆர்த்தி மீது குற்றச்சாட்டுகள் வைத்து வருகிறார்கள். இப்படியாக இவர்களுடைய குடும்ப பிரச்சனை பலர் பேசும் விவாத பொருளாக மாறி இருக்கும் நிலையில் இன்று இவர்களுடைய விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது ஆர்த்தி சார்பாக விவாகரத்து வழங்குவதற்கு மாதத்திற்கு 40 லட்சம் ஜீவனாம்சமாக கேட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் ஆர்த்தி ரவி தன்னிடம் பணம் கேட்டதை கிண்டல் செய்யும் விதமாக ரவி மோகன் ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறார்.
ரவி மோகன் போஸ்ட்
அதாவது போனில் பேசுவது போல ரவி மோகன் போட்டோஸ் போட்டு இருக்கிறார். அதோடு "தகவல் வந்து சேர்ந்தது" என்றும் கூறியிருக்கிறார். இதனால் ரசிகர்கள் இது ஆர்த்திக்கு ரவி கொடுக்கும் பதில் என்று கிண்டல் செய்து வருகிறார்கள். ஏற்கனவே ரவி மோகன் ஆர்த்தி, ஆர்த்தியின் அம்மா, ரவி மோகன் தோழி என்று அடுத்தடுத்து அறிக்கைகளை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் இப்போது ஆர்த்தியை வெறுப்பேற்றும் விதமாக ரவி மோகன் போட்ட போஸ்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை தொடர்ந்து இனி ஆர்த்தி தரப்பிலிருந்து என்ன பதிவு வரப்போகிறது என்று தெரிந்து கொள்வதற்காக ரசிகர்களும் ஆர்வத்தோடு இருக்கிறார்கள்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications