முன்னிலை வகிக்கும் விஜய்.. கண் கலங்க வீடியோ வெளியிட்ட ஜீவா.. நக்கல்தான்யா இவருக்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் களம் இதுவரை இல்லாத அளவுக்கு சூடுபிடித்துள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் (தவெக) பல தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவது. அரசியல் வட்டாரங்களில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்ட கட்சி இவ்வளவு வலுவான நிலையைப் பெறுவது தமிழக அரசியல் வரலாற்றிலேயே ஒரு முக்கியமான திருப்பமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஜய் கட்சி குறித்து ஜீவா வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Jiiva Vijay TN Election 2026 Viral Video Kollywood

நடிகர் ஜீவா வீடியோ

திரையுலக நண்பர்களும் விஜய்யின் முன்னேற்றத்தை கொண்டாட தொடங்கியுள்ளனர். குறிப்பாக நடிகர் ஜீவா வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. விஜய் வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார் என்ற தகவலை அறிந்த அவர், உற்சாகமாக விசில் அடித்து கொண்டாடும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. அதோடு, கண்களில் நீர் வருவது போல எமோஷனலாக அவர் வெளிப்படுத்திய ரியாக்ஷன் ரசிகர்களை மேலும் பாதித்துள்ளது.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், "இது ஒரு நண்பனின் உண்மையான சந்தோஷம்" என்று கருத்து தெரிவித்து, சமூக வலைதளங்களில் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். விஜய்யுடன் நீண்ட கால நட்பு வைத்திருக்கும் ஜீவா, இந்த வெற்றியை தனிப்பட்ட மகிழ்ச்சியாக எடுத்துக் கொண்டது போல அவரது செயல்பாடு தெரிகிறது என்று பலரும் கூறுகின்றனர்.

கையில் கயிறு குறியீடு

ஏற்கனவே வாக்கு செலுத்துவதற்காக வந்த ஜீவா அவருடைய கையில் தவெக கட்சியின் கொடியை போலவே கயிறு கட்டி இருந்தார். அது அந்த நேரத்திலே பேசப்பட்டது. அதேபோல இப்போது விஜய் முன்னிலை வகித்ததும் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்

எஸ் ஏ சந்திரசேகர் பேட்டி

அரசியல் பரபரப்புடன் சேர்ந்து, விஜய்யின் குடும்பத்திலும் கொண்டாட்டம் தொடங்கியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர், "தமிழ்நாட்டுக்கு ஏதாவது செய்யணும்னு விஜய் நீண்ட காலமாக நினைத்தார், இன்று அது நனவாகப் போகிறது" என்ற அவரது உணர்ச்சி வசப்பட்ட பேட்டி ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

வீட்டுக்குள்ளும் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. விஜய்யின் தாய் ஷோபா மற்றும் உறவினர்கள் அனைவரும் சேர்ந்து விசில் அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு, விஜய்யின் பாடலை பாடி கொண்டாட்டத்தை உற்சாகமாக மாற்றியுள்ளனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரபலங்கள் வாழ்த்து

இதற்கிடையில், நடிகர்கள், இசையமைப்பாளர்கள், பல பிரபலங்களும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சினிமா உலகமே தற்போது விஜய்யின் அரசியல் முன்னேற்றத்தை ஒரு பெரிய சாதனையாக கொண்டாடுகிறது. "அண்டர்டாக் வெற்றி" என்ற கோணத்தில் பலரும் இந்த நிலையை பார்க்கின்றனர்.

மற்றொரு பக்கம், வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து மாற்றமடைந்து கொண்டே இருப்பதால், அரசியல் பரபரப்பும் குறையாமல் நீடிக்கிறது. ஒவ்வொரு தொகுதியிலும் வெளியாகும் அப்டேட்கள் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களையும் ஆவலுடன் காத்திருக்க வைக்கிறது.

மொத்தத்தில், ஒரு பக்கம் அரசியல் வெற்றியின் நெருக்கடி, மற்றொரு பக்கம் குடும்ப மற்றும் நண்பர்கள் கொண்டாட்டம் இந்த இரண்டும் சேர்ந்து தற்போது தமிழகத்தில் ஒரு உணர்ச்சி மிகுந்த சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. விஜய்யின் நீண்ட நாள் கனவு நனவாகும் தருணம் அருகில் இருக்கிறது என்ற உணர்வு, அவரை சுற்றியுள்ள அனைவரிடமும் தெளிவாக தெரிகிறது. இறுதி முடிவுகள் வெளியாகும் வரை இந்த பரபரப்பு மேலும் அதிகரிக்கும் என்பது உறுதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+