பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஜோவிகா என்ன செய்கிறார் தெரியுமா? அவரை சந்தித்த முக்கிய பிரபலம்?
சென்னை: பிக்பாஸ் ஜோவிகா வீட்டிற்கு திடீரென ஒருவர் சர்பிரைஸ் விசிட் கொடுத்துள்ளார். அது குறித்த புகைப்படத்தை வனிதா விஜயகுமார் தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆரம்பம் முதலே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் ஒரு சிலரை தவிர எல்லாருமே கன்டென்ட் கொடுப்பவர்களாகவே இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் பிரதீப் ஆன்டனி.

இவர் டைட்டில் வின்னராக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் சில நேரங்களில் பேசிய கெட்ட வார்த்தைகள் உள்ளிட்டவைகளை கூறி பெண்களுக்கு பாதுகாப்பில்லை என உரிமைக் குரலை எழுப்பி பிக்பாஸ் போட்டியாளர்கள் அவரை வெளியேற்றும் நிலைக்கு தள்ளிவிட்டனர்.
இவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டதால் நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கல்வி குறித்து பேசி அப்லாஸ் வாங்கிய ஜோவிகா கடைசி வரை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என சொல்லப்பட்டது.
பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்காதது, யாருடனாவது மல்லுக்கு நிற்பது, புல்லியிங் கேங்குடன் இணைந்து இருப்பது என ஜோவிகா இருந்ததால் அவருக்கு சமூகவலைதளங்களில் பலர் கண்டனங்களை தெரிவித்திருந்தனர். மேலும் வனிதாவை இப்படியா பொண்ணை வளர்ப்பீர்கள் என பலர் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்த நிலையில் வனிதா விஜயகுமார் பிக்பாஸ் நிகழ்ச்சி ஷூட்டிங் முடித்துக் கொண்டு வெளியே வந்த போது அவரது முகத்தில் பிரதீப் ஆதரவாளர் என கூறிக் கொண்டு மர்மநபர் குத்து விட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வனிதா போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் நிகழ்ந்த நாள் முதல் ஜோவிகாவுக்கு கெட்ட கெட்ட கனவு வந்ததால் அவர் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் ஒரு கட்டத்தில் என் அம்மாவை பார்க்க வேண்டும் என போட்டியாளர்களிடம் அழுதார். இந்த நிலையில் அடுத்த வாரமே ஜோவிகா பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். இந்த நிலையில் ஜோவிகா இயக்குநர் பார்த்திபனிடம் உதவி இயக்குநராக சேர்ந்துவிட்டார். ஏற்கெனவே தனக்கு படிப்பு வரவில்லை என்பதால் அவர் பார்த்திபனிடம் உதவி இயக்குநராக சேர்ந்தார்.
திடீரென பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான வாய்ப்பு வந்ததால் அவர் அந்த பணியை பாதியிலேயே விட்டுவிட்டு சென்றார். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு என்ட்ரியில் வந்த பிராவோ, எவிக்ட் ஆன நிலையில் ஜோவிகாவின் வீட்டிற்கு போய் அவரை சந்தித்துள்ளார். இந்த புகைப்படத்தை வனிதா விஜயகுமார் வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications