மாதம்பட்டி ரங்கராஜ் அறிவிப்புக்கு பிறகு ஜாய் கிரிசில்டா போஸ்ட்.. என் கண்ணீரை யாரும் பார்க்கவில்லை என உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த சில மாதங்களாக பெரும் சர்ச்சையை கிளப்பிய ஜாய் கிரிசில்டா - மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரத்தில் ஒரு புது திருப்பம் வந்திருக்கிறது. ஜாய் கிரிசில்டாவின் மகன் ராகா ரங்கராஜ் என்னுடைய மகன் என்று மாதம்பட்டி ரங்கராஜன் நேற்று ஒரு போஸ்ட் வெளியிட்டு இருந்தார். தொடர்ந்து ஜாய் இன்று உருக்கமான ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அது அதிகமான லைக் பெற்று வருகிறது.

ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா சில மாதங்களுக்கு முன்பு, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாகவும் தன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு அப்பா மாதம்பட்டி ரங்கராஜன் என்று வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு பல மாதங்களாக நடந்து வந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராஜன் ஜாய் குழந்தை என்னுடையது என்று நிரூபணம் ஆனால் அந்த குழந்தையை கவனித்துக் கொள்வேன் என்று ஒரு போஸ்ட் போட்டு இருந்தார். பிறகு டிஎன்ஏ டெஸ்டில் அந்த குழந்தை மாதம்பட்டி ரங்கராஜனின் குழந்தை என்று நிரூபணம் ஆனது.

மாதம்பட்டி ரங்கராஜன் பதிவு

இப்படியான நிலையில் நேற்று மாதம்பட்டி ரங்கராஜன் தன்னுடைய குழந்தையை கொஞ்சியப்படி ஒரு போட்டோவை போஸ்ட் போட்டு இருந்தார். அதில் தன்னுடைய மகன் ராகா ரங்கராஜின் எதிர்காலத்திற்கு முழு பொறுப்பையும் ஏற்றுக் கொள்வதாகவும் அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து ஜாய் ஒரு போஸ்ட் வெளியிட்டு இருக்கிறார்.

அந்த பதிவில், பல மாதங்களாக கண்ணீர், தூக்கமில்லாத இரவுகள், முடிவில்லாத கேள்விகள்.... ஒரு தாயால் மட்டுமே முழுமையாக புரிந்து கொள்ளக்கூடிய போராட்டத்திற்கு பிறகு இறுதியாக என்னுடைய மகனுக்கு ஒவ்வொரு குழந்தைக்கும் கிடைக்க வேண்டிய உரிமையான அடையாளமும் பொதுவெளியின் அங்கீகாரமும் கிடைத்துவிட்டது. உலகம் பார்த்தது என் சிரிப்பை மட்டும் தான். ஆனால் நான் சிரித்த ஒவ்வொரு முறைக்கும் பின்னால் ஆயிரம் கண்ணீர்கள் மறைந்திருந்தன.

Joy Crizilda Madhampatty Rangaraj vijay tv

ஜாய் கிரிசில்டா பதிவு

மக்கள் செய்தி தலைப்புகளை பார்த்தார்கள், சமூக வலைத்தளங்களில் வந்த கருத்துக்களை பார்த்தார்கள். ஆனால் அமைதியாக தனியாக அழுத ஒரு தாயை யாரும் பார்க்கவில்லை. தன்னையே மீண்டும் மீண்டும் கேள்வி கேட்ட அந்த தாயை யாரும் பார்க்கவில்லை. தனது மகனுக்காக ஒவ்வொரு முறையும் மீண்டும் எழுந்து நின்ற அந்த தாயின் வலியை யாரும் உணரவில்லை. என்று உடைந்த எமோஜி பகிர்ந்திருக்கிறார்.

மேலும் அந்த பதிவில், இந்தப் போராட்டம் யார் வெற்றி? யார் தோல்வி? என்பதை நிரூபிக்க அல்ல. யாரையும் தோற்கடிக்கவும் அல்ல, ஒரு குழந்தைக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம், அன்பு, பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே நான் போராடினேன். என் மகன் ராகா ரங்கராஜ் ஒருநாள் எழுந்து என்னுடைய மதிப்பு என்ன? என்று தன்னை தானே கேள்வி கேட்கக் கூடாது என்பதற்காகத்தான் இந்த போராட்டம் நடந்தது.

மகனுக்காக போராட்டம்

இந்த உலகத்தில் உனக்கும் அன்பு கிடைக்க தகுதி இருக்கிறது, மரியாதை கிடைக்க தகுதி இருக்கிறது, உனக்கு உரிய இடம் கிடைக்க தகுதி இருக்கிறது என்பதை எந்த சந்தேகமும் இல்லாமல் என் மகன் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினேன். இந்த சின்ன குழந்தை நான் யார் என்ற கேள்வியோடு வளரக்கூடாது என்பதற்காகவே இந்த பயணம். இன்று உனக்கு நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன். ஒரு தாய் தனது மகனிடம் கொடுத்த வாக்குறுதி அது.

வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருந்தாலும் உனக்கு கிடைக்க வேண்டியதை பெற்று தர நான் ஒருபோதும் போராடுவதை நிறுத்த மாட்டேன் என்பதுதான் அந்த வாக்குறுதி. பல மாதங்களாக வார்த்தைகளால் விவரிக்க முடியாத வலியை சுமந்து வந்த பிறகு இன்று என் மனம் இறுதியாக அமைதி அடைந்து விட்டது என்று சொல்லி இருக்கிறார்.

உருக்கமான பதிவு

அதுமட்டுமல்லாமல் இன்று நான் கொண்டாடுவது ஒரு சமூக வலைதள பதிவை அல்ல. என் மகனின் அடையாளத்தை கொண்டாடுகிறேன். அவனுடைய எதிர்காலத்தை கொண்டாடுகிறேன். ஒவ்வொரு குழந்தைக்கும் கிடைக்க வேண்டிய மன நிம்மதியை கொண்டாடுகிறேன். என் வாழ்க்கையின் மிகப்பெரிய சாதனை என்ன என்று யாராவது கேட்டால் அது புகழோ, வெற்றியோ, அங்கீகாரமோ இல்ல. என் மகனிடம் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றினேன் என்பதுதான். இன்று இத்தனை வலிகளுக்கு பிறகு இறுதியாக அன்பு வெற்றி பெற்று இருக்கிறது என்று தன்னுடைய பதிவை ஜாய் நிறைவு செய்து இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+