ஜாய் கிரிஸில்டா வெளியிட்ட அறிக்கை.. தப்பித்த விஜய் டிவி பிரபலம்! ஓபனாகவே சொல்லிட்டாரே
சென்னை: ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா வெளியிட்ட அறிக்கை சோசியல் மீடியாவில் கவனத்தை ஈர்த்து வருகிறது. அவர் பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில் அது குறித்து தான் அவர் விளக்கம் கொடுத்திருக்கிறார். எனக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது, ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு போகவில்லை என்று அந்த அறிக்கையில் சொல்லி இருக்கிறார். இவர் இப்படி சொன்னது விஜய் டிவி பிரபலம் ஒருவருக்கு தான் மகிழ்ச்சியை கொடுத்திருக்கும் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
தப்பித்த குரோஸி
அது வேறு யாரும் இல்லை குரோஷி தான். குரோஷியும் பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது. அதே நிகழ்ச்சியில் ஜாய் கலந்து கொண்டால் சரியான சம்பவம் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இப்போ அவர்களுக்குத்தான் இது ஏமாற்றத்தை கொடுத்திருக்கும். காரணம் மாதம்பட்டி ரங்கராஜன் ஜாய் கிரிஸில்டா சர்ச்சை அனைவருக்குமே தெரிந்தது தான்.
மாதம்பட்டி ரங்கராஜன் ஜாய் சர்ச்சை
தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டார் என மாதம்பட்டி ரங்கராஜன் மீது ஜாய் புகார் கொடுத்திருந்தார். அதுபோல மாதம்பட்டி ரங்கராஜன் தனக்காக அனுப்பிய பல தனிப்பட்ட வீடியோக்களையும் சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த சமயத்தில் மாதம்பட்டி ரங்கராஜனுக்கு சப்போர்ட் செய்வது போல ஜாய் கிரிஸில்டாவை கலாய்த்து சில வீடியோக்களையும் குரோஷி வெளியிட்டு இருந்தார். இது பெரிய அளவில் பேசப்பட்டது.

ஜாய் வெளியிட்ட அறிக்கை
இதனால் ஜாய் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது அங்கு குரோஷியும் வந்தால் இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்படும் என்று ரசிகர்கள் யூகித்திருந்தனர். ஆனால் இப்போது என்னுடைய குழந்தை நலனுக்காக நான் இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை என்று ஜாய் சொல்லி இருக்கிறார். என்னுடைய குழந்தை ரொம்பவும் சின்ன பையனாக இருக்கிறான் அதனால் தான் அவனை விட்டு நான் வர முடியவில்லை, அவன் அவனுடைய அப்பாவுடன் இருந்தாலும் அம்மாவாக நான் இந்த சமயத்தில் அவன் கூடவே இருக்க வேண்டும் எனக்கு பிக் பாஸ் வாய்ப்பு வந்தது உண்மைதான். ஆனால் அங்கு போக முடியாத சூழ்நிலை இருக்கிறது என்று சொல்லி இருந்தார்.
இதனால் ஒரு சிலர் அவருக்கு நீங்க எடுத்த முடிவு நல்லது என்று சொல்லி வந்தாலும் ஒரு சிலர் நீங்க இப்பவும் தப்பு பண்ணுறீங்க மேடம் என்று அட்வைஸ் கொடுக்கின்றனர். ஏற்கனவே மாதம் பட்டி ரங்கராஜன் தன்னுடன் வாழ்ந்த சமயத்தில் அவருக்காக நான் என்னுடைய வேலைகளை எல்லாம் விட்டுவிட்டேன், அவருக்காக முழுநேர மனைவியாக மட்டும்தான் இருந்தேன், நான் ஆடை வடிவமைப்பு தொழிலையும் முழுசா மறந்துவிட்டேன் என்று மாதம்பட்டி ரங்கராஜனை பிரிந்த பிறகு பேசி இருந்தார்.
ரசிகர்கள் கருத்து
அப்போதே எந்த சூழ்நிலையிலும் பெண்கள் யாருக்காகவும் தங்களுடைய வேலையை விடக்கூடாது என்று சொல்லி பலர் வந்தனர். ஆனால் இப்போ நீங்க உங்க குழந்தைக்காக பிக் பாஸ் போகல என்று சொல்லுகிறீர்களே என்று சிலர் அவருக்காக செல்லமாக கோபப்பட்டு கமெண்ட்ஸ் கொடுத்திருக்கிறதையும் காணமுடிகிறது. எது எப்படியோ இப்போ பிக் பாஸ் தொடங்குவதற்கு முன்பே இந்த நிகழ்ச்சியை பற்றி பேச்சு அதிகரிப்பதற்கு ஜாய் கிரிஸில்டாவும் காரணமாகிவிட்டார்.


Click it and Unblock the Notifications
