விஜய்க்கு புது நெருக்கடி.. கமிஷனர் ஆஃபீஸில் பிக் பாஸ் ஜூலி கொடுத்த புகார்.. தவெக நிர்வாகிகளுக்கு சிக்கல்
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் மற்றும் நடிகர் விஜய் குறித்து கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து தன்னை குறிவைத்து திட்டமிட்ட அவதூறு பிரச்சாரம் நடைபெறுவதாக குற்றம் சாட்டி, முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரும் நடிகையுமான ஜூலி (Maria Juliana) சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருப்பது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கமிஷனர் அலுவலகத்தில் நேரில் புகார்
ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பொதுமக்கள் மத்தியில் அறிமுகமான ஜூலி, பின்னர் Bigg Boss Tamil நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார். அதன் பிறகு சமூக வலைதளங்களில் அடிக்கடி கருத்து தெரிவித்து வரும் நபராகவும் அவர் இருந்து வருகிறார்.
இந்நிலையில் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேரில் ஆஜரான ஜூலி, தன்னை குறிவைத்து சிலர் திட்டமிட்டு பொய்யான வீடியோக்கள் வெளியிட்டு அவதூறு பரப்பி வருவதாக புகார் அளித்துள்ளார்.
விஜய் பற்றி பேசியதற்காக பழிவாங்குகிறார்கள்
ஜூலி அளித்துள்ள புகாரில், நடிகர் விஜய் குறித்து தான் வெளியிட்ட கருத்துகளுக்குப் பிறகு தான் குறிவைக்கப்பட்டதாக கூறியுள்ளார். குறிப்பாக விஜய் ஜல்லிக்கட்டு தொடர்பாக பேசிய "குட்டிக் கதை" குறித்து சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் உண்மை நிலையை தெரிந்து கொள்ளாமல் சிலர் அரசியல் ஆதாயத்திற்காக பேசுகிறார்கள் என்று அவர் விமர்சித்ததாக கூறப்படுகிறது. இந்த கருத்து வெளியான பிறகு சிலர் தொடர்ந்து தன்னை குறிவைத்து விமர்சன வீடியோக்கள் வெளியிட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு குறித்து விஜய் பேசியது
சமீபத்தில் விஜய் தனது அரசியல் மேடைகளில் பேசும்போது ஜல்லிக்கட்டு காளை குறித்து ஒரு "குட்டி கதை" கூறியிருந்தார். அந்த பேச்சு சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டது.
ஆனால் அந்த பேச்சுக்கு எதிராக ஜூலி தனது சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு பதிலடி கொடுத்தார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நேரடியாக இருந்தவர்களில் ஒருவராக தன்னை கூறிக் கொண்ட அவர், ஜல்லிக்கட்டு காளையை பற்றி தவறாக விளக்கக் கூடாது என்று தனது வீடியோவில் குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு பிறகு தொடங்கிய சர்ச்சை
அந்த வீடியோ வெளியான பிறகு விஜய் ரசிகர்கள் மற்றும் சில யூடியூப் சேனல்கள் தன்னை கடுமையாக விமர்சித்து வருவதாக ஜூலி கூறியுள்ளார். குறிப்பாக தன்னை அவதூறு செய்யும் விதமாக பல வீடியோக்கள் வெளியிடப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கிட்னி மோசடி குற்றச்சாட்டு
அதில் மிக முக்கியமாக, தன்னை சிறுநீரக விற்பனை மோசடியில் தொடர்புபடுத்தி பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தான் முன்பு செவிலியராக பணியாற்றிய காலத்தில் கிட்னி விற்பனை மோசடியில் ஈடுபட்டதாக சிலர் வீடியோ வெளியிட்டுள்ளனர் என்றும், அதில் ஆதாரங்கள் உள்ளதாக கூறி பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டை முழுமையாக மறுத்த ஜூலி, தன்னுடைய வாழ்க்கையில் எந்தவிதமான உடல் உறுப்பு கடத்தல் அல்லது சட்டவிரோத பணப்பரிமாற்றத்திலும் ஈடுபடவில்லை என்று தெரிவித்துள்ளார்.
8 பேருக்கு எதிராக புகார்
இந்த விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி மற்றும் 'ரெட் பிக்ஸ்' என்ற யூடியூப் சேனல் உரிமையாளரான Felix Gerald உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக ஜூலி புகார் அளித்துள்ளார்.
பெலிக்ஸ் ஜெரால்ட், கார்த்திக் குமார், சரத், ஷர்மிளா, பூவரசன், நடிகர் அருண் ராஜன் மற்றும் ராஜு ஆகியோர் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தி அவதூறு பரப்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த ஜூலி, "சமூக வலைதளங்களில் யாராவது ஒரு கருத்து சொன்னால் அதற்கு எதிர் கருத்து சொல்லலாம். அது ஜனநாயகம். ஆனால் ஒரு பெண்ணின் கேரக்டரையும் தொழிலையும் இப்படி கொச்சைப்படுத்துவது ஏற்க முடியாதது" என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னை அவதூறு செய்தவர்களுக்கு எதிராக பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பு
ஜூலி அளித்துள்ள இந்த புகார் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் குறித்து கருத்து தெரிவித்தது இந்த அளவுக்கு சர்ச்சையாக மாறியது என்பது குறித்து பலரும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் இந்த புகாரை தொடர்ந்து காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பது குறித்து அனைவரும் கவனம் செலுத்தி வருகின்றனர்.
-
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன்












Click it and Unblock the Notifications