மசங்கு விழி கசங்குதய்யா.. வாய்யா என் வீரா.. தம்பியுடன் சேர்ந்து பாடிய ஜூலி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சூட்டிங் இல்லாததால் வீட்டுக்குள்ளேயே தம்பியுடன் ஒரு டான்ஸ் போட்டதற்கு நெட்டிசன்கள் ஜூலியை பாடாய்ப்படுத்தி கமெண்ட் களால் அர்ச்சனை செய்து வருகின்றனர் .

ஆனாலும் அவருக்கு எப்போதுமே அவருடைய ரசிகர்கள் சப்போர்ட்டாக தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல சீசன்களில கடந்து வந்தாலும் முதல் சீசனில் யாராலும் மறக்க முடியாது.

முதல் பிக் பாஸ்

முதல் பிக் பாஸ்

அந்த சீசனில் மட்டும்தான் உள்ளிருக்கும் கண்டஸ்டாண்டுகள் அவர்களுடைய உண்மையான குணத்துடன் இருந்தனர் அதற்கு பிறகு வரும் சீசன்களில் எல்லாம் முந்தைய சீசன் களை பார்த்து நன்றாக டாஸ்க் முதல் எப்படி மக்களிடம் நடந்துகொள்ளவண்டும் என்பதை புரிந்து கொண்டு தான் உள்ளே நடித்துக் கொண்டிருந்தனர் என்று சிலர் கூறி வருகின்றனர் .

ஜூலியை மறக்க முடியுமா

ஜூலியை மறக்க முடியுமா

ஆனால் முதல் சீசனில் கலந்துகொண்டு பிரபலமான ஜூலியை யாரும் மறக்க முடியாது பொதுவாக ஒருவரை நல்லவர் என்று நாலுபேரு சொன்னால் அவரை பிடிக்காதவர்கள் பல பேர் அவரை சுற்றி இருப்பார்கள். அதேபோலத்தான் ஜூலியை இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளிய அவருடைய ரசிகர்களில் பலர் பிக் பஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வெறுக்க ஆரம்பித்து விட்டனர்.

ஜல்லிக்கட்டு போராளி

ஜல்லிக்கட்டு போராளி

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்புவரை வரைக்கும் இவர் ஒரு செவிலியராக ஹாஸ்பிடலில் வேலை செய்து கொண்டிருந்தார் .ஆனால் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மிகவும் பிரபலமாகி தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தார் ஆனாலும் வேலையை விடவும் இவருக்கு மாடலிங்கில் இருந்த ஆசையின் காரணமாக மாடலிங்கில் இருந்து வந்த வாய்ப்பை விடாமல் அதில் காலடி எடுத்து வைத்து தற்போது மாடலிங்கில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

விஜய் டிவியின் புது ஷோ

விஜய் டிவியின் புது ஷோ

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்து இருந்தாலும் தற்போது விஜய் டிவியில் மீண்டும் பிக்பாஸ் கன்டஸ்டண்ட்களை ஆடவைத்து புது ஷோ ஒன்று உருவாக்கி வருகின்றனர் .அதில் ஜூலியும் கலந்துகொள்கிறார். அதற்காக டான்ஸ் பிராக்டிஸ் பண்ணிக் கொண்டிருக்கும்போது அவருடைய தம்பியுடன் ஒரு டான்ஸ் போட்டிருக்கிறார் .அதனைப் பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர் .

அழகாக மெருகேறிய ஜூலி

அழகாக மெருகேறிய ஜூலி

அதுவும் இல்லாமல் உடல் எடை குறைந்து இவர் செம ஸ்ட்ரக்சர் ஆக மாறிவிட்டார் என வர்ணித்தும் வருகின்றனர். வீடியோவிற்கு ஜூலியே இது என்னுடைய தம்பி என கேப்ஷன் கொடுத்திருந்தாலும் புரிந்து கொள்ளாத சில நெட்டிசன்கள் தம்பி கூடவா இந்த ஆட்டம் என கலாய்த்து வருகின்றனர் .எப்போதுமே தன்னை கலாய்க்கும் நபர்களை கண்டுகொள்ளாத ஜூலி தற்போது எந்த கமெண்ட்களுக்கும் பதிலளிக்காமல் இருந்து வருகிறார்.

சென்ராயனுக்கு ஜோடி

சென்ராயனுக்கு ஜோடி

ஆனால் இன்று பிக்பாஸ் டான்ஸ் ஜோடியில் ஜூலிக்கு ஜோடியாக ஆடிக்கொண்டிருக்கும் சென்ராயன் இவர்களுடைய டான்ஸ் பிராக்டிஸ் வீடியோவை ஷேர் செய்து இருக்கிறார் அதில் ஜூலியை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து பாடாய்படுத்தி வருகின்றனர். என்னதான் இவரை நெட்டிசன்கள் கலாய்த்தாலும் இவருடைய ரசிகர்கள் எப்போது வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுக்கப் போகிறீர்கள் என கேட்டு வருகின்றனர் .

ஆக்டிவ்

ஆக்டிவ்

ஆனால் வாய்ப்பு கிடைத்தால் பயன்படுத்திக் கொள்வேன் என இவர் அசால்டாக பதில் கூறியிருக்கிறார் .சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருந்து வருவதால் இவர் போஸ்ட் போட்ட சிறிது நேரத்திற்குள் கமெண்டுகள் குவிந்து வருகிறது. சும்மா சொல்லக் கூடாது, ஜூலியின் டான்ஸ் வர வர வேற லெவலில் இருக்கிறது.. ரசிகர்கள் பாராட்டும்படியும் இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+