குட்டி சுவற்றில்.. குத்த வைத்த குட்டி தேவதை.. அள்ளுறாரே ஜூலி!

Subscribe to Oneindia Tamil

சென்னை : குட்டி சுவற்றில் குட்டி டானாக வீற்றிருக்கும் ஜூலிக்கு இன்ஸ்டாகிராமில் கமெண்ட்கள் குவியுது.. அந்தப் புன்னகைக்கு ஈடு இணை இருக்கா சொல்லுங்கய்யா என்று பலரும் சிலாகித்துக் கொண்டுள்ளனர்.

சந்தோசமாக இருக்கும் ஜூலியை பார்த்து என்ன காரணமாக இருக்கும் என ரசிகர்கள் கேள்வி கேட்க புன்னகையாலே பதிலளித்திருக்கிறார்.

தன்னைப்பற்றி நெகட்டிவ் கமெண்டுகளை போட்டுக் கொண்டிருந்தவர்கள் காண்டாகி போய் விடும் வகையில், இவர் இப்போது செய்திருக்கும் செயல்தான் வைரலாக பரவி வருகிறது.

வார்த்தைகள் ஒவ்வொன்றும் முத்து போல இருக்கு

வார்த்தைகள் ஒவ்வொன்றும் முத்து போல இருக்கு

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று பார்ப்பவர்கள் எல்லாம் புலம்புகிற மாதிரி தத்துவத்தை உதிர்த்து இருக்கும், ஜூலியை பார்த்து அவருடைய ரசிகர்கள் தலைவி இப்படித்தான் கெத்தாக இருக்க வேண்டும். உங்களை இந்த மாதிரி பார்ப்பதற்குத்தான் அழகாக இருக்கிறது என்று கமெண்ட்ஸ் களால் அர்ச்சனை செய்து வருகின்றனர். எத்தனை பேர் தன்னை பற்றி தூற்றினாலும் கண்டுகொள்ளாத இவரின் தைரியத்தைப் பார்த்து தான் அனைவரும் மெய்சிலிர்த்துப் போயிருக்கின்றனர்.

கேரக்டரே மாறி போயிடுச்சு

கேரக்டரே மாறி போயிடுச்சு

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னர் இவர் சந்தோசமாக நர்ஸ் வேலை பார்த்துக்கொண்டு தான் உண்டு தன் வேலை உண்டு என்று சராசரி பெண்ணாக இருந்தார். ஆனால் அவருடைய டோட்டல் இமேஜையும் மாற்றிவிட்டது, பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் இவர் செய்த சிறு தவறை இப்ப வரைக்கும் மனதில் வைத்துக்கொண்டு பலர் இவரை திட்டி தீர்க்கின்றனர். ஆனால் அந்த தவறை அவர் உணர்ந்து விட்டாலும் நெட்டிசன்கள் இவரை விடுவதாக இல்லை. இதனாலே பல முறை இவர் வெகுண்டு எழுந்தாலும் சில நேரங்களில் மனச்சோர்வும் அடைந்திருக்கிறார். ஆனாலும் தன்னுடைய வேலையிலும் கவனமாக இருந்து வருகிறார்.

டான்ஸில் பட்டையைக் கிளப்புகிறாரே

டான்ஸில் பட்டையைக் கிளப்புகிறாரே

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் தான் பார்த்துவந்த செவிலியர் பணியை தொடரவில்லை என்றாலும் மாடலிங் இவருக்கு நல்ல வாய்ப்பு கொடுத்து விட்டது. சினிமாக்களில் கூட நடிப்பதற்கு ரெடியாகி விட்டார். முன்னணி நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் தற்போது அழகில் ஜொலித்து வரும் இவருக்கு மீண்டும் விஜய் டிவியில் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதில் இவர் தன்னுடைய திறமையை நன்றாகவே வெளிப்படுத்தி வருகிறார். பிக் பாஸ் ஜோடிகள் டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சென்ராயனுடன் பட்டையை கிளப்பி வருகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து ஆடும் ஆட்டத்தைப் பார்த்து ஜுலிக்குள் இப்படியும் ஒரு திறமை இருக்கிறதா என்று அதிசயப்பட்டும் வருகின்றனர்.

மீண்டும் அந்த கர்ஜனை குரல்

மீண்டும் அந்த கர்ஜனை குரல்

இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் முன்நின்று தமிழ் பெண்ணாக சிலிர்த்து எழுந்ததன் விளைவாக தான் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அதேபோல தற்போது தன்னை பற்றி தவறாக பேசும் நெட்டிசன்கள் இடமும் தன்னுடைய திறமையை நன்றாகவே நிரூபித்து வருகிறார். இவரை எப்படியாவது அழவைத்து விட வேண்டும் என்று எதிர்பார்ப்பார் தன்னுடைய சிரிப்பையே பதிலாக கொடுத்து வருகிறார். அதனாலேயே பலர் காண்டாகி இருக்கின்றனராம்.

வெறுப்புக்கு மருந்து சிரிப்புதான்

வெறுப்புக்கு மருந்து சிரிப்புதான்

ஒரு சில நாட்களாகவே இவர் எந்த போட்டோ ஷூட் போட்டோஸ்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதில்லை. நார்மலாக இருக்கும் போட்டோக்களை தான் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது ரொம்பவே சிம்பிளாக உடை அணிந்து கொண்டு மதில்மேல் ஏறி உட்கார்ந்தபடி ஒரு காலை அதில் மடித்து உட்கார்ந்து கெத்து காட்டுகிறார். இவருடைய இந்த போஸை பார்த்து எப்படியும் நெகட்டிவ் கமெண்டுகளை போட்டு நெட்டிசன்கள் கலாய்ப்பார்கள் என்று தெரிந்தாலும், அதற்கு அவர் வேற லெவல் கேப்ஷன் கொடுத்திருக்கிறார். "நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால், என் வாழ்க்கை மிகவும் அழகாக ஆசீர்வதிக்கப்பட்டது. என் தோல்விகள் அனைத்தும் என்னை ஒரு வலிமையான பெண்ணாக உருவாக்கியுள்ளன. அதற்காக நான் பெருமைப்படுகிறேன் என்று அதில் குறிப்பிட்டு இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+