ரஷ்மிகாவுக்கே டப் கொடுக்கும் ஜூலியின் ஓ சாமி...சாமி.. பார்த்ததும் சொக்கிப் போன ரசிகர்கள்
சென்னை: பாவாடை தாவணியில் சாமி சாமி பாட்டுக்கு ஜூலி போட்ட ஆட்டத்தை பார்த்து ரசிகர்களின் மனது ஆடிப்போய் இருக்கிறதாம்.
Recommended Video
பல நாட்களுக்குப் பிறகு மீண்டும் வெறித்தனமாக ஜூலி வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு வரைக்கும் புகழின் உச்சத்தில் இருந்த ஜூலி இந்த நிகழ்ச்சியின் மூலமாக தான் கஷ்டப்பட்டு போராடி பெற்றிருந்த பெரும் புகழையும் இழந்திருந்தாலும், தற்போது இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் அவருடைய விட்ட இடத்தை பிடித்து விட்டார். ஜூலியின் மனதை புரிந்து கொண்ட ரசிகர்கள் பலர் அவருக்கு ஆறுதலாக கமெண்டுகளை சமூகவலைத்தளத்தில் அனுப்பி வருகின்றனர். ஆனால் அவர் மீது இன்னும் கோபத்தில் இருக்கும் ரசிகர்கள் எப்போதும் போல நெகட்டிவ் கமெண்டுகளை பார்சல் பண்ணி குவித்து வருகிறார்கள்.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்
ஒரு சில வாரங்களுக்கு முன்புதான் இவரை ஒருவர் காதலித்து ஏமாற்றி விட்டார் என்று காவல்நிலையத்தில் புகார் கொடுத்து மீண்டும் சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தார். பின்பு இவருடைய பக்கத்தில் தவறு இருக்கிறது என்று செய்திகள் பரவி வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதைப்பற்றி அப்படியே விட்டுவிட்டு ஜூலி இப்படியே இருந்தால் சரிவராது என்று மீண்டும் தன்னுடைய போட்டோஷூட் துறைக்கு திரும்பிவிட்டார்.
எது போனாலும் கவலை இல்லை

மாடலிங்கில் கலக்குறாரு
கூரான வாள் போன்ற படங்கள் எதுவும் இன்னும் ரிலீசாகாமல் பெட்டியில் முடங்கிக் கிடக்கிறது. ஆனால் இவர் அப்படி முடங்கிக் கிடக்காமல் தன்னை ரசிகர்கள் ஏற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ எப்பொழுதும் லைவில் இருக்கவேண்டுமென்று தான் போகும் இடங்கள் தான் அணியும் உடைகள் இன்று ஒவ்வொன்றிற்கும் ஒரு போட்டோ ஷூட் புல் வீடியோ எடுத்து அப்லோட் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். என்னதான் டீ தூளை மாற்றினாலும் காபியை மாத்த மாட்ரீயே என்று வடிவேல் காமெடியாய் கலாய்ப்பது போன்று இவர் என்னதான் வீடியோக்களை விதம் விதமாக மாற்றி மாற்றி போட்டாலும் நெட்டிசன்கள் பங்கமாக கலாய்க்க தான் செய்கிறார்கள்.

ஜூலியின் ஆட்டம்
தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண் போட்டியாளர்கள் பலர் இணைந்து பொங்கல் விழாவை கிராமத்தில் கொண்டாடி இருக்கின்றனர். இந்த எபிசோடுகள் பொங்கல் தினத்தில் ஒளிபரப்பாக இருக்கும் நேரத்தில் அந்த கிராமத்திற்கு நானும் ஒரு போட்டியாளராக சென்றிருக்கும் ஜூலி அங்கே விதவிதமாக வீடியோக்களை எடுத்து குவித்திருக்கிறார். அதுவும் பாவாடை தாவணியில் ஓ..சாமி....சாமி பாட்டுக்கு அவர் போட்ட ஆட்டம் ரசிகர்களை மிரள வைத்துள்ளது. இந்த வீடியோக்களை பார்த்ததும் ரசிகர்களின் கைகள் ஆட்டோமேட்டிக்காக லைக் பட்டனை தெறிக்க விட்டு வருகிறதாம்.












Click it and Unblock the Notifications