பொசுக்குனு கண்ணீர் விட்ட ஜோதிகா.. டாப் பொசிஷனில் சூர்யா? கருப்பு கன்பார்மா 500 கோடி அடிக்குமாமே

Subscribe to Oneindia Tamil

சென்னை: தியேட்டர்களில் பெரிய அளவில் வசூல் கொடுப்பதில்லை என்று சூர்யாவை நோக்கிக் கூறப்பட்ட விமர்சனங்களுக்கு, இப்போது கருப்பு படம் மூலம், தமிழகத் திரையரங்குகளின் மூலம் சூர்யா மிகச்சிறந்த பதிலடி கொடுத்துள்ளார். அந்தத் தியேட்டர் வெற்றியைக் கண்டுதான் ஜோதிகா உட்பட அவர்களின் குடும்பத்தினர் மிகுந்த நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்" என்று தயாரிப்பாளர் தனஞ்செயன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில், சூர்யா, திரிஷா, நட்டி நட்ராஜ், சுவாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ் உள்ளிட்டோர் நடித்த 'கருப்பு" படம் வெளியாகி 3வது வாரத்திலும் பல தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Jyothika

கருப்பு படம் ஹிட்

கடந்த மே 15ம் தேதி வெளியான இந்த படம் சூர்யாவின் திரையுலகப் பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. உலகளவில் படம் 302 கோடி முதல் 308 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

அதே நேரத்தில், தமிழ்நாட்டில் மட்டும் 'கருப்பு' திரைப்படம் 150 கோடி வசூலை கடந்துள்ளதாக சக்தி ஃபிலிம் ஃபேக்டரி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்திலேயே படம் 200 கோடி வசூலை எட்டும் என்ற நம்பிக்கையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வசூல் சாதனை செய்த கருப்பு

இந்த படம் குறித்து சமீபத்தில் தயாரிப்பாளர் தனஞ்செயன் medica circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்திருந்தார்.. அதில் அவர் பேசும்போது, "'கருப்பு' பட் வெளியான முதல் வாரத்திலேயே 207 கோடி ரூபாய் கிராஸ் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எனவே, இனிமேல் யாரும் இதனைப் பற்றி கேள்வி எழுப்ப முடியாது, தங்களின் விமர்சனங்களை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஒரே வாரத்தில் இ்ந்த படம் வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது.

நம்முடைய தமிழ் ஆடியன்ஸ் எப்போதுமே ஆன்மீகம் மற்றும் தெய்வீக உணர்வு சார்ந்த திரைப்படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பை அளிப்பார்கள். இதுவரை தமிழ் சினிமாவில் கருப்பசாமியை ஒரு சிலையாக மட்டுமே காட்டியிருக்கிறார்களே தவிர, அந்த கதாபாத்திரம் நேரில் வந்து நீதியை நிலைநாட்டுவது போல் நாம் பார்த்ததில்லை.

10 நிமிடம் கிளைமேக்ஸ்

கிராமங்களில் காவல் தெய்வமாக வழிபடப்படும் கருப்பசாமி, நம்மைப் பாதுகாக்கும் தெய்வமாக மீண்டும் ஒரு படத்தின் மூலமாக வரும்போது, அது மக்களுடன் உணர்வுபூர்வமாக மிக எளிதாக இணைந்துவிட்டது. சினிமாவில் நாம் தர்க்க ரீதியான லாஜிக்கைத் தேடக் கூடாது, மக்களுடன் எமோஷனல் கனெக்ட் இருக்கிறதா என்பதை மட்டுமே பார்க்க வேண்டும்.

சினிமாவில் சூர்யா தெய்வீக உணர்வுடன் தோன்றும் அந்த இறுதி 10 நிமிடக் காட்சிகள் வரும்போது, பலருக்கும் ஆன்மீக உணர்ச்சி மேலிடுகிறது. இத்தகைய உணர்வை நாம் செயற்கையாகப் பணம் கொடுத்து உருவாக்கிவிட முடியாது.

தியேட்டர்களில் மக்கள் இவ்வாறு உணர்வுபூர்வமாக சாமியாடுவதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட வேண்டாம், இது திரைப்படத்திற்கான விளம்பரம் கிடையாது' என்று சூர்யாவும் அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜோதிகா எமோஷனல் - கண்ணீர்

"கங்குவா படம் வெளியீட்டு நேரத்தில் சூர்யா, இணையதளங்களில் மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். நடிகை ஜோதிகா கூட ஒரு பேட்டியில் அதற்குப் பதிலடி கொடுத்திருந்தார். இப்போது கருப்பு படம் மாஸ் வெற்றியைப் பெற்றுள்ளதால், ஜோதிகாவும், அவரது ஒட்டுமொத்த குடும்பத்தினரும் அளவற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

ஜோதிகா கண்ணீர் விட்டு பேசியிருக்கிறார்.. காரணம், சூர்யாவின் இந்த அளப்பரிய உழைப்பிற்குத் தகுந்த தியேட்டர் வெற்றி கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் அவர்களுக்கு நீண்ட நாட்களாக இருந்தது. வணிக ரீதியாக சூர்யா எப்போதுமே வெற்றிகரமான நடிகர் தான், ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமங்களை நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்குவார்கள். அதிலிருந்து வரும் தொகையை அவர் அகரம் பவுண்டேஷனுக்கும் நன்கொடையாக வழங்கி விடுகிறார்.

சூர்யா மீதான விமர்சனங்கள்

ஆனால், தியேட்டர் என்ற ஒட்டுமொத்த வட்டாரமும் ஒரு நடிகரைக் கொண்டாடினால் மட்டுமே அவர் முழுமையான ஆளுமையாக மாற முடியும். தியேட்டர்களில் பெரிய அளவில் வசூல் கொடுப்பதில்லை என்று சூர்யாவை நோக்கிக் கூறப்பட்ட விமர்சனங்களுக்கு, இப்போது தமிழகத் திரையரங்குகளின் மூலம் சூர்யா மிகச்சிறந்த பதிலடி கொடுத்துள்ளார். அந்தத் தியேட்டர் வெற்றியைக் கண்டுதான் ஜோதிகா உட்பட அவர்களின் குடும்பத்தினர் மிகுந்த நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளதால், இனிமேல் திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை. திரையரங்குகளில் தொடர்ந்து பிரம்மாண்ட வெற்றிகளைக் கொடுத்து அவர்தான் பாக்ஸ் ஆபீஸில் உச்சத்தில் இருந்தார்.

டாப் பொசிஷன்

இப்போது அந்த இடம் முற்றிலும் காலியாக உள்ளது. சூர்யா அவர்களுக்கு அந்த இடத்திற்கு வருவதற்கான அனைத்துத் தகுதிகளும், திறமைகளும் முழுமையாக உண்டு. ஆனால், அவர் பாக்ஸ் ஆபீஸில் 'நம்பர் ஒன்' என்ற இடத்தைப் பிடிக்க வேண்டும் என்று ஆசைப்படும் நபர் கிடையாது.

'The One' என்றால் அவர் தனித்துவமான ஒரு மனிதர். தான் ஈட்டும் வருவாயைத் தனக்கே வைத்துக் கொள்ளாமல், இந்த உலகத்திற்கும் ஏழை மாணவர்களின் கல்விக்கும் வாரி வழங்க வேண்டும் என்று நினைக்கும் உன்னத மனிதர் அவர். வரிசையாக நான்கைந்து படங்கள் இதே போன்று வெற்றிகரமாக அமைந்தால், யாராலும் கேள்வி எழுப்ப முடியாது, அவர் தானாகவே அந்த உன்னத பொசிஷனில் அமர்வார்" என்று தயாரிப்பாளர் தனஞ்செயன் மிக நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+