ஆண்ட்டி சிம்ரன்.. டப்பா ஜோதிகா.. சமந்தா அளவுக்கு கூட சிம்ரன் நடிக்கல! பெரிய நடிகையர் திலகமா: பிரபலம்
சென்னை: 10, 15 வருடங்களாக சிம்ரன் நடிக்காமல் விட்டாலும், அவரது இடத்தை வேறு எந்த நடிகையாலும் நிரப்ப முடியவில்லை என்றெல்லாம் பில்டப் பண்ணுகிறார்கள். ஆனால், சிம்ரன் ஒன்றும் பெரிய நடிகையர் திலகம் கிடையாது. சமந்தா அளவுக்கு கூட சிம்ரன் நடித்ததில்லை. அப்படி குறிப்பிட்டு சொல்லும்படியான எதுவுமே அவர் நடித்ததில்லை.. ஜோதிகாவின் மொழி போன்ற படங்களில் நடிப்பு திறமை அபாரமாக இருக்கும்" என்று வலைப்பேச்சு அந்தணன் கருத்து கூறியிருக்கிறார்.
சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசிய சிம்ரன், "என்னுடைய சக நடிகைக்கு ஒருமுறை, உங்களை அந்த கேரக்டரில் பார்த்தது சர்ப்ரைஸாக இருந்தது என்று மெசேஜ் செய்தேன்.

உடனே அவர் ஆண்ட்டி ரோலில் நடிப்பதைவிட இந்த ரோல் சிறந்தது என்று ரிப்ளை பண்ணியிருந்தார்.. இது எனக்கு ஷாக்கிங்காக இருந்தது.. 20, 25 வயதுக்காரர்களுக்கு அம்மாவாக நடிப்பதொன்றும் தவறு கிடையாது.. என்னை பொறுத்தவரை டப்பா ரோல்களில் நடிப்பதைவிடவும் ஆண்ட்டி ரோலில் நடிக்கலாம் என்றெல்லாம் சிம்ரன் பேசியிருந்தார்.
சிம்ரன் சொல்வது யாரை
சிம்ரனின் இந்த பேச்சு மிகப்பெரிய பரபரப்பை தந்துவிட்டது. சிம்ரன் சொல்வது யாரை? சக நடிகை என்றால் ஜோதிகாவா? என்ற டாக் ஓடிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான நெட்டிசன்கள், அது ஜோதிகாதான் என்கிறார்கள்.. ஏனென்றால் அவர்தான், டப்பா கார்ட்டெல் என்ற வெப்சீரிஸில் நடித்திருக்கிறார் என்று கருத்து கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
இதுகுறித்துதான், மூத்த பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் கருத்து கூறியிருக்கிறார்.. அதில், உண்மையிலேயே சிம்ரன் உண்மையைத்தான் சொல்றாங்களா தெரியல.. அல்லது மேடை பரபரப்புக்காக இதை சொன்னார்களா தெரியவில்லை. ஏன் ஆண்ட்டி ரோல் செய்கிறீர்கள் என்று சிம்ரனை கேட்டது ஜோதிகாவா? லைலாவா தெரியல.
லைலா சொல்லியிருக்க மாட்டார்
ஆனால், சீரியஸாக பார்க்கக்கூடிய நபர் லைலா கிடையாது.. அந்தவகையில் சிம்ரனை பேசியது ஜோதிகாவாக இருக்கலாம்.. ஒருவேளை அது ஜோதிகாவாக இருந்தால், அவர் சொன்னதில் தவறில்லை.. ஏன் ஆண்ட்டி ரோல் செய்கிறீர்கள் என்று சிம்ரன் மீதான அக்கறையில்கூட சொல்லியிருக்கலாம். அதை ஏன் பொறாமையாக பார்க்க வேண்டும்? விமர்சிக்கக்கூடியதாக ஏன் பார்க்க வேண்டும்? அது ஒரு தவறான விமர்சனம் என்பதுபோல, சிம்ரன் சொல்வதுதான் ஆச்சரியமாக உள்ளது.
ஜோதிகா இல்லாவிட்டாலும் அதை யார் சொல்லியிருந்தாலும், அது பாசிட்டிவ் விஷயம்தான்.. சினிமா என்பதே பெரிய போராட்டம்.. ஆரம்பத்தில் சிம்ரன் வாய்ப்புக்காக பட்ட கஷ்டத்தைபோல, ஜோதிகாவும் கஷ்டப்பட்டுதான் வந்தார். சூர்யாவின் மனைவியானது பிற்காலத்தில்தான்.. யாருடைய உதவியுமின்றிதான் ஜோதிகாவும் தமிழ் படங்களில் வாய்ப்பு பெற்று நடித்தார்..
நடிகையர் திலகம் கிடையாது
எனவே, சகநடிகை சொன்ன விஷயத்தை சிம்ரன் இவ்வளவு கோபமாக பார்த்திருக்க கூடாது, நெகட்டிவ்வாகவும் பார்த்திருக்கக் கூடாது.. 10, 15 வருடங்களாக சிம்ரன் நடிக்காமல் விட்டாலும், அவரது இடத்தை வேறு எந்த நடிகையாலும் நிரப்ப முடியவில்லை என்றெல்லாம் பில்டப் பண்ணுகிறார்கள். சிம்ரன் ஒன்றும் பெரிய நடிகையர் திலகம் கிடையாது.
சமந்தா அளவுக்கு கூட சிம்ரன் நடித்ததில்லை. அப்படி குறிப்பிட்டு சொல்லும்படியான எதுவுமே அவர் நடித்ததில்லை.. ஜோதிகாவின் மொழி போன்ற படங்களில் நடிப்பு திறமை அபாரமாக இருக்கும்.. மொழி போலவே வேறு சில படங்களும் உள்ளன..
ஆனால், சிம்ரனை பெரிய நடிகை போல பேசுவதுதான் வேடிக்கையாகவும், வியப்பாகவும் இருக்கிறது.. அந்த காலகட்டத்தில், அவர் ஒரு கிளாமர் டால் மட்டுமே.. அதுக்காக அதை ஒரு பெரிய தகுதியாக பார்க்க முடியாது. நடிகையர் திலகம் படத்தில் சாவித்திரியாகவே வாழ்ந்திருந்தார் சமந்தா. அப்படி ஒரு படத்தில் கூட சிம்ரன் நடிக்கவில்லையே" என்றெல்லாம் கூறியிருக்கிறார்












Click it and Unblock the Notifications