ஜோதிகா தரும் காசு.. சூர்யா பட்ட பாடு ஏராளம்.. அன்று சிவகுமார் விதைத்த விதை.. இன்று அகரம் ஆலமரமாய்
சென்னை: ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் போன்றோர் கோடிகளில் சம்பளம் வாங்குகிறார்கள்.. ஆனால், கல்வி உதவிகளை அமைப்பு வைத்து யாரும் செய்வதில்லை,.. இந்த நடிகர்கள் பணம் தரவேண்டும் என்று அவசியமில்லை என்றாலும் உதவலாம்.. மாணவர்களுக்கு கல்வி உதவியை தருவதில்லை.. இலவச கல்விக்கூடம் நடத்தியதிலை.. முதியோர் இல்லம் நடத்தியதில்லை.. பசியோடு இருப்பவர்களுக்கு அன்னச்சத்திரமும் கிடையாது.. அந்தவகையில் சூர்யா செய்துள்ளது மிகப்பெரிய சாதனை என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பாராட்டு தெரிவித்துள்ளார்.
AramNaadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, "அன்று நடிகர் சிவகுமார் விதைத்த விதையொன்று, இன்று அகரம் அறக்கட்டளை என்ற ஆலமரமாக உருவாகியிருக்கிறது..
{image-gggnn-3-jpg-1754490894035_1754490469159-600x338.jpg tamil.oneindia.com
அவமானங்களை சந்தித்த சூர்யா
அன்றைய காலகட்டத்தில், 10, 12ம் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 10,000 ரூபாய் என்று வருடா வருடம் தந்து வந்தார் சிவக்குமார்.. கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தொடர்ச்சியாக இதனை செய்து வந்தார்..அவரது வாரிசான சூர்யா, சினிமாவில் பல அவமானங்களை சந்தித்தார்.. இதற்கு பிறகு தன்னை அசிங்கப்படுத்தியவர்களை வைராக்கியமாக நடித்து முன்னேறி காட்டியவர் சூர்யா..
அதற்கு பிறகு அதாவது 15 வருடங்களுக்கு முன்பேயே அகரம் அறக்கட்டளையை துவங்கிவிட்டார். 15வது ஆண்டு வெற்றிவிழாதான் தற்போது கொண்டாடப்பட்டது.. இன்று சினிமாவில் வேறு எந்த நடிகரையும் அண்ணா என்று அடைமொழியுடன் ரசிகர்கள் கூப்பிடுவதில்லை.. ஆனால், ஒவ்வொரு மாணவ, மாணவரும், சூர்யாவை அண்ணா, அண்ணா என்று என்று பாசத்துடன் கூப்பிட்டதை பார்க்க முடிந்தது..
அகரம் என்ற ஆலமரம்
இந்த 15 வருடங்களில் 51 டாக்டர்களை படிக்க வைத்துள்ளார் சூர்யா.. இதைத்தவிர வக்கீல்கள், என்ஜினியர்கள் படித்து வெளியேறியிருக்கிறார்கள்.. 10 பேர் ஆளுக்கு, 10 லட்சம் போட்டு, 1 கோடி ரூபாயில் துவங்கப்பட்டதே இந்த அறக்கட்டளை..
எந்தவிதத்திலுமே படிக்க முடியாத சூழ்நிலையில் உள்ள மாணவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு கல்லுரிகளில் சிபாரிசு செய்து சீட்டுகள் பெற்று தரப்படுகிறது.. அதன்மூலமாக அகரம் பவுண்டேஷனில் படிக்க வைக்கப்படுகிறது.. இன்று 7000, 8/000 பேர் அகரம் மூலம் படித்து வெளிவந்துள்ளனர்..
ஜோதிகா தந்த காசு
இதையும் மீறி, ஒவ்வொரு வருடமும், சூர்யா, ஜோதிகா, கார்த்தி போன்றோருக்கு சினிமாவில் வரும் வருமானத்தில் 10 கோடியை இந்த அகரம் அறக்கட்டளைக்காக ஒதுக்க தருகிறார்கள்,.. இப்படித்தான் ஆலமரமாக வளர்த்து கொண்டுவந்துள்ளனர். இந்த 15 ஆண்டு விழாவை கொண்டாட வேண்டிய கட்டாயத்துக்கு சூர்யாவை பலரும் கொண்டுவந்துவிட்டனர்..
நல்ல விஷயம் செய்தாலும் விமர்சனங்களும், தாக்குதல்களும் சூர்யா மீது விழுந்தவண்ணம் உள்ளன.. சூர்யா படங்கள் வந்தாலும் தாக்குகிறார்கள், சூர்யா கருத்து சொன்னாலும் தாக்குகிறார்கள், சூர்யா மட்டும்தான் நீட் பற்றி கருத்து சொன்னாரா? விஜய் சொல்லலயா? விஜய்யாவது அரசியலுக்கு வந்து கருத்து சொன்னார், ஆனால் சூர்யா அரசியலுக்கு வராமலேயே நீட் பற்றி பேசினார்.
கல்வி விளம்பரம்
இப்போதுதான், விஜய் இப்போதுதான் பாட புத்தகங்களை தருகிறார். ஆனால், 15 வருடங்களாகவே சூர்யா கல்வி உதவியை மாணவர்களுக்கு செய்து வருகிறார்.. எந்த நடிகரும் இதுவரை செய்யாத சாதனை இதுவாகும்.. சூர்யா செய்தது கல்வி உதவி என்றால், விஜய் செய்தது கல்வி விளம்பரம்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் போன்றோர் கோடிகளில் சம்பளம் வாங்குகிறார்கள்.. ஆனால், இப்படியான உதவிகளை செய்வதில்லை,, இவர்கள் பணம் தரவேண்டும் என்று அவசியமில்லைதான்.. ஆனால், அமைப்பு வைத்து, மாணவர்களுக்கு கல்வி உதவியை தருவதில்லை.. இலவச கல்விக்கூடம் நடத்தியதிலை.. முதியோர் இல்லம் நடத்தியதில்லை.. பசியோடு இருப்பவர்களுக்கு அன்னச்சத்திரமும் கிடையாது..
இஸ்லாம் மதம் - ஜோதிகா
நீட் பற்றி சூர்யா மட்டும்தான் கருத்து சொன்னாரா? .. அனைத்து நடிகர்களுமே கருத்து சொல்லியிருந்தும், சூர்யா மட்டுமே தாக்கப்பட்டு வருகிறார்.. கோயிலுக்கு தரும் பணத்தை பள்ளிக்கூடத்துக்கோ, மருத்துவமனைக்கோ தரலாம் என்று ஜோதிகா சொன்னதில் என்ன தப்பு? இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர் என்பதாலேயே, ஜோதிகாவை விமர்சிக்கிறார்கள்.
சூர்யா, ஜோதிகா இருவரின் கருத்துக்களையும் தவறாக சித்தரித்து தவறாக பேசுகிறார்கள்" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.
-
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்!












Click it and Unblock the Notifications