பள்ளி படிப்பை முடித்த சூர்யா மகள்.. மாமனாருடன் சண்டையா? ஒரே போஸ்டில் ஜோதிகா கொடுத்த விளக்கம்
சென்னை: நடிகை ஜோதிகாவும், நடிகர் சூர்யாவும் கடந்த 2006 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு தியா மற்றும் தேவ் என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இதில் தியா பள்ளி படிப்பை முடித்து கிராஜுவேஷன் பட்டம் பெற்றிருக்கிறார், அப்போது எடுத்த புகைப்படங்களை ஜோதிகா தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார். அதோடு ஜோதிகாவிற்கும் அவருடைய மாமனார் சிவகுமாருக்கும் சண்டை என்று பரவி வந்த வதந்திகளுக்கும் பதிலடி கொடுத்திருக்கிறார்.
பொதுவாக பிரபலங்கள் வீட்டு செய்திகள் என்றாலே அதை தெரிந்து கொள்வதற்காக மக்கள் மத்தியில் தனி ஆர்வம் இருக்கிறது. அதனால் மக்களை கவர்வதற்காக சிலர் தேவையில்லாத வதந்திகளையும் பரப்பி வருகிறார்கள். சின்ன பிரச்சனை கூட இப்போது இருக்கும் சோசியல் மீடியா மூலமாக பூதாகரமாக வெடிக்க தொடங்கி விடுகிறது. ஒரு கட்டத்தில் பிரபலங்கள் வீட்டில் சோசியல் மீடியாவில் பரவி வரும் வதந்திகளால் கூட பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஆனால் சிலர் தங்களைப் பற்றி பரவி வரும் வதந்திகளை கண்டு கொள்வதில்லை. அதே போல தான் நடிகர் சிவகுமாரின் குடும்பத்தினரும் இருக்கின்றனர்.

காதல் திருமணம்
நடிகர் சிவகுமார் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி பரபரப்பு ஏற்படுத்துவார். அவருடைய மூத்த மகன் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். அந்த நேரத்தில் இவர்களுடைய திருமணம் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த தம்பதிக்கு இப்போது தியா மற்றும் தேவ் என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். சூர்யா, ஜோதிகா தங்களுடைய குழந்தைகளோடு மும்பையில் வசித்து வருகிறார். இதற்கு காரணம் சிவகுமார் தான் என்ற வதந்திகளும் பரவி வருகிறது.
சிவகுமாருக்கும், ஜோதிகாவுக்கும் பிரச்சனை
சிவகுமாருக்கும் ஜோதிகாவுக்கும் பிரச்சனை, இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாகத்தான் ஜோதிகா தன்னுடைய அம்மா வீட்டிற்கு குழந்தைகளையும் கணவரையும் கூட்டிக்கொண்டு போய்விட்டார் என்று பலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் இப்போது இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் ஜோதிகா சில புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். ஆனாலும் ரசிகர்கள் அதிலும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
ஜோதிகா மகள் ஸ்கூல் பங்க்ஷன்
அதாவது தியாவின் ஸ்கூல் பங்க்ஷனில் சிவகுமார் மற்றும் அவருடைய மனைவியும் கலந்து கொண்டிருக்கின்றனர். அதேபோல ஜோதிகாவின் பெற்றோரும் கலந்து கொண்டிருக்கின்றனர் அந்த புகைப்படங்களை ஜோதிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்திருக்கிறார். தன்னுடைய மகள் வாங்கிய பட்டத்துடன் ஜோதிகா மற்றும் சூர்யா இருவரும் புகைப்படங்களை எடுத்து இருக்கிறார்கள். அதை தொடர்ந்து ஜோதிகாவின் அப்பா தன்னுடைய மகளை முதல் நாள் ஸ்கூல்க்கு கொண்டு விட்டது, தன்னுடைய அம்மா ஸ்கூலில் விட்ட புகைப்படங்கள் மற்றும் இப்போதைய புகைப்படங்கள் மூன்றையும் சேர்த்து ஒரே புகைப்படமாக பகிர்ந்து இருக்கிறார்.

ஜோதிகா பகிர்ந்த போட்டோஸ்
அதை தொடர்ந்து சூர்யாவின் அப்பாவான சிவகுமார் தன்னுடைய பேத்தியை கொஞ்சுவது போன்ற புகைப்படத்தையும், பாட்டி குழந்தைக்கு ஸ்கூலுக்கு கூட்டிட்டு போவது போன்ற புகைப்படத்தையும் தற்போது பட்டம் வாங்கும்போது எடுத்த புகைப்படத்தையும் மெர்ஜ் செய்து ஒரு புகைப்படமாக பகிர்ந்திருக்கிறார். அதுபோல இன்னொரு புகைப்படத்தில் ஜோதிகாவின் பெற்றோர் மற்றும் சிவகுமார் அவருடைய மனைவியோடு தன்னுடைய பேத்தி தோள் மீது கை போட்டு எடுத்த புகைப்படமும் இருக்கிறது. இதனால் எங்கள் குடும்பத்திற்குள் சண்டை சச்சரவு எல்லாம் இல்லங்க, நீங்க தேவையில்லாத வதந்திகள் பேசுனது போதும் என்று சொல்வது போன்று ஜோதிகா இந்த புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications