ஜோதிகா, சூர்யா மீது நீளுதே வன்மம்.. மகனை விஜய் சேதுபதி கவனிப்பார்.. முளையிலேயே கிள்ளிடுங்க: பிரபலம்
சென்னை: தனுஷ், சூர்யா, ஜோதிகா இவர்கள் எல்லா இன்று உச்சத்தில் வளர்ந்த பிரபலங்கள்.. ஆனாலும் இன்றுவரை டார்கெட் செய்யப்பட்டு வருகின்றனர்.. இதையெல்லாம் விஜய் சேதுபதி மகனுக்கு நிச்சயம் சொல்வார்.. அதேபோல, சூர்யா சேதுபதி நடித்திருக்கும் படம் நன்றாக இருந்தால் பாராட்டுங்கள்.. நல்லா இல்லையென்றால் விமர்சனம் செய்யுங்கள்.. அதைவிட்டுவிடடு தனிமனித தாக்குதல் செய்துவது தவறானது" என்று தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார்.
Media circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "சூர்யா சேதுபதி படம் தற்போது ரிலீஸ் ஆகியிருக்கிறது.. அவர் மிகவும் சிறிய வயதுக்காரர்.. எனவே, அவர் மீதான விமர்சனங்களை எல்லாம் முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும்.. அப்படியென்ன தவறு செய்துவிட்டார்?

அப்பா பெயரை பயன்படுத்துகிறீரா? என்று கேட்டதற்கு அப்பா வேற, நான் வேற என்றுதானே சொன்னார்? இதுல ட்ரோல் செய்வதற்கு என்ன இருக்கு?
இதுல என்ன இருக்கு ட்ரோல் செய்ய
என் அப்பா ரொம்ப மோசம், எனக்கு 500 ரூபாய்தான் பாக்கெட் மணி தருகிறார் என்று இன்னொரு பேட்டியில் சூர்யா சொல்கிறார்.. அப்படியானால் பணத்தின் அருமையே அவருக்கு தெரியவில்லை என்றுதான் அர்த்தம்... ரூ.500-க்கும் மதிப்பு உள்ளது..
நாளெல்லாம் கூலி வேலை செய்யும் தொழிலாளர்களுக்கே, இந்த ரூ.500 இன்று கிடைப்பதில்லை.. அப்படியிருக்கும்போது, பணத்தின் மதிப்பு தெரியாதபடி, மகனை செல்லமாக விஜய் சேதுபதி வளர்த்திருக்கிறார்.. தனக்கு ரூ.500 மட்டுமே தருவதால், தன்னுடைய அப்பா ரொம்ப மோசம் என்று சூர்யா சொல்கிறார். அவர் சின்ன பிள்ளை என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்தான்..
தற்போதுதான் சினிமா துறைக்குள் வந்துள்ளார்.. இங்கே மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.. சூயிங்கம் சாப்பிட்டுட்டே மகன் பேசுவதை, விஜய் சேதுபதி பார்த்திருக்கவே செய்வார்.. மகனின் எதிர்காலம் கருதி, இனியாவது அட்வைஸ் செய்யக்கூடும்.
அட்வைஸ் செய்திருக்க வேண்டும்
சினிமாவுக்குள் வரும்போதே அட்வைஸ் செய்திருக்க வேண்டும்.. இப்போதுள்ள சூழ்நிலையை புரிந்து கொண்டு அட்வைஸ் செய்வார்.. மகனின் சூயிங்கம் வீடியோக்கள் நீக்கும்படி யார் சொல்லியிருந்தாலும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்..
தெரியாமல் செய்த தவறுக்கு யார் மன்னிப்பு கேட்டுவிட்டாலும் அதை அப்படியே விட்டுவிட வேண்டும்.. ஆனால், சோஷியல் மீடியாவில் குறிப்பிட்ட நபரை டார்கெட் செய்ய ஆரம்பித்துவிட்டால், அதை அப்படியே தொடர்கிறார்கள்.. இது தவறானது..
விஜய்யின் விஷ்ணு படத்திற்கு நான்தான் தயாரிப்பாளர்.. அப்போது விஜய்க்கும், அவரது அப்பா எஸ்ஏசி-க்கும் இடையே செட்டிலேயே நிறைய சண்டை வரும்.. 60., 70 பேர் செட்டில் இருப்பார்கள்..
மனஸ்தாபம்
இத்தனைக்கும் அது பெரிய சண்டையெல்லாம் கிடையாது.. சின்ன மனஸ்தாபம்தான்வரும்.. ஆனால், அப்பா மீது கோபித்து, காரை எடுத்துக்கொண்டு வீட்டுக்கே சென்றுவிடுவார்.. பிறகு அவங்கம்மா ஷோபா, இன்னொரு கார் எடுத்து கொண்டு பின்னாடியே சென்று, விஜய்யை சமாதானம் செய்து, மீண்டும் ஸ்பாட்டுக்கு அழைத்து வந்து நடிக்க வைப்பார்..
அதுவரை 2 மணி நேரமானாலும் ஷூட்டிங் நடக்காது.. விஜய் வரும்வரை எஸ்ஏசி ஒரு ஓரமாக சேர் போட்டுட்டு உட்கார்ந்திருப்பார்.. இப்படியெல்லாம் நடக்கத்தான் செய்யும்.. இதற்கெல்லாம் நேரடி சாட்சி நான்தான்.
காரில் கிளம்பி சென்ற விஜய்
அந்த காலகட்டத்தில் மகனுக்கு பல்வேறு அறிவுரைகளை எஸ்ஏசி தந்திருக்கிறார்.. ஷூட்டிங்குக்கு நேரத்துக்கு போகணும் புரொடியூசர் பணத்தை தேவையில்லாமல் விரயம் செய்யக்கூடாது, ஒவ்வொரு விஷயத்திலும் கவனமாக இருக்கணும், டிசிப்பிளின், உட்பட அனைத்தையும் 20 வயது நிரம்பிய விஜய்க்கு, ஒரு
குழந்தை போல பாடம் எடுத்தார் எஸ்ஏசி.. இப்படியெல்லாம் எஸ்ஏசி வழிகாட்டியதால்தான், இன்று விஜய் ஒரு நெறியாளராக, பண்பாளராக நடந்து கொள்ள முடிகிறது.. எந்த ஷூட்டிங்கிலும், எந்த காலத்திலும் இதுவரை விஜய் தொந்தரவு செய்ததே கிடையாது..
தனுஷ் மீதான வன்ம தாக்குதல்
அதுபோல, சூர்யாவுக்கும், விஜய் சேதுபதி வழிகாட்டுவார்.. பல துன்பங்களை அனுபவித்து படிப்படியாக மெல்ல உயர்ந்துள்ளதால், அனைத்தையும் மகனுக்கும் சொல்லித்தருவார்.. இதற்கு கால அவகாசத்தையும் நாம் தரவேண்டும்.
சோஷியல் மீடியாவும் மாற வேண்டும்.. ஒருவருக்கு ஒருவரை பிடிக்கவில்லையானால், பிஆர் டீம் வைத்து, மற்றொருவரை டார்கெட் செய்து காலி செய்கிறார்கள்.. இன்று வளர்ந்த நடிகரான தனுஷூக்கே இந்த பிரச்சனை உள்ளது.. இந்த வன்ம தாக்குதலைதான் தனுஷ், சமீபத்தில் மேடையிலேயே வெளிப்படுத்தியிருந்தார்..
சூர்யா, ஜோதிகா
அதுபோலவேதான் ஜோதிகா சூரியாவும்.. ஜோதிகா கோயில் பற்றி சொன்ன கருத்து, நீட் தேர்வு பற்றி சூர்யா சொன்ன கருத்து, இவைகளை வைத்து, அன்று முதல் இப்போதுவரை, ஒரு குரூப், சூர்யா - ஜோதிகாவை டார்கெட் செய்தபடி உள்ளது..
தனுஷ், சூர்யா, ஜோதிகா இவர்கள் எல்லாம் இன்று வளர்ந்துவிட்டார்கள்.. ஆனாலும் டார்கெட் செய்யப்பட்டு வருகின்றனர்.. இதையெல்லாம் விஜய் சேதுபதி மகனுக்கு நிச்சயம் சொல்வார்.. அதேபோல, சூர்யா சேதுபதி நடித்திருக்கும் படம் நன்றாக இருந்தால் பாராட்டுங்கள்.. நல்லா இல்லையென்றால் விமர்சனம் செய்யுங்கள்.. அதைவிட்டுவிட்டு தனிமனித தாக்குதல் செய்துவது தவறானது" என்று தெரிவித்துள்ளார்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம












Click it and Unblock the Notifications