"பச்சை மலை சாமி".. அப்பா பாட.. மகன் ரசிக்க.. இன்னிக்கு சாயந்திரம் மறந்துடாதீங்க
சென்னை: நடிகரும் இயக்குநரும், இந்தியாவிலேயே மிகச் சிறந்த கதாசிரியராக அறியப்படுபவருமான கே. பாக்யராஜும், அவரது மகன் சாந்தனுவும் இணைந்து தந்தையர் தின ஸ்பெஷல் புரோகிராம் பண்ணிருக்காங்க.
இன்று மாலை 5 மணிக்கு இந்த ஸ்பெஷல் புரோகிராமை சாந்தனுவின் யூடியூப் சானலில் பார்க்கலாம். அதுதொடர்பான புரோமோதான் இப்போது ஹாட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது.
கே.பாக்யராஜ் பெரிய இயக்குநர், தயாரிப்பாளர்,நடிகர், கதாசிரியர்.. என பல முகம் கொண்டவர். அவரது மகன் சாந்தனு நடிப்பில் பெரி அளவில் ஜொலிக்கவிட்டாலும் கூட மிகச் சிறந்த டான்ஸராக உருவெடுத்துளளவர். அவரது மனைவி கிகியும் கூட நல்ல டான்ஸ் ஆடக் கூடியவர்தான். டான்ஸ் அகாடமியும் வைத்துள்ளார்.

மகன் சாந்தனு
சாந்தனு தற்போதுதான் உரிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார். அதுதான் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படம். அந்தப் படத்தில் முக்கியமான வேடத்தில் சாந்தனு நடித்துள்ளார். படம் வெளிவந்தால் இத்தனை காலமாக அங்கீகாரம் இல்லாமல் போய்க் கொண்டுள்ள அவரது திரையுலக வாழ்க்கைக்கு நிச்சயம் பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என அவரது ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

காதல் மனைவி
இந்த நிலையில்தான் சமீபத்தில் தனது மனைவியுடன் இணைந்து ஒரு யூடியூப் சானல் ஆரம்பித்தார் சாந்தனு. முதலில் ஒரு ஷார்ட் பிலிம் எடுத்தனர். அதில் மனைவியை விழுந்து விழுந்து உபசரிக்கும், தாங்கும் கணவராக வந்தார் சாந்தனு. அந்த குறும்படம் வைரலானது. நிஜமாகவே மனைவியை தாங்கக் கூடியவர்தான் சாந்தனு என்பதால் இந்த குறும்படம் ரொம்பவே இயல்பாக அமைந்து போனது.

அம்மா மாமியாருடன் பேட்டி
இந்த படத்துக்குப் பிறகு தனது தந்தை மற்றும் மாமியாரை வைத்து பேட்டி எடுத்தனர் சாந்தனு தம்பதியினர். அதுவும் நல்லாவே போச்சுங்க. இப்போது தனது தந்தை கே.பாக்யராஜை தந்தையர் தினத்துக்காக ஒரு சுவாரஸ்யமான பேட்டி எடுத்துள்ளார் சாந்தனு. அதை இன்று மாலை 5 மணிக்கு போடுகிறார்கள். அதற்கான புரோமோதான் இப்போது போய்க் கொண்டிருக்கிறது.

தந்தையர் தின ஸ்பெஷல்
தானே இசையமைத்து தானே பாடிய பச்சை மலை சாமி ஒன்னு என்ற பாடலை கே.பாக்யராஜ் பாடுகிறார்.. அதை ரசித்துக் கேட்கிறார் சாந்தனு. இதுதான் அந்த புரோமாவில் உள்ளது. இடையில் ஓரிரு படங்களுக்கு கே.பாக்யராஜே இசையமைத்துக் கொண்டார். அவை நன்றாகவும் போயின. அந்த அனுபவத்தைத்தான் இந்த நிகழ்ச்சியில் பாக்யராஜ் பகிர்ந்துள்ளார் போல. அப்படித்தான் தெரிகிறது பார்ப்பதற்கு. நிகழ்ச்சியைப் பார்த்து விட்டு வருவோம்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications