அக்கா ஹெலிகாப்டரில்தான் ஷூட்டிங் போவார்! கப்பலும் இருந்தது.. கே.ஆர்.விஜயாவின் சகோதரி பெருமிதம்
சென்னை: அக்கா கே.ஆர்.விஜயா குறித்து வதந்தியான செய்திகளை யாரும் பரப்பாதீர்கள் என அவருடைய சகோதரி கே.ஆர். வத்சலா கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து கே.ஆர் விஜயாவின் சகோதரி கே.ஆர். வத்சலா கலாட்டா தமிழ் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: என் அக்கா வீட்டை விற்று விட்டார்கள், அவர் மரணமடைந்துவிட்டார்கள் என்றெல்லாம் பலர் செய்தி வெளியிட்டனர். ஆனால் என் அக்கா உடற்பயிற்சி, பூஜை, புனஸ்காரம் என நன்றாக இருக்கிறார்.

அக்கா இந்த செய்தி குறித்தெல்லாம் கவலையே படமாட்டார்கள். நானும் என் அக்காவும் சாப்பாட்டை பற்றியும் கோயிலுக்கு செல்வதை பற்றியும்தான் பேசுவோம். அக்கா 50 க்கும் மேற்பட்ட சாம்பார்களை வைப்பார்கள். என் அக்கா ஷூட்டிங் போகுறதுக்காகவே விமானம் வைத்திருந்தார். 4 கப்பல்களையும் வைத்திருந்தார்.
எனக்கு நெருங்கிய தோழி சாந்தி வில்லியம்ஸ், சத்யபிரியா, குயிலி, நளினி உள்ளிட்டோர்தான். நடிகர் விவேக்கின் இறப்பு என்னை மிகவும் பாதித்தது. அவரது கொள்கைகளை கேட்டதும் எனக்கு அவர் மீதான மதிப்பும் மரியாதையும் அதிகரித்தது. விஜயகாந்த் மரணமும் என்னை பாதித்தது.
அவர் உயிருடன் இருக்கும் போது அவரை போய் பார்க்க வேண்டும் என நான் நினைத்திருந்தேன். ஆனால் முடியவில்லை. கேரவனை முக்கியமானவர்கள் என்றில்லாமல் அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்ற வழக்கத்தை கொண்டு வந்தார். எல்லார் மீது மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டார்.
அது போல் ஸ்ரீவித்யாவின் இறப்பு! நானும் அவரும் நிறைய மலையாள படங்களில் நடித்துள்ளோம். இருவரும் சேர்ந்து கடைசியாக நடித்த படம் லண்டன். அப்போது அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். மருத்துவம் வளர்ந்துவிட்டதால் மீண்டு வருவேன் என சொல்லிவிட்டு சென்றார். ஆனால் கொஞ்ச நாட்களாக அவரை பார்க்க முடியவில்லை.
அவர் திருவனந்தபுரத்தில் இருப்பதாக கேள்விப்பட்டு போன் செய்து பார்க்க வருவதாக கூறினேன். அவர் வேண்டாம் என கூறிவிட்டார். உடல்நலம் குன்றிய தன்னை யாரும் பார்க்க வேண்டாம் என நினைத்து விட்டாரா என தெரியவில்லை. ஆனால் எனக்கு சில நாட்களில் அவர் இறப்புச் செய்தி கிடைத்தது. என் கணவரை நான் விவாகரத்து செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. என் குழந்தைகளும் எனக்கு ஆறுதலாக இருந்தார்கள்.
நானும் அவரும் சேர்ந்து 28 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தோம். நான் திருமதி செல்வம் சீரியலில் நடித்துக் கொண்டிருந்த போதுதான் எனக்கு திருமணம் ஆனது. இவ்வாறு கே.ஆர்.வத்சலா தெரிவித்தார்.
தெய்வநாயகி என்ற பெயரில் பிறந்தவர் கே.ஆர்.விஜயா. எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்டோருடன் ஜோடியாக நடித்தார். புன்னகை அரசி என்ற பட்டப் பெயருடன் 60 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். இவர் 1966ஆம் ஆண்டு தொழிலதிபர் மடதில் வேலாயுதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதுவரை 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி சீரியல்களிலும் நடித்துள்ளார்.
கே.ஆர்.விஜயாவின் கணவர் 88-க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார். அதில் 75 சதவீத படங்கள் வெற்றி பெற்றன. இதனால் கே.ஆர். விஜயா நல்ல வீடு வாசலுடன் சொத்து சுகத்துடன் அமோகமாக வாழ்ந்து வருகிறார். ஆனால் அவர் வீட்டை விற்றுவிட்டதாகவும் அவர் இறந்தேவிட்டதாகவும் பல வதந்திகள் பரவியது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications