Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இறந்த ஒரே மகளை பற்றி உருக்கமாக போஸ்ட் போட்ட பாடகி சித்ரா.. நெகிழ வைத்த வார்த்தை! குவியும் ஆறுதல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் இசை உலகின் எவர்கிரீன் குரலாக திகழும் கே. எஸ். சித்ரா, தனது ஒரே மகள் நினைவு நாளில் பகிர்ந்த பதிவு தற்போது ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளது.

தன்னுடைய மகளுடைய புகைப்படத்தை பகிர்ந்து சித்ரா அந்த பதிவில், "நீ இனி என்னுடன் இல்லாதது எனக்கு என்றும் வலியாகவே இருக்கும்... ஆனால் நாம் மீண்டும் சந்திக்கும் நாள்வரை, நீ எப்போதும் என் இதயத்தில் வாழ்ந்துகொண்டே இருப்பாய்." என்று உருக்கமாக குறிப்பிட்டு இருக்கிறார். இதற்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல பிரபலங்களும் அவருக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர்.

K S Chithra Nandana Chithra Singer

மகள் நந்தனாவின் துயரமான பிரிவு

கே. எஸ். சித்ராவின் ஒரே மகள் நந்தனா, 2011 ஆம் ஆண்டு துபாயில் நடந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தார். அப்போது அவருக்கு வயது வெறும் 8 மட்டுமே. Gulf News Music Awards நிகழ்ச்சிக்காக துபாயில் இருந்தபோது, நீச்சல் குளத்தில் தவறி விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் சித்ராவின் வாழ்க்கையை முழுமையாக மாற்றியது.

இந்த துயர சம்பவம் நடந்து இப்போது 15 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. இருந்தாலும், அந்த வலி இன்னும் குறையாமல் இருப்பதை அவரின் இன்றைய பதிவே காட்டுகிறது.

பழைய பேட்டிகளில் வெளிவந்த உணர்வுகள்

பல பேட்டிகளில் கே. எஸ். சித்ரா தனது மகளைப் பற்றி பேசும்போது எப்போதும் உணர்ச்சிவசப்படுவார். "நந்தனா எனக்கு கிடைத்த ஒரு அதிசயம். அவள் தான் என் உலகம்" என்று அவர் கூறியிருந்தார். மேலும், "அவள் இல்லாத வாழ்க்கைக்கு பழகுவது மிகவும் கடினம்" என்றும் அவர் பகிர்ந்துள்ளார்.

மகள் இறந்த பிறகு சில காலம் இசையிலிருந்து விலகி இருந்த அவர், பின்னர் மெதுவாக மீண்டும் பாடல்களில் ஈடுபட்டார். அந்த இசையே அவருக்கு ஒரு ஆறுதலாக மாறியது. ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் அவரை சிரித்த முகமாக பார்க்கும் பலருக்கும் அவருடைய வாழ்க்கையில் இருக்கும் சோகம் தெரியாது. அதனாலயே அவர் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் குழந்தைகளுடன் குழந்தையாக மாறிவிடுகிறார்.

இசையில் சாதனைகள்

கே. எஸ். சித்ரா 40,000க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் அவரது குரல் ஒலித்துள்ளது. அவரது பிரபலமான பாடல்கள் எப்பவுமே ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கும்

அவருக்கு 6 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. அதோடு பத்மஸ்ரீ, பத்மபூஷண் போன்ற உயரிய விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன. இசை உலகில் அவர் சாதித்த உயரம் மிகப்பெரியது.

ஒரு கனவும், ஒரு இழப்பும்

சித்ரா தனது கணவர் விஜயசங்கருடன் அமைதியான குடும்ப வாழ்க்கை வாழ்ந்து வந்தார். நீண்ட காலம் குழந்தை இல்லாமல் இருந்த பிறகு பிறந்த நந்தனா, அவர்களுக்கு ஒரு பெரிய வரமாக இருந்தார். அதனால் தான், அந்த இழப்பு அவர்களுக்கு மிகப்பெரிய மன உளைச்சலாக மாறியது.

சமூக வலைத்தளங்களில் கண்ணீர் அஞ்சலி

இன்று அவர் வெளியிட்ட இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர். "Stay strong Chitra ma" போன்ற கருத்துகள் அந்த பதிவின் கீழ் அதிகமாக காணப்படுகின்றன. அந்த ஒரு பதிவு பலரின் மனதையும் உருக்கியுள்ளது.

ஒரு பாடகியின் குரல் உலகத்தை கவரலாம். ஆனால் ஒரு தாயின் மனதில் இருக்கும் வலியை எந்த வார்த்தைகளாலும் முழுமையாக சொல்ல முடியாது. கே. எஸ். சித்ரா பகிர்ந்த இந்த பதிவு, "நினைவுகள் மட்டும் இருந்தாலும், அன்பு ஒருபோதும் குறையாது" என்பதைக் நினைவூட்டுகிறது. காலம் கடந்து சென்றாலும், சில இழப்புகள் என்றும் புதியதாகவே இருக்கும் என்பது அதை அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+