விபத்தில் அப்பா அம்மா திடீர் இறப்பு.. பிறகு நடந்த கொடுமைகள்! காற்றுக்கென்ன வேலி நடிகை உருக்கம்
காற்றுக்கென்ன வேலி சீரியலில் ரூபா கேரக்டரில் நடித்த டயானா தன்னுடைய சிறுவயது சோகங்களை பகிர்ந்திருக்கிறார்.
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடிகை டயானா ரூபா கேரக்டரில் நடித்து இருந்தார்.
சிறு வயதில் தன்னுடைய தாய் தந்தையரை விபத்தில் பறி கொடுத்த டயானா தன்னுடைய சோகங்களை பற்றி சமீபத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
உடல் எடை அதிகமாக இருக்கிறேன் என்று தான் சந்தித்த பல்வேறு துயரங்களை பற்றி உருக்கமாக பேட்டி ஒன்றில் டயானா பேசி இருக்கிறார்.

காற்றுக்கென்ன வேலி ரூபா
விஜய் டிவியில் சமீபத்தில் காற்றுக்கென்ன வேலி சீரியல் முதல் பாகம் முடிவடைந்தது. இரண்டாவது பாகம் தொடங்கியிருக்கிறது. இந்த சீரியலில் ரூபா கேரக்டரில் நடிகை டயானா நடித்து இருந்தார். இந்த சீரியலில் நடித்த நடிகர்கள் பலர் ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்து விட்டது போல,இவரும் பிரபலமடைந்திருக்கிறார். இந்த நிலையில் டயானா தற்போது பேட்டி ஒன்றை கொடுத்திருக்கிறார். அந்த வீடியோவை ரசிகர்கள் பலர் பகிர்ந்து அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். அந்த பேட்டியில் அவர் தன்னுடைய சொந்த ஊர் கோவை தான். என்னுடைய வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைந்தது மீடியா துறை தான் என்று கூறியிருக்கிறார்.

நடிக்க கிடைத்த வாய்ப்பு
மேலும் டயானா கூறுகையில், ஒரு விபத்தில் என்னுடைய அப்பா அம்மா இருவருமே இறந்துவிட்டனர். சிறுவயதிலேயே இருந்து எனக்குள் தாழ்வு மனப்பான்மையுடன் குண்டாக இருக்கிறோம் என்றே இருந்தேன். பருமனாக இருக்கும் பெண்கள் சந்திக்கும் அனைத்தையும் நானும் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே சந்தித்துதான் வந்திருக்கிறேன். பலர் என்னிடம் உன்னை யார் திருமணம் செய்து கொள்வார்கள் என்று கிண்டலாக பேசுவார்கள். ஆனால் என்னுடைய வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றியது நடிப்புதான். சினிமாவில் தான் என்னுடைய வாழ்க்கையே ஆரம்பித்தது. அதற்குப் பிறகு பிளாக் பசங்க youtube சேனலில் நடித்துக் கொண்டிருக்கும் போது அதன் மூலமாகத்தான் காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்று கூறியிருக்கிறார்.

திடீரென்று நீக்கம்
அதைத்தொடர்ந்து சீரியலில் நடிக்க தொடங்கிய பிறகு இரண்டு வருடங்கள் நன்றாக சென்றது. ஆனால் இப்போது என்னை அந்த தொடரில் இருந்து நீக்கிவிட்டனர். அதற்கு காரணம் 2021 ஆம் ஆண்டு பெரிய படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் எனக்கு சீரியல் மூலம் தான் பிரபலம் கிடைத்தது என்பதால் நான் இந்த அளவிற்கு சீரியலுக்கு முக்கியத்துவம் கொடுத்தேன். ஆனால் தேதி பிரச்சினையாக இருந்தது. அவர்கள் எனக்கு ஒத்துழைப்பு கொடுத்து இருக்கலாம், எனக்கும் வாழ்க்கை இருக்கிறது. எந்த பிரச்சனை வராமல் பார்த்துக் கொண்டேன். ஆனால் ஏதோ சின்ன போட்டி இருந்திருக்கிறது. அதனால் தான் என்னை சீரியலில் இருந்து நீக்கிவிட்டனர். சீரியலில் நடிக்கும் சிறிய கதாபாத்திரங்கள் ரெண்டு அல்லது மூன்று நாட்கள்தான் நடிப்பார்கள் அதற்காக பெரிய சம்பளமும் கிடைக்காது.

வேலை கிடைக்கவில்லை
அதுமட்டுமில்லாமல் சின்ன கேரக்டரில் நடிக்கும் எங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது ரைட்டர் கையில் தான் இருக்கிறது. என்னதான் இருந்தாலும் இதுவும் ஒரு தனியார் நிறுவனம் தானே!? என்னை காற்றுக்கென்ன வேலி சீரியலில் இருந்து நீக்கிய பிறகு எனக்கு பெரியதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. பல இடங்களில் வேலை தேடி அலைந்தேன். பின்னர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. வேலை செய்து கொண்டிருக்கும் போது எனக்கு மீண்டும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வேலைக்கு போனால் நல்ல வருமானம் ஆனால் அதே நடிக்க போனால் குறைவான வருமானம் தான். இருந்தாலும் பரவாயில்லை என்று நடிக்க வந்து விட்டேன் என்று கூறி இருக்கிறார். ஏற்கனவே சமீபத்தில் தன்னுடைய திறமைக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று தான் காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகர் ஹரி திடீர் தற்கொலை செய்திருந்த நிலையில் தற்போது இந்த சீரியலில் நடிகையும் தன்னுடைய நிலையை விளக்கி இருக்கும் நிலையில் ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
-
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
முத்துவின் விபரீத முடிவு.. சிந்தாமணியின் சூழ்ச்சியை முறியடிக்க முடியுமா? சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications