செம்ம டைட்.. சூப்பர் க்யூட்.. தகதகக்கும் காவியா.. படபடக்கும் ஃபேன்ஸ்!
சென்னை: ஒரு பக்கமாக ஆடையை குறைத்து, ஒரு பக்கமாக இழுத்து மூடியிருக்கும் உடையில் காவியா அறிவுமணி சும்மா காவியம் படைத்திருக்கிறார்.
வெள்ளித்திரை நடிகைகளுக்கு சளைத்தவரல்ல என்று சின்னத்திரை நடிகைகள் பலர் நிரூபித்து வருகின்றனர். அதில் காவியா அறிவுமணி சும்மா பட்டையை கிளப்பி வருகிறார்.
திறமையில் மட்டுமல்ல அழகிலும் அனைத்தும் கற்றுத்தேர்ந்த அறிவாளியாக தான் காவியா இருக்கிறார்.

கண்களும் கவிதை பேசுதே
சின்னத்திரை நடிகையாக இருந்தாலும் சரி வெள்ளித்திரை நடிகையாக இருந்தாலும் சரி மாடலிங்கில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை நிரூபித்து வருகின்றனர். அதில் காவியா அறிவுமணியும் ஒருவர். இவர் சீரியல்களிலும் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் மாடலிங்கில் கொடிகட்டி பறந்து வருகிறார். அதற்காகவே பார்த்துப் பார்த்து பல போட்டோசூட்களையும் எடுத்து வருகிறார். இதற்கு முன்பு இவர் இன்ஸ்டாகிராமில் பலவிதமான போட்டோக்களை போஸ்ட் போட்டு இருக்கிறார். ஆனால் அதையெல்லாம் விட தற்போது ஜிவ்வென உடையில்...சும்மா...ரசிகர்களை சிலிர்க்க வைத்திருக்கிறார்.

முல்லை நல்லாவே வாசம் வீசுது
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் முல்லை கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் இதற்கு முன்பு இதே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலில் அஞ்சலி கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் அந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும்போது தான் இவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதுவும் இந்த சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்த விஜே சித்ரா இறந்து போனதும், அவர் நடித்து வந்த முல்லை கேரக்டரில் இவர் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். ஆரம்பத்தில் இரண்டு சீரியல்களிலும் நடித்து கொண்டிருந்த இவரால் பின்பு பாரதிகண்ணம்மா சீரியலில் தொடர்ந்து நடிக்க முடியவில்லை. அதனால் அந்த சீரியலை விட்டு வெளியேறி விட்டார்.

மாடலிங்கில் பிஸி தான்
தற்போது முழுநேரமாக பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கவனத்தை செலுத்தி வருகிறார். இவர் சீரியலுக்கு வருவதற்கு முன்பு கல்லூரிப் படிப்பை முடித்ததுமே மாடலிங்கில் காலடி எடுத்து வைத்து விட்டார். அதன் மூலமாகத்தான் இவருக்கு சீரியல் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனாலும் தற்போது சீரியலில் இவர் ரசிகர்களின் மனதில் பதிந்து விட்டார். ஆனாலும் தான் வந்த இடத்தை மறந்து விடாமல் கிடைக்கும் நேரங்களில் மாடலிங் போட்டோஷூட் களையும் எடுத்து வருகிறார். அந்த மாதிரிதான் தற்போது இவர் எடுத்த போட்டோக்கள் இன்ஸ்டாகிராமில் செம வைரலாக பரவி வருகிறது.

இம்சிக்கும் இணையதள ரசிகர்கள்
காவியாவிற்கு சீரியல் ரசிகர்களை போலவே சமூக வலைத்தளத்திலும் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் ஒரு போஸ்ட் போட்டதும் அதற்கு லைக்கும் கமெண்டும் குவிந்து வரும். அந்த மாதிரி தான் தற்போதைய போட்டோ கூட கமெண்ட் மலை போல குவிந்து வருகிறது. அதுவும் இந்த மாடர்ன் உடையில் குட்டி தேவதையாக வலம் வந்து கொண்டிருப்பதை பார்த்து பலர் விதவிதமாக ரசித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இவர் நயன்தாராவின் டூப் போலவே இருக்கிறார் என்று பலர் கருத்துக்களை போட்டிருக்கின்றனர். லேட்டஸ்ட் போட்டோ விற்கும் நயன்தாராவின் தங்கச்சி கெட்டப்பில் நடிப்பதற்கும் நீங்கதான் செட் ஆவிங்க என்று பலர் கொஞ்சுகிறார்கள்

மின்னும் உடையில் கலக்கல்
மாடர்ன் உடையில் போஸ்ட் போட்டு சிறிது நேரத்திற்குள்ளேயே வெள்ளை உடையில் மனதை கொள்ளை கொண்டிருக்கிறார். நார்மலாக சல்வாரில் கேஷுவலாக பார்த்து இளைஞர்களை இதயத்தை சுக்குநூறாக உடைத்து விட்டாராம். இவருடைய இந்த போட்டோவிற்கு பலர் லைக்குகளை அள்ளி தெளித்து இருக்கிறார்கள். ஆனாலும் இப்படி எப்போவுமே கேஷுவலாக போஸ்ட் போடுங்க என்று பலர் கேட்டு வருகின்றனர். அடடா மாடர்ன் உடையில் மட்டுமல்ல, சாதாரண உடையில் வந்தால்கூட ரசிகர்கள் இவர் மீது வைத்திருக்கும் பேரன்பு தெரிகிறதே என்று நமக்குத் தோன்றுகிறது. அந்த அளவிற்கு இவர் எந்த போஸ்ட் போட்டாலும் அதற்கு உருகி உருகி கமெண்டுகளை ரசிகர்கள் கொட்டுகிறார்கள்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications