சிங்கம்னாங்க.. எலிக் குட்டி மாதிரி இருக்கு.. வேகமும் இல்லை... வீரியமும் இல்லை!
சென்னை: விஜய் டிவியில் கடந்த திங்கள் முதல் ஒளிபரப்பாகிவரும் சீரியல் கடைக்குட்டி சிங்கம். சூப்பர் டூப்பர் ஹிட்டான படத்தின் பேரை சீரியலுக்கு வச்சிருந்ததுல சீரியல் எப்படி இருக்குமோன்னு எதிர்பார்ப்பு அதிகமாத்தானே இருக்கும்.
முத்து, மருது இருவரும் கிராமத்து பண்ணையார் பணக்கார வீட்டு பிள்ளைகள். நம்ம மருத்துதான்ங்க கடைக்குட்டி சிங்கமா வரார். மீசையை அப்பப்போ முறுக்கிகிட்டு என்னவோ மேல்நாக்குல பேசற மாதிரி அந்த ஊர் கிராமத்து பாஷையாம். ..அதை பேசறார்.

டப்பிங்குல யாராவது கூட இருந்து அவருக்கு பாஷை நல்லா சொல்லித் தர சொல்லுங்க. பார்க்கறதுக்கு லொகேஷன்ஸ் நல்லாத்தான் இருக்கு. ஆனா, மெயின் விஷயமே கதைதானே அதுல கவனம் செலுத்தினா மக்களின் எதிர்பார்ப்பை ஓரளவுக்கு நிறைவேத்தலாம்.

எடுத்த உடனே வெளி நாட்டுல படிச்சுட்டு வர முத்துக்கு வீட்டுல மீனாட்சியப் பேசி முடிச்சுட்டோம்னு சொல்றாங்க. என்னங்க கலாச்சாரம் இது, இப்போ கிராமத்துல கூட மகனிடம் சொல்லாமல், சம்மதம் கேட்காமல் இப்படிப்பட்ட திருமணங்கள் நிச்சயிப்பதில்லை.

மாப்பிள்ளை என்னடான்னா அவ்ளோ அழகா மகாலட்சுமி மாதிரி இருக்கற பொண்ணுகிட்ட இந்த திருமணத்துல எனக்கு இஷ்டம் இல்லைன்னு சொல்றான். பொண்ணுக்கு என்னடா கொறைச்சல்னு நாம கேட்க முடியுமா... அவன் மனசுல யாரோ என்னவோ...

நிஜத்துல நடக்கறதைத்தான் கதையா சொல்லுவாங்கன்னு பலரும் சொல்ல கேட்டு இருப்போம். அதே மாதிரி காலம் மாறுது... கடைக்குட்டி சிங்கம் படத்துல கார்த்தி கதாபாத்திரம் மனசுல நின்ன மாதிரி, இந்த சீரியலில் மருது கதாபாத்திரத்தை நிக்க வைங்கப்பா...மக்கள் நல்ல சீரியல் பார்க்கத்தான் காத்திருக்காங்க.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications