குடியரசு தின ஸ்பெஷல் ஆக கலைஞர் டிவியில் இயக்குனர் மோகன் ஜியின் பகாசூரன்.. எத்தனை மணிக்கு தெரியுமா?
சென்னை: வரும் ஜனவரி 26 குடியரசு தினத்தை முன்னிட்டு கலைஞர் டிவியில் பல சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக இருக்கிறது. அதில் பகாசூரன் திரைப்படமும் ஒளிபரப்பாக இருக்கிறது.
வரும் வெள்ளிக்கிழமை குடியரசு தினத்தை முன்னிட்டு தொலைக்காட்சிகளில் பல்வேறு சிறப்பு திரைப்படங்கள் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிலையில் கலைஞர் டிவியில் இயக்குனர் மோகன் ஜி சத்ரியன் இயக்கத்தில் வெளியான பகாசூரன் திரைப்படம் ஒளிபரப்பாக இருக்கிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் கலைஞர் தொலைக்காட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு பல புதிய நிகழ்ச்சிகளும் சூப்பர் ஹிட் திரைப்படங்களும் ஒளிபரப்பாக இருக்கிறது. அதன்படி வருகிற ஜனவரி 26 ஆம் தேதி பிற்பகல் 1:30 மணிக்கு மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன், நட்டி நட்ராஜ் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான பகாசூரன் திரைப்படம் ஒளிபரப்பாக இருக்கிறது.
அதுபோல இந்த திரைப்படத்தை மோகன் ஜி எழுதி இயக்கி 2023 ஆம் ஆண்டு வெளியாகி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் மன்சூர் அலிகான், ராதாரவி, சரவண சுப்பையா போன்ற பிரபலங்கள் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். இந்த திரைப்படமானது பிப்ரவரி 17,, 2023 அன்று வெளியிடப்பட்டது.
அந்த நேரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த திரைப்படம் இப்போது மீண்டும் சின்னத்திரையில் ஒளிபரப்பாக இருக்கிறது. அதைத்தொடர்ந்து கலைஞர் டிவியில் ஆர்ஜே பாலாஜி நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கும் சிங்கப்பூர் சலூன் என்ற திரைப்படத்தின் சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அதுபோல அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் பங்கேற்கும் நம்ம வீட்டு நட்சத்திரம் என்ற சிறப்பு நிகழ்ச்சியும் ஒளிபரப்பாக இருக்கிறது. அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் இருவரும் பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் நம்ம வீட்டு நட்சத்திரம் என்ற நிகழ்ச்சியில் தங்களுடைய திருமண வாழ்க்கையில் நடந்த பல கலகலப்பான நிகழ்வுகளை அதில் பகிர்ந்து இருக்கின்றனர்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications