KPY9: கல்பாக்கம் கன்டஸ்டன்டை கதி கலங்க விட்ட வனிதா விஜயகுமார்
சென்னை: விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு சீசன் 9 சூப்பர் நடுவர்களுடன் இனிதே துவங்கியது. முதல் நாளே மதுரை முத்துவின் ஜோக்ஸ் வாய்விட்டு சிரிக்க வச்சு நிகழ்ச்சியை ரசிக்க வைத்தது.
வனிதா விஜயகுமார் தனது கம்ஃபர்ட் சோனில் இருந்து வெளியில் வரவே நிகழ்ச்சியின் இறுதி வரை என்று நேரம் எடுத்தது. அதே மனப்பான்மையில்தான் கல்பாக்கத்தில் இருந்து போட்டியாளராக வந்த ஒரு பெண்ணை கொஞ்சமும் பேச விடாமல் செய்தும் அந்த பெண் சளைக்காமல் தனது காமெடியை முடித்துவிட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.
நிகழ்ச்சியின் இறுதியில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி எதிர்பாராத ஒரு புது அனுபவத்தை கொடுத்ததாக வனிதா விஜயகுமார் கூறினார். ரம்யா பாண்டியன் ரொம்பத் தெளிவாக இருந்தார். இடையூறிலும் கல்பாக்கம் பெண் பேச்சை நிறுத்தாமல் முடித்ததை பாராட்டி பேசினார்.

மதுரை முத்து
மதுரை முத்துவின் காமெடிக்கு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ரசிகர்கள். மனம் அமைதி இல்லாத நேரத்தில் மதுரை முத்துவின் காமெடியை யூடியூபில் பார்த்து சிரித்து மகிழ்வதாக பலரும் கூறி வருகின்றனர். அப்படித்தான் மதுரை முத்துவின் காமெடிகள் கேட்டதையே எத்தனை முறை கேட்டாலும் அவர் வாயால் புது நிகழ்ச்சியில் மீண்டும் கேட்கும்போது அவரின் பழைய ஜோக்குகள் கூட இன்றுவரை புதிதாகவே இருக்கின்றன.

மதுரை முத்து ஆதவன்
மதுரை முத்துவுடன் ஆதவன் சேரும்போது அந்த கம்போ நன்றாக இருக்கிறது. சன் டிவியின் காமெடி ஜங்க்ஷன் நிகழ்ச்சியில் இருவரும் கைக்கோர்த்து, இப்போது கலக்கப் போவது யாரு சீசன் 9ல் இணைந்து இருக்கிறார்கள். ஞாயிறு மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு முதல் நாளிலேயே பலரும் பெரும் ஆதரவு கொடுத்து ரேட்டிங்கை எகிற விட்டு இருக்கிறார்கள்.

சொல்ல வேணாம்னு
மதுரை முத்து மொக்கை ஜோக் மாதிரி ஒரு ஜோக்கை சொல்லி பின்னர் இந்த ஜோக்கை சொல்ல வேணாம்னு நினைச்சேன்னு சொன்னார் பாருங்க.. அப்போதுதான் ரசிகர்கள் எழுந்து நின்னு சிரிக்கிறார்கள். மதுரை முத்து ஒரு நிகழ்ச்சியில் வந்தார் என்றால், அங்கு 100 சதவிகிதம் மனம் விட்டு சிரிக்க்கலாம் என்பதை மீண்டும் உணர்த்தி இருக்கார்.

வெளியில் வந்து பேசு
அந்த மொக்கை ஜோக் என்னன்னா... டேய் மாப்பிள்ளை வெளியில வந்து பேசுடா சரியாய் கேட்கலைன்னு ஒருத்தர் போனில் பேசினாராம். அதற்கு மறுமுனையில் பேசியவர் நானும் வெளியில வரலாம்னுதான் நினைக்கிறேன்.. ஜாமீன் கிடைக்கலைன்னு சொன்னாராம். ஜெயிலுக்குள்ளே இருந்து போன் பேசுறான் என்று மதுரை முத்து சொன்னார்.யாரும் இந்த ஜோக்குக்கு சிரிக்காமல் இருக்க, இந்த ஜோக்கை சொல்ல வேணாம்னுதான் நினைச்சேன்னு மதுரை முத்து ஆரம்பிச்சார். ரசிகர்கள் எழுந்து நின்னு கைத்தட்டி ரசித்து சிரித்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications