கலக்கப்போவது யாரு தீனாவின் திடீர் கல்யாணம்..மணப்பெண் இந்த பிரபலம் தானா? குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் நடந்த தீனாவின் திருமணம் இன்று நடைபெறுகிறது.
திருவாரூரில் நடைபெறும் திருமணத்திற்கு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர்.
வேலையில் பிஸியாக இருந்ததால் பலருக்கும் திருமண செய்தியை கூற முடியவில்லை என்று தீனா கூறியிருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சில நிகழ்ச்சிகளில் குறிப்பிட்ட நபர்கள் மட்டும் பிரபலமாகி விடுகிறார்கள். அந்த வகையில் ஒரு நபர் தீனா. இவர் ஆரம்பத்தில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் உதவி இயக்குனராக சில ஆண்டுகள் வேலை செய்து கொண்டிருக்கிறார். அப்போது இவருடைய டைமிங் காமெடி பார்த்து பலர் பாராட்டி இருக்கிறார்கள்.

இவருடைய காமெடி திறமையை கண்டு சிலர் இப்படி நீ கேமராவுக்கு பின்னாடி இருக்க வேண்டிய ஆள் இல்லப்பா. நீ கேமராவுக்கு முன்னாடி இருக்க வேண்டிய ஆள் என்று கூறியிருக்கிறார்கள். இப்படித்தான் இவர் கேமராவுக்கு முன்னாடி வந்து பலரையும் கலாய்க்க தொடங்கி இருக்கிறார்கள்.
விஜய் டிவியில் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி அங்கே வரும் பிரபலங்களை போன் பண்ணி கலாய்த்து அவர்களை பேசவிடாமல் பல நேரங்களிலும் சிரிக்க மட்டுமே வைத்துக் கொண்டிருக்கும் இவருடைய அல்டிமேட் காமெடி பார்த்து ரசிகர்கள் கொடுத்த ஆதரவால் இவர் இப்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையிலும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.
வெள்ளி திரையில் கைதி, மாஸ்டர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் இப்போதும் சில படங்கள் அவருடைய கைவசம் இருக்கிறது. ஸ்டேஜ் ஷோக்களிலும் பிஸியாகவே இருக்கும் தீனா சில மாதங்களுக்கு முன்புதான் தன்னுடைய சொந்த ஊரில் வீட்டைக் கட்டி முடித்து இருந்தார். இந்த நிலையில் இன்று இவருடைய திருமணம் நடைபெற்றிருக்கிறது.

வீட்டை கட்டிப்பார் கல்யாணம் பண்ணி பாருன்னு சொல்லுவாங்க. ஆனா இப்போ வீட்டை கட்டி கொஞ்சம் நாளிலேயே கல்யாணமும் கைகூடி வந்திருக்கும் தீனாவிற்கு அவருடைய ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள். இவர் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்ததால் நிறைய பேருக்கு பத்திரிக்கை நேரில் சென்று வைக்க முடியவில்லை என்றும் போனில் வாட்ஸ் அப்பில் தான் அனுப்பினேன் என்றும் கூறியிருக்கிறார்.
அது மட்டுமில்லாமல் திருவாரூரில் நடக்கும் கல்யாணத்தில் பலர் கலந்து கொள்ள முடியாததால் சினிமா, சின்னத்திரை பிரபலங்களுக்காக சென்னையில் அடுத்த வாரம் திருமண வரவேற்பு நடக்க இருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தீனாவின் மனைவி கிராபிக் டிசைனராக இருக்கிறாராம். இது அரேஞ்ச் மேரேஜ் தானாம்.
-
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
முத்துவின் விபரீத முடிவு.. சிந்தாமணியின் சூழ்ச்சியை முறியடிக்க முடியுமா? சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications