கல்கி ஓடிடி உரிமை ரூ.375 கோடி ரூபாய்க்கு விற்பனை.. இந்திய சினிமா வரலாற்றில் முதல்முறை

Subscribe to Oneindia Tamil

சென்னை: கல்கி 2898AD படத்தின் OTT உரிமைகள் மொத்தம் 375 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது இந்திய சினிமாவில் இதுவரை நடந்த மிகப் பெரிய வணிகமாகும்.

நெட்ஃபிளிக்ஸ் [ஹிந்தி மொழிக்கு மட்டும்]: 175 கோடி ரூபாய் பிரைம் [தென்னிந்திய மொழிகளுக்கு மட்டும்]: 200 கோடி ரூபாய் என இந்த விற்பனை பிரித்தளிக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இது இந்திய சினிமாவில் இதுவரை நடந்த மிக அதிகபட்ச ஓடிடி (Kalki 2898 AD OTT ) வணிகமாகும்.

Kalki OTT

நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ஹிந்தி மொழியில் ஒளிபரப்ப, படத்தின் உரிமைகளை 175 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. அமேசான் பிரைம் நிறுவனம் தென்னிந்திய மொழிகளில் உள்ள படத்தின் உரிமைகளை 200 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.

இந்த செய்தி படத்தின் ரசிகர்கள் மத்தியில் பெரும் கூஸ்பம்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படம் ஓடிடியில் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த ஆண்டின் மிக அதிக வசூல் சாதனை படைத்தது கல்கி படம்தான். ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் நெட்ஃபிளிக்ஸ் மற்றும் பிரைம் வீடியோ ஆகிய இரு தளங்களிலும் இந்த திரைப்படம் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நெட்ஃபிளிக்ஸ் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில், "இந்த யுகத்தின் எபிக் பிளாக்பஸ்டர் நெட்ஃபிளிக்ஸில் வர இருக்கிறது, ஹிந்தியில் (This era's epic blockbuster is coming to Netflix in Hindi)," என்ற தலைப்புடன் படத்தின் டீஸரைப் பகிர்ந்து இந்த அறிவிப்பை செய்தது.

பிரைம் வீடியோ தளம், கல்கி 2898 ஏ.டி. படத்தின் ஓடிடி வெளியீட்டை போஸ்டர் மற்றும் "புதிய யுகத்தின் விடியல் உங்களுக்காக காத்திருக்கிறது (The dawn of a new ERA awaits you)" என்ற தலைப்புடன் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

பிரபாஸ், கமல்ஹாசன், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கிய கல்கி திரைப்படம், இந்தியாவில் சுமார் 750 கோடிக்கும் மேலும், உலக அளவில் 250 கோடிக்கு மேலும் என 1000 கோடிக்கும் மேல் வசூல் வகையில், வருவாயை அள்ளியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+