Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கல்லுக்குள் ஈரம் அருணாவின் ஈசிஆர் அரண்மனை பங்களா.. பாரதிராஜா பாராட்டிய நடிகையாச்சே? சென்னையில் பரபர

Subscribe to Oneindia Tamil

சென்னை: கல்லுக்குள் ஈரம் பட பிரபல நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.. இந்த சம்பவம் காலையிலிருந்தே பரபரப்பை தந்து கொண்டிருக்கிறார்கள்.. நடிகை அருணா யார் தெரியுமா? எப்படி அவர் திரைத்துறைக்குள் நுழைந்தார்? அவரது வீட்டில் ஏன் ரெய்டு நடக்கிறது? என்பதை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

ஒருமுறை சேனல் ஒன்றுக்கு அருணா தந்திருந்த பேட்டியில், "முதன்முதலில் நடிக்க வந்தபோது, எனக்கு சினிமாவைப் பத்தி எதுவுமே தெரியாது'ன்னு நிவாஸ், பாரதிராஜா சார்கிட்ட சொன்னேன். "எங்களுக்கு அதுதான் வேணும். உன்னை நடிக்கவைக்கிறது எங்க பொறுப்பு'"ன்னு சொன்னாங்க.

Television actress aruna chennai erc bungalow

அப்படித்தான் பத்தாவது படிக்கும்போது, 'கல்லுக்குள் ஈரம்' படத்தில் ஹீரோயினா கமிட் ஆனேன். அங்கேதான் விஜயசாந்தியைப் பார்த்தேன். முதல் சந்திப்பிலேயே நாங்கள் தோழிகள் ஆகிவிட்டோம்.. மைசூரு தலைக்காட்டில் ஷூட்டிங் நடந்தபோது, பாரதிராஜா சார் தமிழில் நடிப்பு சொல்லி கொடுத்தால், அதை நிவாஸ் சார் எனக்கு இந்தி அல்லது ஆங்கிலத்தில் புரியவைப்பார்.

மொழி பிரச்சனை

மொழி எனக்கு தெரியாது என்பதால், பாரதிராஜா சார், என்னை எப்படித் திட்டினாலும் வருத்தப்பட மாட்டேன்... அதற்கு பிறகு, "உன் திறமைக்கு நீ பெரிய நடிகையா வருவே"ன்னு பாரதிராஜா சார் அடிக்கடி என்னை பாராட்டுவார்.

கதையை தேர்ந்டுக்க தெரியாமல், எனக்கு ஆலோசனை கொடுக்க சினிமா துறை நண்பர்கள் யாருமில்லை என்பதால், நடிக்கலாமா, வேண்டாமா?' என்று திணறினேன்.. அதனால் நான் நடித்த சில படங்கள் ஓடல, நடிக்க மறுத்த பல படங்கள் நன்றாக ஓடின.

நெகட்டிவ் கேரக்டர்

என் நடிப்பில் எனக்குப் பிடிக்காத ஒரே படம், நெகட்டிவ் ரோலில் நடித்த பெண்மணி அவள் கண்மணி.. அந்த படம் வெற்றிக்கு பிறகு எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன.. ஆனாலும், நெகட்டிவ் என்றாலே வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். 35 வருஷமா நடிக்காம இருந்தாலும், 80கள் காலகட்ட தோழிகளுடன் நட்புடன் இருக்கிறேன்" என்றெல்லாம் அந்த பேட்டியில் கூறியிருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு முதன்முதலில் அருணா தந்திருந்த இந்த பேட்டி அப்போது இணையத்தில் வைரலானது.

முச்சேர்லா அருணா என்பதுதான் நடிகை அருணாவின் நிஜப்பெயராகும்.. இவர் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோதே தன்னுடைய 15 வயதில், பாரதிராஜாவின் கல்லுக்குள் ஈரம் என்ற படத்தில், பாரதிராஜாவுக்கு ஜோடியாகவே நடித்திருந்தார்.

பாரதிராஜா பாராட்டு

இயக்குநர் பாரதிராஜா மீதான ஆழமான காதலை வெகுளித்தனமும், ஒருவிதபயமும் கலந்த பரிமாணத்தில் அருணா வெளிப்படுத்தியிருந்த நடிப்பு, தமிழக மக்களின் கவனத்தை பெற்றது.. இதற்கு பிறகு, தாய்மொழி தெலுங்கிலேயே அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பு வந்தது.

அந்தவகையில், தமிழில் மாஸ் வெற்றி பெற்ற அலைகள் ஓய்வதில்லை படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ராதா கேரக்டரில் அருணா நடித்திருந்தார்... அதேபோல, தமிழில், விசுவின் பெண்மணி அவள் கண்மணி படத்தில், அருணாவின் திமிர் பிடித்த நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் குறுகிய காலத்திலேயே 70க்கும் மேற்பட்ட படங்களில் அருணா நடித்து முடித்துள்ளார்..

பிறகு தொழிலதிபர் மோகன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.. அத்துடன், கணவருடன் பிசினசிற்கு உதவியாகவும் இருப்பதாக தெரிகிறது.

கவரும் சமையல் வீடியோக்கள்

நீண்ட காலமாகவே பொதுவெளியில் வராமல் இருந்த அருணா, சமீபகாலமாக யூடியூப் சேனல்களில் தலைகாட்ட துவங்கியிருக்கிறார். தற்போது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பவர்களில் அருணாவும் ஒருவர்..

சொந்தமாகவே ஒரு யூடியூப் சேனல் வைத்துள்ளார்.. அதில், வகை வகையாக சமைத்த வீடியோக்களையும், வீட்டுக்குறிப்பு, வீட்டு பராமரிப்பு போன்றவற்றையும் ஷேர் செய்து வருகிறார்.. இதனால், பெண்கள் மத்தியில் அருணாவின் யூடியூப் சேனல்களுக்கு விசிறிகள் அதிகம். அதிலும், தமிழ், ஆங்கிலம், தெலுங்கு என அனைத்தையும் கலந்து அருணா சிரித்துக் கொண்டே சமைப்பதை பார்ப்பதற்கென்றே, பார்வையாளர்கள் பலர் உள்ளனர்.

ஈசிஆர் பிரம்மாண்ட வீடு

அருணாவின் வீடு சென்னை ஈசிஆரில் உள்ளது.. ஒரு யூடியூப் சேனலில் அருணாவின் home tour காட்டப்பட்டது.. விசாலமான அறையில், காற்றோட்டமும், வெளிச்சமும் நிறைந்து, ஒவ்வொரு அறையும், ஒரு தனி வீடு போலவே பிரம்மாண்டமாக இருந்தது பார்வையாளர்களுக்கு ஆச்சரியத்தை தந்திருந்தது.

இந்த வீட்டில்தான் தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகிறார்கள்.. 6 பேர் கொண்ட அமலாக்கத்துறை குழு இந்த சோதனையை மேற்கொண்டு வருவதுடன், அருணா மோகன் குப்தா தம்பதியிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த சோதனை குறித்து மேலும் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. மோகன் குப்தா, வீடுகளில் உள் கட்டமைப்பு அலங்காரப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்...

உடற்பயிற்சி உபகரணங்கள்

அமெரிக்காவில் உள்ள லைஃப் பிட்னஸ் என்கிற நிறுவனத்தின் உடற்பயிற்சி உபகரணங்களை இந்தியாவுக்கான டீலர்ஷிப் எடுத்து இறக்குமதி செய்து இந்தியாவில் உள்ள பல மாநிலங்களுக்கு விற்பனை செய்து வருகிறாராம்.. அமெரிக்காவிலிருந்து உடற்பயிற்சி உபகரணங்களை இறக்குமதி செய்யும்போது பணப்பரிவர்த்தனையில் சட்ட விதிகளை மீறியதாக மோகன் குப்தா மீது புகார் எழுந்துள்ளதாம்.

கணவர் குப்தாவின் தொழில் நிறுவனங்களில் சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாரில் இந்த சோதனை நடத்தப்படுவதாகவும் முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நிறுவனம் தொடர்பான புகாரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 4 பேர் காலை 7 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. .

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+