சூடு, சொரணை இல்லையா? பெட்ரூமை எதுக்கு எட்டி பார்க்குறீங்க? பாடகி கல்பனாவின் நியாயமான கோபம்: பிரபலம்
சென்னை: "ஒரு பெண்ணாக நின்று, ஊடகம் முன்பு துணிச்சலாக, கல்பனா பேசியதில் பல விஷயங்கள் நியாயமானவையே.
கல்பனா பேசும்போது, "இன்னைக்கு இருக்கிற சொசைட்டியை யூடியூப் சேனல்கள் எப்படி கெடுக்கின்றன? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். கல்பனாவின் பல கோபங்கள் வெளிப்படையாகவும், நியாயமாகவும் உள்ளன" என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கருத்து தெரிவித்துள்ளார்.
MediaCircle யூடியூப் சேனலுக்கு பாலாஜி பிரபு தந்துள்ள பேட்டியில், "பாடகி கல்பனா துணிச்சலான பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், "உடம்பு சரியில்லாமல் இருந்ததால், கூடுதலாக மாத்திரைகளை போட்டுக்கொண்டு படுத்துவிட்டேன்.. நுரையீரலில் நீர் கோர்ப்பு இருந்ததால், என்னால் எழ முடியவில்லை.. இதை கண்டுபிடித்து, உடனடியாக என்னை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுதான் நடந்த உண்மை.

பெட்ரூமுக்குள் ஏன் எட்டி பார்க்குறீங்க
ஆனால், இதையே பலவாறாக பேச ஆரம்பித்துவிட்டார்கள். எனக்கும், என் கணவருக்கும் தகராறு, கணவருடன் டைவர்ஸ் ஆகிவிட்டது, மகளுக்கும் எனக்கும் பிரச்சனை, என்னுடைய மகளின் காதல் விவகாரத்தை நான் ஏற்கவில்லை என்பதால், இப்படி மாத்திரைகளை போட்டுக் கொண்டேன், மதம் மாறியதால் பிரச்சனை, என்று பலவிதத்தில் என்னை பேச ஆரம்பித்துவிட்டார்கள்.. நடந்த விஷயம் வேறாகவும், யூடியூப்களில் போடும் விஷயம் வேறாகவும் உள்ளது.
பெட்ரூமில் படுத்து கிடந்தபோது, போர்வை விலகியிருந்தது, ஆடை விலகியிருந்தது என்றெல்லாம் யூடியூப்களில் போட ஆரம்பித்துவிட்டார்கள். இதெல்லாம் ரொம்ப தப்பு... வன்மையாக கண்டிக்கிறேன். இப்படியெல்லாம் எழுதுவது சரியா? இது சமுதாயத்துக்கு நல்லதா? இந்த சமுதாயம் எங்கே செல்கிறது? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் கல்பனா.
கல்பனா சீரழிந்துவிட்டார்
யூடியூபர்களில் சிலர் சரியாகவும், அறத்துடனும் செயல்படுகிறார்கள். ஆனால், சில புல்லுருவிகள் இதுபோல தவறாக எழுதுகிறார்கள். மக்களும் இதுபோன்ற விஷயங்களை படிக்க ஆர்வம் காட்டுகிறார்கள்.. நெகட்டிவ்வான தலைப்புகள் இருந்தால், உடனே அதை ஆர்வத்துடன் படிக்கிறார்கள்..
"கல்பனா நல்லா இருக்காங்க, கணவருடன் சநதோஷமாக இருக்கிறாங்க" என்று வீடியோ வெளியிட்டால், அதை யாரும் பார்க்க மாட்டார்கள், ஆனால், "கல்பனா சீரழிந்துவிட்டார்" என்றால் லட்சக்கணக்கக்கான மக்கள் படிக்கிறார்கள்.. இது எந்த மாதிரியான மனநிலைமை? அப்படியானால், எந்தமாதிரியான சூழ்நிலையை நாம் எதிர்கொண்டு வருகிறோம்? எதிர்காலம் எப்படி இருக்க போகிறது? என்றெல்லாம் கல்பனா வன்மையாக கண்டித்து பேசியிருக்கிறார்.
தவறான பப்ளிசிட்டி
40 வருடமாக சினிமா துறையில் இருக்கும் கல்பனாவை, பல பாடல்களை பாடிய கல்பனாவை, இதுவரை பலருக்கும் தெரியாதபோது, இந்த 3 நாள் நெகட்டிவ் பப்ளிசிட்டி, ரீச் செய்துவிட்டது. ஆனால், இந்த பப்ளிசிட்டி தவறானது.
செய்திகளை வெளியிடுவது ஊடகங்களின் கடமைதான். கல்பனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், இதற்கு என்ன காரணம் தெரியவில்லை என்பதுடன் செய்திகளை நிறுத்தியிருக்கலாம். அதுக்கும் மேலே சொன்னதுதான் ஜீரணிக்க முடியவில்லை. ஒரு பெண்ணாக நின்று, ஊடகம் முன்பு துணிச்சலாக, கல்பனா பேசியதில் பல விஷயங்கள் நியாயமானவையே.
விஜய ஆண்டனி மகள்
சமீபத்தில் விஜய் ஆண்டனி வீட்டிலும் இப்படித்தான் நடந்தது. பிளஸ் 2 படிக்கும் பெண் தவறான முடிவெடுத்து இறந்துவிட்டார் என்றால், அந்த குடும்பத்தின் தாய், தகப்பனின் மனநிலைமை எப்படி இருக்கும்? இப்படிப்பட்ட சூழலில் கேமராவை தூக்கிக்கொண்டு வீட்டிற்குள் நுழைய முயல்கிறார்கள். "எங்களை ஏன் உள்ளே விட மாட்டேங்கறீங்க?" என்றும் கேட்கிறார்கள்.
சர்ச்சில் சடலத்தை வைத்து ஜெபம் செய்யும்போதும், சர்ச்சுக்கு கேமராவுடன் ஓடுகிறார்கள். ஒரு ஆட்டோ டிரைவர் யாரையோ சர்ச்சில் இறக்கிவிட வந்தால், அந்த ஆட்டோ டிரைவரிடம் சம்பந்தமே இல்லாமல் பேட்டி எடுக்கிறார்கள். ஏன் இப்படி யூடியூபர்கள் இருக்காங்க? நம்ம வீட்டிலும் மரணம் நிகழும்போது, அந்த வேதனை, கண்ணீர், வலி தெரியும்தானே? இதை ஊடகங்கள் உணர வேண்டும் என்றெல்லாம் கூறியிருக்கிறார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications