Kalyana Veedu Serial: ரெண்டு பக்க டயலாக்னாலும் நோ ப்ராம்ப்டிங்....!
சென்னை: எங்க டைரக்டர் ரெண்டு பக்க டயலாக்னாலும் ப்ராம்டிங் இல்லாமதான் பேசச் சொல்வார். அவருக்கு ப்ராம்ப்டிங் கொடுப்பது பிடிக்காது என்று கூறுகின்றனர் கல்யாண வீடு சீரியல் நடிகர்கள்.
கல்யாண வீடு சீரியல் திருமுருகனுக்குத்தான் ஆர்டிஸ்ட்டுக்கு ப்ராம்ப்டிங் கொடுப்பது பிடிக்காதாம். எத்தனை பக்க டயலாக் என்றாலும் ஆன் தி ஸ்பாட் பேசிவிட வேண்டும்...
ஆர்ட்டிஸ்ட் தங்களது சொந்த குரலில் பேசிவிட வேண்டும்... கூடுமானவரை டப்பிங் ஆர்டிஸ்ட்டுக்கு வேலையே இல்லை என்றும் கூறுகிறார்கள்.

மெட்டி ஒலி கல்யாண வீடு
சன் டிவியில் மதியம் ஒரு மணிக்கு மெட்டி ஒலி சீரியல் மறு ஒளிபரப்பு... இரவு 7:30 மணிக்கு எப்போதும் போல கல்யாண வீடு சீரியல் நேரம். அதுவும் மறு ஒளிபரப்புத்தான். ஒரே நேரத்தில் ஒரு தொலைக்காட்சியில் ஒரு இயக்குநரின் இரண்டு சீரியல்கள் மறு ஒளிபரப்பாகிறது எனும்போது அது பெருமைக்கு உரிய விஷயம்தான்.

நீண்ட வசனம் ஒரே ஷாட்
நீண்ட வசனத்தை பேச வைத்து அதை ஒரே ஷாட்டில் எடுப்பதில் இயக்குநர் திருமுருகன் கைத்தேர்ந்தவர். கல்யாண வீடு சீரியல் மறு ஒளிபரப்பு.. அதுவும் கடந்த வருடம் முதல் ஒளிபரப்பான சீரியல்தான் என்றாலும், மறு ஒளிபரப்பில் மக்கள் கல்யாண வீடு சீரியலை பார்க்கிறார்கள்.

டெல்லி மார்க்கெட்
டெல்லி மார்க்கெட்டின் நீண்ட தெருவில் தங்கை மற்றும் தங்கையின் மகள் அர்ச்சனாவுடன் பேசிக்கொண்டே டெல்லியின் நீண்ட மார்க்கெட் தெருவில் கடைசி வரை என்று ஒரே ஷாட்டில் திருமுருகன் இயக்கி இருந்ததை டெக்னீக்கலாக பார்க்க நன்றாக இருந்தது.

வசனங்கள் டேக்
சீரியலில் நடிக்கும் நடிகர்கள் தாங்களாக மனப்பாடம் செய்துதான் வசனங்களை பேச வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பாராம் திருமுருகன். அத்தோடு, அன்றைய தினம் என்ன காட்சி எடுக்கப்போகிறோம் என்பதை முன்கூட்டியே சொல்லும் பழக்கமும் திருமுருகனிடம் இல்லை என்று சொல்கிறார்கள் நடிகர்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications