நான் சி.எம் ஆவதற்காக அரசியலுக்கு வரவில்லை.. MP, MLA எல்லாம் புரியாது - கமல்ஹாசன் Thug life பேச்சு!
சென்னை: நான் முதலமைச்சர் ஆவதற்கு அரசியலுக்கு வரவில்லை. ரசிகர்களுக்கு என்ன மாதிரி நன்றி சொல்வது என்று தெரியாமல் தான் அரசியலுக்கு வந்தேன் என மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் பேசியுள்ளார்.
மணி ரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள 'தக் லைஃப்' திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் ரிலீஸையொட்டி இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளிலும் ப்ரோமோஷனுக்காக படக்குழுவினர் சுற்றி வருகின்றனர். சென்னை தனியார் கல்லூரியில் பிரமாண்டமாக தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் கமல்ஹாசன் பேசுகையில், "நான் எல்டாம்ஸ் ரோட்டில் நடந்துகொண்டிருந்த பையன். என்னை திடீரென்று கூப்பிட்டு வந்து நடிகராகிவிட்டார் பாலச்சந்தர். இந்த மேடை அமைப்பதற்கான பலத்தை எனக்கு கொடுத்ததே பாலச்சந்தர் தான். என்னுடைய பாதைகளில் என்னுடைய கொள்கைகளில் நான் நடப்பதற்காக எனக்கு உதவியாக இருந்த என்னுடைய குடும்பத்தை இந்த இடத்தில் நினைவு கூறுகிறேன்.
நான் இதுவரை 233 படங்கள் நடித்திருக்கிறேன். அதில் நான் படம் எடுக்கும்போது மட்டும்தான் நிறைய கஷ்டங்களை சந்தித்திருக்கிறேன். அதில் நான் நிறைய மறந்திருக்கிறேன். காரணம் இந்த வன்மத்தை எல்லாம் எனக்கு கேட்காமல் உங்களுடைய ஆதரவும் ஆரவாரமும் தான் என்னை தூக்கிவிட்டது கண்ணீரை துடைத்துவிட்டது தான் உண்மை.
இந்த மாதிரியான ரசிகர்களுக்கு என்ன மாதிரி நன்றி சொல்வது என்று தெரியாமல் தான் அரசியலுக்கு வந்தேன். நான் முதலமைச்சர் ஆவதற்கு அரசியலுக்கு வரவில்லை. எம்.எல்.ஏ, எம்.பி எல்லாம் எனக்கு புரியாது. ஆனால் 40 வருடங்களாக ஒரு எம்.எல்.ஏ ஒரு தொகுதிக்காக என்ன செய்ய வேண்டுமோ அதை நாங்கள் பொறுமையாக செய்து வருகிறோம். ஏனென்றால் நாங்கள் தனி மனிதர்கள். இங்கு இருந்து என்னுடன் உழைத்த தம்பிகள் எல்லாம் இன்று சமுதாயத்தில் பெரிய மனிதர்களாக மாறியிருக்கிறார்கள்.
"'பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை... என் பாதையில்...! படமெடுக்கும் பாம்புகள் நெளிந்திருக்கின்றன.' ஆகாரத்துக்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தம் செய்யுதே மீன், அதைப் போல நான்!" இது கலைஞர் சொன்னது. நான் பேசுற எல்லாமே காப்பி அடிச்சதுதான். அபிராமியைப் பார்த்து, 'பிட்டு அடிக்கிறீங்களா?'ன்னு மணிரத்னம் கேட்டார். நானே பிட்டு தான். அதுவும் பள்ளிக்கூடத்துக்கே போகாத பையன், ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டுக்குப் போகாத பையன், பிட்டு அடிக்காம வேற என்ன பண்ணுவான்? இப்படி பிட்டு அடிச்சி அடிச்சி, டாக்டர் பட்டமே கொடுத்துட்டாங்க.
என்னை வியப்பில் ஆழ்த்திக்கொண்டிருக்கும் தமிழ் சினிமாவுக்கு, என்னை குழந்தைப் பருவத்திலிருந்து தூக்கிக் கொஞ்சிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவுக்கு நன்றி. அதை எப்படி சொல்வதென்றால், அடுத்து ஒரு நல்ல படம் எடுத்து தமிழ் சினிமாவை உயர்த்துவதில் ஒரு கடைநிலை சினிமா ரசிகனாக இருப்பதையே நான் விரும்புகிறேன்." எனப் பேசினார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications