Kamal Haasan: ரோபோ சங்கர் இல்லாமல் கமல்ஹாசனை சந்தித்த இந்திரஜா குடும்பம்! ஸ்ருதிஹாசன் செய்த செயல்! நெகிழ்ச்சி
சென்னை: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் குடும்பத்தினர் அவரை நேரில் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுள்ளனர். இந்த பாசமிகுந்த சந்திப்பு குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உறுதுணையாக நிற்கும் கமல்ஹாசன்
ரோபோ சங்கர், சினிமாவில் ஒரு நடிகனாக உருவாவதற்கு முன்பே கமல்ஹாசனின் தீவிர ரசிகராகவும், அவர் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டவராகவும் இருந்தார். கமல்ஹாசனின் மீது ஒரு ரசிகராக அவர் வைத்திருந்த பாசமும் மரியாதையும் திரையுலகில் அனைவரும் அறிந்ததே. ரோபோ சங்கர் எங்கு சென்றாலும் கமல்ஹாசனை பற்றி பெருமையாகப் பேசுவார்.

பிறந்தநாள் வழக்கம்
ரோபோ சங்கர் உயிருடன் இருந்தபோது, கமல்ஹாசனின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் தவறாமல், தன் குடும்பத்துடன் நேரில் சென்றுச் சந்தித்து, அவரிடம் முத்தம் வாங்கிவிட்டு புகைப்படங்களும் எடுத்து கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ரோபோ சங்கரின் மறைவு திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியது. அவரது மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது, ரோபோ சங்கரின் மறைவை தான் ஏற்று கொள்ள முடியவில்லை என்று வருத்தமாக பேசியிருந்தது, அவர் ரோபோ சங்கர் மீது வைத்திருந்த பாசத்தை வெளிப்படுத்தியது.
கமல்ஹாசனுடன் ரோபோ சங்கரின் குடும்பம்
இந்த முறை ரோபோ சங்கர் இல்லாமல், அவரது மகள் இந்திரஜா சங்கர், தன் கணவர் மற்றும் மகன் நட்சத்திரன் உடன், தனது அம்மா மூலம் கமல்ஹாசனின் வீட்டிற்குச் சென்றிருந்தார். தந்தையின் மறைவுக்கு பிறகும், கமல்ஹாசன் மீது ரோபோ சங்கர் வைத்திருந்த அன்பையும் மரியாதையையும் தொடரும் விதமாக, இந்திரஜா சங்கர் குடும்பத்தினர் கமல்ஹாசனை சந்தித்து, அவரது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

ஸ்ருதிஹாசனின் பாசம்
இந்த பாசமிகுந்த சந்திப்பின் போது, கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசனும் உடனிருந்தார். அவர், ரோபோ சங்கரின் பேரன் நட்சத்திரனை அன்புடன் கொஞ்சி விளையாடினார். தன்னுடைய அப்பா தானே அந்த குழந்தைக்கு பெயர் வைத்தது அதனால் அந்த குழந்தை மீது ஸ்ருதிஹாசனுககு பாசம் அதிகம் போல. அவரும் குழந்தையாக சேர்ந்து கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தார். ஸ்ருதிஹாசன், நட்சத்திரனைக் கொஞ்சி விளையாடுவதை வீடியோவாக எடுத்து, இந்திரஜாவின் கணவர் கார்த்திக் தன் சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்துள்ளார். இது, இரு குடும்பங்களுக்கு இடையேயான பாசப்பிணைப்பையும், ரோபோ சங்கர் குடும்பத்தின் மீது கமல்ஹாசன் குடும்பம் காட்டும் அக்கறையையும் காட்டுவதாக ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ரோபோ சங்கர் இல்லாமல் அவரது குடும்பம் இந்தக் கொண்டாட்டத்தின்போது கமல்ஹாசனை சந்தித்தது, மறைந்த கலைஞனுக்குக் கமல்ஹாசன் அளிக்கும் மரியாதையாகவும், அந்த குடும்பத்திற்கு அவர் உறுதுணையாக இருக்கிறார் என்பதன் வெளிப்பாடாகவும் அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications