பிக் பாஸில் எனக்கு பதில் இனி இவர்தான்.. கமலே ரெக்கமெண்ட் செய்த நடிகர் இவர்தானா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன் தான் இந்த நிகழ்ச்சியில் விரைவில் வரப்போகும் 8வது சீசனில் இருந்து விலகப் போகிறேன் என்று அறிவிப்பு வெளியிட்ட பிறகு அவருக்கு பதிலாக யார் தொகுத்து வழங்கப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருக்கும் நிலையில் கமல்ஹாசன் பிரபல நடிகர் ஒருவரை தனக்கு பதிலாக தொகுப்பாளராக மாற்ற வேண்டும் என்று ரெக்கமண்ட் செய்ததாக ஒரு செய்தி இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
பிக்பாஸ நிகழ்ச்சி தமிழில் ஒளிபரப்பாக போகிறது என்ற அறிவிப்பு வெளியான போது அது பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது. பிரபலங்களால் எப்படி ஒரு வீட்டிற்குள் 100 நாட்கள் வெளி உலக தொடர்பு இல்லாமல் இருக்க முடியும் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். அதோடு இந்த நிகழ்ச்சியை உலகநாயகனாக மக்களால் கொண்டாடப்படும் கமல் தான் தொகுத்து வழங்கப் போகிறார் என்ற போது பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது.

எப்படி ஒரு தெருவில் பக்கத்து வீட்டில் சண்டை போடும்போது அங்கு என்னதான் நடக்கிறது என்று நம்மை மீறி ஒரு ஆர்வத்தோடு எட்டிப் பார்க்க தோன்றுகிறதோ அது போல நான் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் ஒரு வீட்டிற்குள் நமக்கு தெரிந்த பிரபலங்கள் என்னதான் செய்கிறார்கள்? எப்படி சண்டை போடுகிறார்கள்? எப்படி ஜாலியாக இருக்கிறார்கள்? என்று பார்ப்பதற்காகவே முதல் சீசனில் தொடங்கி ஏழு சீசன் வரைக்கும் ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.
ஆனால் முதல் இரண்டு சீசன்கள் இருந்த வரவேற்பு அதற்கு பிறகு வந்த சீசன்களில் அதிகமாக இல்லை. காரணம் அந்த நேரங்களில் அதிகமான இணைய பயன்பாடு கிடையாததால் அந்த இரண்டு சீசன்களிலும் டிவியில் மட்டும்தான் பார்க்க முடியும். ஆனால் இப்பொழுது உள்ள நிகழ்ச்சிகள் அப்படி இல்லை. டிவியில் ஒளிபரப்பாகுவதற்கு முன்பே அன்று நடப்பது எல்லாம் 24 மணி நேர லைவில் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி விடுகிறது. இதனால் அதில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ரசிகர்கள் பார்த்து விடுகிறார்கள்.
அதில் ஹைலைட்டான விஷயங்களை பற்றி இணையத்தில் விவாதமும் செய்து விடுகிறார்கள். இதனாலே இந்த நிகழ்ச்சி பற்றி பல்வேறு வதந்திகளும் சர்ச்சைகளும் தான் அதிகரித்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த சீசனில் கமல்ஹாசனுக்கும் அதிகமான நெகட்டிவ் கமண்டுகள் வரத் தொடங்கி விட்டது. கமலஹாசன் ஆரம்பத்தில் இருந்தது போல இப்போது இல்லை, அவர் ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்கிறார் என்றும் கூட அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
அதுபோல கடந்த சீசனில் கமல்ஹாசனுக்கு 100 கோடி சம்பளம் என்றும் அதனால் தான் அவர் சினிமாக்களில் அந்த நேரத்தில் அதிகமாக நடிக்கவில்லை என்று கூட கூறப்பட்டது. ஆனால் இந்த முறை சம்பளம் அதைவிட அதிகமாக கொடுப்பதாக பேச்சுவார்த்தை நடந்தாலும் கமல்ஹாசன் தான் திரைப்படத்தில் பிஸியாக நடிக்கிறேன் அதனால் வரப்போகும் சீசனில் தான் கலந்து கொள்ளவில்லை. இதில் இருந்து ரெஸ்ட் எடுத்துக் கொள்கிறேன் என்று திடீர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
இது பெரிய அளவில் பலரையும் பேச வைத்தது. இந்த நிலையில் கமலுக்கு பதிலாக யார் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. அதில் நடிகர் சிம்பு, சூர்யா, சரத்குமார், அர்ஜுன், அரவிந்த்சாமி போன்ற பலருடைய பெயர் இதில் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது கமல்ஹாசன் தனக்கு பதிலாக நடிகர் சிவகார்த்திகேயனை தான் இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக கலந்து கொள்வதற்கு ரெக்கமண்ட் செய்ததாக கூறப்படுகிறது.
காரணம் சிவகார்த்திகேயன் ராஜ்கமல் தயாரிப்பில் அமரன் படத்தில் நடித்திருப்பதால் அப்படம் வெளியாகும் போது அவர் இந்த நிகழ்ச்சி நடத்தினால் அதுவே படத்திற்கு ப்ரமோசனாக அமையும் என்பதால் சிவகார்த்திகேயனை ரெக்கமண்ட் செய்ததாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் ஏற்கனவே விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

அதனால் மீண்டும் அவருக்கு இந்த வாய்ப்பு வந்தால் அவரும் சம்மதிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. வாரத்தில் ஒரு நாள் மட்டும் தான் சூட்டிங் நடைபெறும். அதற்கு கோடிக்கணக்கில் சம்பளம் என்றால் யாரேனும் மறுக்கவா செய்வார்கள்? என்ன நடக்கப் போகிறது என்று பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications