நடிகர் கமல்ஹாசனா அப்படி..? அதுவும் லேடீஸ் காலேஜில் அந்த உடையில்..? பிரபல நடிகை உடைத்த உண்மை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் கமல்ஹாசன் பற்றி நடிகை சுஹாசினி பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.

சுஹாசினி காலேஜ் படிக்கும் போது கூடவே வந்த கமல்ஹாசன் செய்த செயல் பற்றி மேடையில் சுஹாசினி கூறி இருக்கிறார்.

Kamal Haasans early pranks shared by actress Suhasini

நடிகை சுஹாசினி சொன்ன நினைவுகளை தனக்கு நினைவு இல்லை என்று கமல்ஹாசன் பேசியிருக்கிறார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

உலகநாயகனாக தமிழ் சினிமாவில் கலக்கி கொண்டிருக்கும் கமல்ஹாசன் அவர் சினிமாவில் பன்முகத் திறமையால் பலருடைய மனதையும் கவர்ந்திருக்கிறார். நடிகராக மட்டுமல்லாமல் அரசியல் பிரமுகராகவும் வலம் வருகிறார்.
இவருக்குள் மட்டும் இத்தனை வயதானாலும் குறையாத திறமையை பார்த்து, இப்ப உள்ள கலைஞர்கள் கூட வியந்து போயிருக்கின்றனர்.

வெள்ளித்திரையில் டாப் நடிகராகவே பல வருடங்களாக ஜொலித்துக் கொண்டிருக்கும் கமல்ஹாசன் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியும் தொகுத்து வழங்கி வருகிறார். வெள்ளி திரையில் மட்டுமல்ல தன்னால் சின்னத்திரையிலும் ஜொலிக்க முடியும் என்று இவர் தற்போது ஆறு சீசன்களாக நிகழ்ச்சியை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

அது மட்டும் இல்லாமல் விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ் போன்ற முன்னணியில் உள்ள பல சேனல்களில் இவருடைய பிறந்தநாள் போன்ற நிகழ்வுகளை மையப்படுத்தி சில நிகழ்ச்சிகளையும் வைத்து விடுகின்றனர். அந்த மாதிரி தான் ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது நடிகை சுஹாசினியும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.

நடிகர் கமல்ஹாசனும் சுஹாசினியும் உறவினர்கள் என்பது பலருக்கும் தெரியும். அந்த வகையில் கமல்ஹாசனின் உறவினரான சுஹாசினி கமல் மேடையில் இருக்கும் போது அவர் செய்த லீலை ஒன்றை கூறியிருக்கிறார். அப்போது புதியதாக கார் வாங்கிய கமல் குயின் மேரிஸ் காலேஜில் உன்னை வந்து விடணும் என்று சுஹாசினி இடம் கூறினார்.

சுஹாசினியும் அப்போ நம்ம மேல இருக்கிற பாசத்தால தான் நம்மை கொண்டு காலேஜில் விடப் போகிறார் என்று அதற்கு சம்மதமும் சொல்லி இருக்கிறார். அப்போது கமல் ஒரு டிராகன் டிரஸ் என்று குட்டையாக அணிந்திருந்தாராம். அதை பார்த்த சுஹாசினி இந்த ட்ரெஸ்ஸில் நீங்க அங்க வரணுமா என்று கேட்க? நான் எல்லாம் கீழே இறங்க மாட்டேன். எனக்கு வேற வேலை இருக்கிறது. காரில் உன்னை விட்டு விட்டு போய் விடுவேன் என்று கூறினாராம்.

ஆனால் காலேஜ் வந்ததும் உடனே வந்து எனக்கு டிரைவர் மாதிரி கார் கதவை திறந்து விட்டார். அதுவும் குனிந்த படி அவர் கதவை திறந்ததை சுற்றி இருப்பவர்கள் வாய் பிளந்து பார்த்ததாக கூறியிருக்கிறார். எனக்கு அந்த நேரத்தில் வெட்கமாக இருந்தது. நான் என்னுடைய துப்பட்டாவில் முகத்தை மூடிக்கொண்டு ஓடி விட்டேன். ஆனால் கமல் அந்த நேரத்தில் எதுவும் நடக்காதது போல ஹாயாக போய்க் கொண்டிருந்தார் என்று கூறியிருக்கிறார்.

அதை நினைவு படுத்தி சுஹாசினி கமலிடம் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா என்று கேட்க? எனக்கு இது ஞாபகம் இல்லை என்று நினைக்கிறேன் என்று கமல் அப்போது பேசியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதள பக்கத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+