பெரிய சோதனையில் இதுமாதிரி பண்ணிடாதீங்க.. பிக்பாஸில் அரசியலை நுழைத்து எச்சரித்த கமல்!!
பெரிய சோதனையில் இதுபோன்ற தவறுகளை செய்யாதீர்கள் என பொதுமக்களுக்கு பிக்பாஸ் வாயிலாக நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை: பெரிய சோதனையில் இதுபோன்ற தவறுகளை செய்யாதீர்கள் என பொதுமக்களை பிக்பாஸ் வாயிலாக நடிகர் கமல்ஹாசன் எச்சரித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் நடிகர் கமல்ஹாசன். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் போட்டியாளர்களை சந்திக்கும் கமல், வாரம் முழுவதும் நடக்கும் சம்பவங்களை ரிவ்வியூ செய்வார்.
இந்நிலையில் நேற்று போட்டியாளர்களை சந்தித்த கமல், போட்டியாளர்களை தாளித்து எடுத்தார். குறிப்பாக ஐஸ்வர்யா கூறிய பொய்களை வரிசைப்படுத்திய கமல் குறும்படமும் போட்டுக்காட்டினார்.

கமல் கோபம்
தான் தப்பிப்பதற்காக சென்றாயனை ஐஸ்வர்யா ஏமாற்றியதற்காக அவரை கடுமையாக விமர்சித்தார் கமல். பின்னர் ஐஸ்வர்யா செய்த காரியத்திற்கு என்னைக் கேட்டால் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பி விடுவேன் என்றார் கமல்.

ஐஸ்வர்யா சேவ்டு
ஆனால் என்னை யாரும் கேட்பதில்லை என்ற கமல், உங்களை தானே கேட்கிறார்கள். நீங்கள் ஓட்டு போட்டு அவரை காப்பாற்றி விட்டீர்கள். இந்த வாரம் ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்டு விட்டார் என்றார்.

எச்சரிக்கை
மேலும் நீங்கள் செய்யும் தவறால், தவறானவர்கள் வெற்றியாளர்கள் ஆகிவிடுகிறார்கள். இதுபோன்ற காரியத்தை பெரிய சோதனையில் செய்துவிடாதீர்கள் என எச்சரித்தார்.

மறைமுக எச்சரிக்கை
பிக்பாஸ் சீசன் ஒன்று முதலே அடிக்கடி அரசியல் பேசி வருகிறார் நடிகர் கமல்ஹாசன். இந்நிலையில் போறப்போக்கில் ஆட்சியை தவறானவர்கள் கையில் கொடுத்துவிடாதீர்கள் என மறைமுகமாக போட்டுவிட்டு சென்றார் நடிகர் கமல்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications