Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய் டிவி பிரபலங்களின் திடீர் திருமணம்.. டான்ஸ் நிகழ்ச்சியில் தொடங்கிய காதல்.. குவியும் வாழ்த்துக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தீபிகாவும் அவரோடு போட்டியாளராக இருந்த மனோஜும் திருமணம் செய்திருக்கும் நிலையில் இந்த தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

சீரியல் மற்றும் சினிமாக்கள் மட்டுமல்லாமல் சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் பிரபலங்களும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆரம்பத்தில் சில வருடங்களுக்கு முன்பு பிரபலங்களின் காதல் எல்லாம் பெரிய அளவில் வெளியே தெரியாத வகையில் மூடி மறைத்திருக்கும் ஆனால் இப்போதெல்லாம் பிரபலங்கள் காதலிக்க தொடங்கியதும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்களை மனம்போல குவிக்க தொடங்கி விடுகிறார்கள்.

Television Vijay TV VJ Deepika

இவர்களுடைய வீடியோக்களை பார்த்து ரசிகர்கள் இவர்கள் காதலிக்கிறார்களா? அல்லது இது நட்பு தானா என்று குழப்பமடைய வைத்து விடுகிறார்கள். ஒரு சிலர் தங்களுடைய காதலை வெளிப்படையாக அறிவித்து விடுகிறார்கள். ஒரு சிலர் மட்டும் திருமணம் வரைக்கும் அமைதியாகவே வைத்து திருமண செய்தியை ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக சொல்கிறார்கள்.

அந்த வகையில் ஒரு ஜோடி தான் இப்போது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அதாவது ஜோடி ஆர் யூ ரெடி சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு தீபிகாவும் அவரோடு அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மனோஜும் இப்போது திருமணம் செய்திருக்கும் நிலையில் இவர்களுடைய திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

Television Vijay TV VJ Deepika

விஜே தீபிகா கனா காணும் காலங்கள் வெப் சீரிஸின் முதல் பாகத்தில் ஹரிதா கேரக்டரில் டாம்பாய் கெட்டபில் நடித்தவர் தான். இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆன மனோஜ் ஜாக்சனுக்கும் தான் கடந்த வாரம் கோயம்புத்தூரில் அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் பெற்றோர், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்று இருக்கிறது.

இவர்களுடைய திருமணத்தில் கனா காணும் காலங்கள் பிரபலங்களும் கலந்து கொண்டு இருக்கின்றனர். இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவருக்கும் டான்ஸ் பேவரைட் என்பதால் இருவரும் டான்ஸ் ஆடி பல வீடியோக்களை தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வந்தனர்.

Television Vijay TV VJ Deepika

அப்போது இருவரும் காதலிக்கிறீர்களா? என்று இவர்களுடைய ரசிகர்கள் தொடர்ந்து இவர்களிடம் கேட்டிருந்த நிலையில் இவர்களுடைய திருமணத்தின் மூலமாக பதில் கொடுத்து இருக்கிறார்கள். மனோஜ் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி சீசன் 5 நிகழ்ச்சியிலும் டைட்டில் பட்டத்தை தட்டி சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+