“கனா” சீரியல் நடிகை தர்ஷனாவுக்கு கல்யாணம்.. கணவர் இந்த பிரபலம் தானா? குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பான நீதானே என் பொன்வசந்தம் என்ற சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான நடிகை தர்ஷனாவிற்கு இன்று அவருடைய காதலருடன் வீட்டினரின் சம்மதத்தோடு பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்று இருக்கிறது.
சித்திரை மாதம் தொடங்கியதும் திருமண கொண்டாட்டமும் தொடங்கிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். இன்று இயக்குனர் ஷங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யாவிற்கு திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்று இருக்கிறது. இது பெரிய அளவில் வெள்ளி திறையில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் சின்ன திரையிலும் சீரியல் நடிகை தர்ஷனாவின் திருமணம் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.

தர்ஷனாவின் திருமணத்தில் சீரியல் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு இருக்கின்றனர். அந்த புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல தர்ஷனாவிற்கு சீரியல் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். தர்ஷனா சின்னத்திரை நடிகையாக மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நிலையில் இவருக்கு சமூக வலைத்தளத்திலும் அதிகமான ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கிறார்கள். அதுபோல தர்ஷனா நடிகையாக மட்டுமல்லாமல் ஒரு பல் மருத்துவரும் தான்.

தர்ஷனாவின் வீட்டில் எல்லோருமே மருத்துவராக இருக்கும் நிலையில் இவர் தான் நடிகையாக வேண்டும் என்று ஆசையை தெரிவித்த போது முதலில் நீ டாக்டராக படி அதற்கு பிறகு உன்னுடைய விருப்பத்தை செய் என்று அவர்கள் சம்மதம் கொடுக்க, பெற்றோரின் ஆசைப்படியே இவரும் பல் மருத்துவராக மாறி இருக்கிறார். அதற்குப் பிறகு தான் இவர் ஆசைப்பட்ட மாதிரி மாடலிங் செய்து கொண்டிருக்கும் போது இவருக்கு சில ஷார்ட் பிலிம்களிலும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

கிடைத்த வாய்ப்புகளை செய்து கொண்டிருந்த நேரத்தில் தான் ஜீ தமிழில் நடிகர் "ஜெய் ஆகாஷ்" நடிப்பில் வெளியான "நீதானே என் பொன்வசந்தம்" என்ற சீரியலில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த சீரியல் மூலம் இவருக்கு பிரபலம் கிடைத்ததும் அதைத் தொடர்ந்து ஜீ தமிழில் கனா சீரியல் மூலம் இவர் மீண்டும் சின்னத்திரையில் கலக்கிக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் இவருக்கு எங்கேஜ்மென்ட் முடிவடைந்த பிறகு கனா சீரியலில் இருந்து விலகி இருந்தார். இந்த நிலையில் இன்று தர்ஷனாவிற்கும் அபிஷேக் என்பவருக்கும் உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்று இருக்கிறது. தர்ஷனா பல் மருத்துவர் ஆக இருக்கும் நிலையில் அவருடைய காதல் கணவர் அபிஷேக் என்பவரும் மருத்துவர்தான். இவர்கள் இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இவர்களுடைய திருமணம் இன்று நடைபெற்று இருக்கிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications