தங்கபுள்ள பாருங்க.. முதல் முறை குழந்தைகளின் முகத்தை காட்டிய சினேகன்- கன்னிகா.. நெகிழ்ச்சி போஸ்ட்
சென்னை: நடிகை கன்னிகா மற்றும் பாடலாசிரியர் சினேகன் தம்பதிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தனர். இந்த குழந்தைகளுக்கு நடிகர் கமல்ஹாசன் "காதல், கவிதை" என்று பெயர் வைத்திருந்தார். இந்த குழந்தைகளின் முகத்தை முதல் முறை ரசிகர்களிடம் இந்த தம்பதி காட்டி இருக்கின்றனர். அதோடு நெகிழ்ச்சியாக போஸ்ட் போட்டு இருக்கிறார்கள்.
சினிமா துறையில் ஒரு சிலர் ஒன்றாக காதலித்து திருமணம் செய்து பார்த்திருப்போம். ஆனால் ஒரு திரைப்படத்தில் கூட ஒன்றாக நடிக்காமல் ஒரு சிலர் ரகசியமாகவே காதலித்து திடீர் திருமண அறிவிப்பு வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்கள். அந்த வரிசையில் ஒரு தம்பதி தான் சினேகன் மற்றும் கன்னிகா தம்பதி. இவர்கள் இருவரும் எந்த திரைப்படத்திலும் ஒன்றாக பணியாற்றியது கிடையாது, ஆனால் இருவரும் பத்து வருடங்களுக்கு மேலாக காதலித்திருக்கிறார்கள்.

ரகசிய காதல்
இவர்களுடைய காதலை பத்து வருடமும் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக காப்பாற்றி வைத்திருக்கிறார்கள். பிக் பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக சினேகன் கலந்து கொண்ட பிறகுதான் பலருக்கும் தெரிய வந்தார். ஆனால் அதற்கு முன்பு அவர் பல பாடல்கள் எழுதி இருந்தாலும் இந்த பாடல்களுக்கு சொந்தக்காரர் சினேகன் தான் என்று வெளியே தெரியாத வகையில் தான் இருந்தார்.
பிக் பாஸ் பிரபலம் சினேகன்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சினேகனை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டனர். அதுவரைக்கும் நாம் ரசித்த பாடலை எழுதியவர் இவர் தானா? என்று பலருக்கும் வியப்பை கொடுத்திருந்தது. இப்போதும் ஒரு சில திரைப்படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். அது போல கலைஞர் டிவியில் ஒரு சீரியலிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அதேபோல சினேகனின் மனைவியான கன்னிகாவும் சில திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்துள்ளார்.
கன்னிகா நடித்த சீரியல்
அதுபோல சன் டிவியில் ஒளிபரப்பான சீரியலிலும் கதாநாயகியாக நடித்திருந்தார். சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று காத்திருந்த கன்னிகாவிற்கு பெரிய அளவில் வாய்ப்பு வரவில்லை என்பதால் கன்னிகா மற்றும் சினேகன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு நான்கு வருடங்களுக்கு பிறகு இவர்களுக்கு இரட்டை பெண் குழந்தைகளும் பிறந்திருக்கின்றன.
பெயர் சூட்டிய கமல்ஹாசன்
தன் குழந்தைகளுக்கு சினேகனின் சினிமா மற்றும் அரசியல் குருவான கமல்ஹாசன் காதல் மற்றும் கவிதை என்று பெயர் வைத்து இருந்தார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் கன்னிகா அடிக்கடி தங்களுடைய குடும்ப புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். ஆனால் தன்னுடைய குழந்தைகளின் முகத்தை இதுவரைக்கும் காட்டாமலே மறைத்து வைத்திருந்தார்.
கன்னிகா சினேகன் பதிவு
இந்த நிலையில் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தைகள் இருவருடைய புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். அதோடு அந்த பதிவில், "எங்கள் அன்புக்குரிய ஊடக நண்பர்களுக்கும் திரையுலக உறவுகளுக்கும் வணக்கம். எங்கள் இரட்டை மகள்கள் காதல் கன்னிகா சினேகன், கவிதை கன்னிகா சினேகன் இருவரையும் உங்களுக்கு அறிமுகம் செய்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். எங்களை நேசிக்கும் உங்கள் அன்பு எங்கள் மகள்களையும் நேசிக்கட்டும்" என்று அந்தப் பதிவில் சினேகன் மற்றும் கன்னிகா இருவரும் குறிப்பிட்டு இருக்கின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications