Kanmani Serial: தொடத் தொட மலர வேண்டிய முதலிரவில் பொளேர்.. எந்த பெண் மறப்பாள்?
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் காதல் வருது... ஆனால், அது காதல் இல்லை இன கவர்ச்சிதான்னு சவுந்தர்யா புரிஞ்சுக்கறா. காதலித்த ஆகாஷுக்கும் புரிய வச்சது ரொம்ப அருமையான விஷயம்.
இந்த மாதிரி விஷயங்களை கண்மணி சீரியலில் டச் பண்ணிட்டு போயி இருக்காங்க. இனிமேல் பிரச்சனை வரும்போது அவ்வப்போது டச் பண்ண வேண்டும் என்பதே பெற்றோர்களின் ஆசை.
தங்களது பிள்ளைகளும் காதல் என்றால் என்ன, இனக் கவர்ச்சி என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ள வேண்டுமென்கிற ஆசை பெற்றோர்களுக்கு இருக்காதா என்ன?

ஆகாஷ் அம்மாவுக்கு
கண்ணனுக்கும் சவுந்தர்யாவுக்கும் கல்யாணம் நடக்கக் கூடாதுன்னு, சென்னையிலிருந்து ஸ்பெஷலா கிருஷ்ணவேணி அம்மா வரழைச்ச விஷமருந்து, கலந்த பால் கடைசியில் ஆகாஷ் அம்மாவுக்கே போயிருது. அந்த பாலை குடிச்சுட்டு அவங்க மயங்கி விழுந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த சமயத்தில் இங்கு கண்ணன், சவுந்தர்யா, ஆகாஷ் வளர்மதி ஜோடிக்கு கல்யாணம் ஆகிறது.

பாலோடு தலை குனிந்து
பால் செம்பை கையில் எடுத்துக்கொண்டு, சவுந்தர்யா புதிதாக வெட்கப்பட்டுக்கொண்டே முதலிரவு அறைக்குள் வருகிறாள். என்ன சவுண்டு புதுசா வெட்கம் எல்லாம்.. நான் உன் மாமன் தானேன்னு கூறுகிறான் கண்ணன். இருந்தாலும் வெக்க வெக்கமா இருக்குது மாமான்னு சவுந்தர்யா அவன் முகத்தைப்பார்த்து பேசாமல் பால் செம்பை மட்டும் தருகிறாள்.

எனக்கு பால்?
சவுந்தர்யாவும் பாலை குடிச்சுட்டு தனக்கும் மாமன் தருவான்னு ஓரக்கண்ணால் அவன் பால் குடிப்பதையே பார்த்துக் கொண்டு இருக்க, அவன் மொடக்கு மொடக்குன்னு செம்பு பால் முழுக்க குடிச்சுட்டு, காலி செம்பை வைக்கிறான். முட்டாள் புருஷா.. பால் எனக்கு கொஞ்சம் குடுக்கணும்னு தோணலையா உனக்குன்னு வெட்கத்தை விட்டு, உரிமையில் கோவத்தில் பேசுகிறாள்.

நமக்குள் இதுதான்
பார்த்தியா இப்போதுதான் நீ என் சவுண்டு. நமக்குள்ள வெட்கம் முதற்கொண்டு எதுவும் இருக்க கூடாது. ரெண்டு பேரும் அவ்வளவு ஒற்றுமையா எதுவும் நம்மை பிரிக்காம இருக்கணும் சவுண்டு, இந்த கோவத்தை பார்க்கத்தான் நான் பால் எல்லாத்தையும் குடிச்சுட்டேன்.னு சொல்லறான்.

சவுந்தர்யா ஆகாஷ்
சவுந்தர்யாவை உண்மையாக காதலித்தவன் ஆகாஷ். ஆனால், சவுந்தர்யா நமக்குள்ள ஏற்பட்டது காதலில்லை ஆகாஷ். நாம் படிச்சவங்க புரிஞ்சுக்குவோம். எனக்கு கண்ணன் மாமா மேலதான் காதல் இருக்கு .அதை தெரிஞ்சுக்க இவ்ளோ நாளாச்சு ஆகாஷ். நீ புரிஞ்சுகிட்டு, என் தங்கை வளர்மதியை கல்யாணம் செய்துக்கோன்னு சொல்ல, ஆகாஷும் தெளிவாகிடறான்.

வளர்திமதி ஆகாஷ்
ஆகாஷ் முதலிரவு அறையில் இருக்க, வளர்மதி வெட்கப்பட்டுக் கொண்டு, பால் செம்புடன் வருகிறாள். ஆகாஷ் வேறு பக்கமாகத் திரும்பிக்கொண்டு நின்றவன் ரொம்ப நேரம் வளர்மதியை திரும்பிப் பார்க்காமல் இருக்கான். ஆகாஷ் நான் வந்து ரொம்ப நேரமாச்சு. என்னை இன்னும் பார்க்கலைன்னு சொல்றா.

இல்லை வளர்
எனக்கு மூட் இல்லை வளர்... அம்மா ஆஸ்பத்திரியில் இருக்காங்க .இப்போ முதலிரவான்னு இருக்குன்னு சொல்றான். சவுந்தர்யா கல்யாணம் ஏற்கனவே ரெண்டு தடவை என்னால் நின்னு போச்சு. அதுக்காகத்தான் கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்னு சொல்றா. நான் இங்கே உன்னை நினைச்சு,நம்ம முதலிரவை நினைச்சு ஆசையா காத்து இருக்கேன். நீ என்னடான்னா, உன் முதல் காதலியை பத்தி ஃபீல்பண்ணிக்கிட்டு இருக்கியான்னு வளர் கத்துகிறாள் .ஆகாஷ் அவள் கன்னத்தில் பொளேர் என்று ஒரு அறை விடுகிறான்.
முதல் ராத்திரி அன்று இப்படி ஒரு புருஷன் தன்னை தொட்டால் எந்த பெண் வாழ் நாளில் இந்த முதலிரவை மறப்பாள்.. பாவம் இல்லையா?
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications