Kanmani Serial: பெரியவர் இறந்தார் கண்ணனை போட்டு இந்த பாடு..பாவம் விட்டுடுங்க!
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் பெரியவர் தர்மதுரை இறந்தாலும் இறந்தார். அவரின் மச்சினன் கண்ணனை போட்டு பெரியவரின் தம்பி சம்சாரம் படாத பாடு படுத்தி வைக்குது.
பெரியவரின் சம்சாரம் விஜயலட்சுமி.இவர் கூடவே சிறு பிள்ளையாக வந்து இந்த குடும்பத்தோடு ஒட்டிக்கொண்டு, அக்கா குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று பாடு படுகிறான். விவசாயம், கணக்கு, வழக்கு என்று குடும்பத்துக்கு ஒரு வேலைக்காரன் போல இருக்கான் கண்ணன்.
இந்த சமயத்தில்தான் பெரியவர் தர்மதுரை இறந்துடறார். அவருக்கு கண்ணன் மீது பிரியம் அதிகம். கண்ணன்தான் கொள்ளி வைக்க வேண்டும் என்று தயாராக, தம்பி சம்சாரம் கிருஷ்ணவேணி ஆட்டத்தை ஆரம்பிச்சு வைக்கறாங்க.

ரத்த பந்தம்
தர்மதுரை ஐயாவின் தம்பி மனைவி கிருஷ்ணவேணி, என்ன புதுப் பழக்கம்.. ரத்த பந்தம், ரத்த சொந்தம்னு கூட பிறந்த தம்பி இருக்கும் போது கண்டவன் எப்படி கொள்ளி வைக்கறதுன்னு கத்தறாங்க.தம்பி அதாவது தன் புருஷன்தான் கொள்ளி வைக்கணும்னு முடிவா சொல்லிட்டு போயிடறாங்க. கண்ணன் கண்ணீருடன் நகர்ந்து கொள்கிறான்.பெரியவருக்கு பிறந்தது மூணும் பெண் பிள்ளைகள் என்பதால், தம்பி கொள்ளி வைக்க வேண்டியதாகிறது.

காரியத்தை மூணாவது நாள்
பதினாறாம் நாள் வைக்க வேண்டிய காரியத்தை மூணாம் நாளே வச்சுக்கலாம்னு கிருஷ்ணவேணி ஒரே போடாக போட, அதுவும் அவங்க இஷ்டப்படி நடத்திடலாம் எதுக்கு வம்புன்னு ஊர் பெரியவர்கள் கூடி முடிவு செய்துடறாங்க..எல்லா அந்தஸ்தோடு, குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று பாடுபட்ட, விஜய லட்சுமி, கண்ணனின் பேச்சுக்கள் இப்போது அந்த குடும்பத்தில் எடுபடவில்லை.

பிண்டம் வைக்கையில்
காரியத்தில் கண்ணனும் பிண்டம் வைக்க உட்காருகையில் கிருஷ்ணவேணி அம்மா போன் செய்யறாங்க. உங்க கூட கண்ணனும் இருக்கானா என்று கேட்க, அவரும் ஆமாம் என்று கூற, பாருங்க நீங்க மட்டும்தான் உட்காரணும். அவன் உட்கார்ந்தால் இந்த வீட்டில் இன்னொரு பிணம் விழும் பரவால்லையான்னு கேட்கறாங்க. உடனே தம்பி கண்ணனை எழுந்துக்க சொல்ல, கண்ணன் என்ன மாமான்னு புரியாமல் கேட்கிறான்.
பாடம் என்னன்னா பெரிய குடும்பத்தில் எல்லாரும் மிகுந்த கவனமாகவும், எச்சரிக்கையாவும் இருக்கணும். கடைசியில் இப்படி கண் கலங்கி நிற்பதில் யாருக்கு என்ன பிரயோஜனம்?

போயி தொலை
கண்ணா எழுந்திருன்னு சொல்ல, என்ன மாமா நானும்தான் செய்யணும்னு சொல்றான் கண்ணன். ஒரு தடவை சொன்னா புரியாதா உனக்கு எழுந்து போயித் தொலையேண்டா...உனக்கு சொன்னா புரியாதா? இங்கே இருக்காதன்னு கத்தறார். கண்ணன் கலங்கிய கண்களுடன் நிற்கும்போது நிஜமா நமக்கே வருத்தமா இருக்குது.
பாடம் என்னன்னா பெரிய குடும்பத்தில் எல்லாரும் மிகுந்த கவனமாகவும், எச்சரிக்கையாவும் இருக்கணும். கடைசியில் இப்படி கண் கலங்கி நிற்பதில் யாருக்கு என்ன பிரயோஜனம்?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications