Kanmani Serial: சவுண்டு மாமாவை விட்டுடாதே சரியான சான்ஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் முதல் முறை ஏமாந்த கண்ணன் இந்த முறையும் ஏமாந்துவிடாமல் அக்கா பெண் சவுந்தர்யாவை கல்யாணம் செய்துக்க வேண்டும் என்று சீரியல் ஆர்வலர்கள் விருப்பப் படுகிறார்கள்.

இப்போது சவுந்தர்யாவை காதலிச்ச ஆகாஷை, சவுந்தர்யாவின் சித்தப்பா பெண் வளர்மதி காதலிக்கறா. ஆனால், ஆகாஷ் வளர்மதியை கல்யாணம் செய்துக்க மறுக்கிறான்.

இதற்குள் சவுந்தர்யா தன்னை காதலிப்பது கண்ணன் மாமாவுக்கு தெரிந்து விடுகிறது. சவுண்டும், மாமாவை கட்டிக்கிட்டு அழறா. ஆனாலும், இருவரும் சேர என்ன தடை இருக்கிறது என்றுதான் புரியவில்லை.

அம்மா ஆகாஷ்

அம்மா ஆகாஷ்

ஆகாஷ் அம்மாவுக்கு சவுந்தர்யாவின் சித்தப்பா பெண் வளர்மதியை ரொம்ப பிடிச்சு போகுது. வளர்மதியும் ஆகாஷை காதலிப்பதாக சொல்கிறாள்.ஆனால் ,ஆகாஷ் மட்டும் இதுக்கு உடன் படாமல் நீங்க எந்த பெண்ணை வேண்டுமானாலும் பாருங்கம்மா கேள்வி கேட்காமல் கல்யாணம் செய்துக்கறேன். ஆனால் வளர் வேண்டாம்னு சொல்ல, ஏன் ஆகாஷ்னு கேட்கறாங்க அம்மா.

வேணாம் அந்த வீட்டில்

வேணாம் அந்த வீட்டில்

சவுந்தர்யா வீட்டில் இனி பெண் எடுக்க வேண்டாம் அம்மா.அவளுக்கும் தர்ம சங்கடம், எனக்கும் தர்ம சங்கடம். தயவு செய்து என்னை வற்புறுத்துத்தாதீங்கன்னு சொல்லிட்டு போயிடறான். ஆகாஷ் அம்மாவும் ,இதை வளர்மதியின் அம்மா கிருஷ்ணவேணியிடம் சொல்றாங்க. வளர்மதி சவுந்தர்யா அக்காகிட்ட பேசி எப்படியும் நான் ஆகாஷை கல்யாணம் செய்தே தீருவேன்னு சொல்றா.

சவுந்தர்யா வளர்மதி

சவுந்தர்யா வளர்மதி

வளர்மதி அக்கா சவுந்தர்யாக்கிட்டே போயி நடந்ததை சொல்ல, சவுந்தர்யா ஒரு மாதிரி ஆனாலும், வளருக்கும் ஆகாஷுக்கும் கல்யாணம் செய்து வைப்பதாக வாக்கு தருகிறாள். இப்போது ஆகாஷ், வளரின் கல்யாணம் நிச்சயமாகும் நிலையில், கண்ணன் சவுந்தர்யாவின் கல்யாணம் கிடப்பில் கிடக்குது.

சவுண்டு கண்ணன்

சவுண்டு கண்ணன்

கண்ணனுக்கு சவுண்டின் மீது மறுபடியும் ஆசை வந்துவிட்ட நிலையில், இவர்கள் இருவரின் கல்யாண பேச்சையும் யாரும் எடுக்காத பட்சத்தில், சவுந்தர்யாவின் அக்கா, அப்படியே எங்க சவுந்தர்யாவுக்கும், கண்ணன் மாமாவுக்கும் கல்யாணம் நடக்க ஏற்பாடு செய்துருங்கன்னு சொல்றா. கண்ணன் சந்தோஷமாக பார்க்க, சவுந்தர்யா கலக்கமாக பார்ப்பது ஏன் என்று தெரியவில்லை.

இதுதான் சரியான சான்ஸ்...சவுண்டு மாமாவை விட்டுடாதே!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+