Kanmani Serial: ஏங்க...அதுக்குன்னு இப்படியா முதலிரவை தள்ளி தள்ளி... அட போங்கப்பா!
சென்னை: சன் டிவியின் நாயகி சீரியலில் கண்மணிக்கு பிறகு கல்யாணமான ஆனந்திக்கு குழந்தை பிறக்கப் போகுது. ஆனால், கண்மணிக்கும் , செழியனுக்கும் இன்னும் முதலிரவே நடக்கவில்லை.
தன்னை ஏமாத்தி கல்யாணம் செய்துகிட்டான்னு கண்மணியை தள்ளி வச்சிருந்தான் செழியன். இப்படியே ஒரு வருடம் போய், தன்னை நிரூபித்து செழியன் மனசில் இடம் பிடிச்சப்போ ஒரு வருஷம் கடந்துருச்சு.
இப்போது சேர்ந்து வாழலாம்னு நினைக்கறப்போ செழியனை அடையணும்னு நினைச்ச சுகாசினியால் எல்லாமே தடைப்பட்டு போகுது. கடைசியில் சுகாசினியின் சதிகளை முறியடிச்சுட்டு வாழ்க்கையை ஆரம்பிக்கலாம்னு நினைச்சா தங்கை மேகலாவை வச்சு கேம் ஆடறா சுகாசினி.

பொங்கி வழியுது
கண்மணியின் மேல் ஆசை பொங்கி வழியும்போது செழியனிடம் அவனின் தங்கை மேகலா ரவுடியை கொலை செய்த வீடியோவை காமிச்சு தன்னை கல்யாணம் செய்துக்க மிரட்டறா. இதில் கண்மணி, செழியனின் முதலிரவு தள்ளி போகுது. அதுவும் நீ கண்மணி கூட சேராம சுத்தமா எனக்கு வேணும்னு கேட்கறா சுகாசினி. இப்போது மேகலாவுக்காக சுகாசினியை கொலை செய்துட்டு ஜெயிலுக்கு போயிடலாம்னு முடிவு பண்றான் செழியன்.

சந்தேகம் நடவடிக்கை
அண்ணனின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த மேகலா, அண்ணிகள் கண்மணி, சுமதியிடம் சொல்லிவிட, கண்மணியும், சுமதியும் போலீசிடம் சொல்லி., அவர்களை உண்மையை கண்டறிய சொல்கிறார்கள்.அதன் படி சுகாசினிதான் ரவுடிகளை வச்சு, மேகலாவைத் துரத்திய ரவுடியை கொலை செய்தது என்று தெரிந்து சுகாசினி ஜெயிலுக்கு போயிடறா.

ஆஹா இன்று
ஆஹா இன்று முதலிரவு வச்சுக்கலாம் என்று நினைத்து , பூ, பழம், ஏகப்பட்ட சுவீட் என்று வாங்கி ரூமை அலங்காரம் செய்ய, ஜெயிலில் இருக்கும் சுகாசினி கூட சேர்ந்து, செழியனின் தம்பியே முதலிரவு மட்டும் அல்ல, எப்போதும் இருவரும் பிரிந்திருக்க அப்பப்போ சதி செய்ய வேண்டும் என்று கணக்கு போடுகிறார்கள்.

வாழக்கையில் விளையாட்டு
மாடிப்படியில் எண்ணெயை ஊத்தி வச்சுரு. கண்மணி விழட்டும்.சில நாளைக்கு முதலிரவு தள்ளிப் போகும்னு சுகாசினி செழியனின் தம்பிக்கு சொல்லித் தர்றா. அவனும் அப்படியே செய்ய, என்ன கொடுமை, எண்ணெய் ஊத்தினவன் பொண்டாட்டி சுமதியே கீழே விழுந்துடறா.
இருந்தாலும் ,கண்மணிதான் ஆஸ்பத்திரியில் சுமதிக்கு துணைக்கு நிற்க, இப்போதும் இவர்களின் முதலிரவு தள்ளிப்போகுது. பாவம்ப்பா... என்னப்பா நீங்க இப்படி பண்றீங்களேப்பா!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications