புள்ளையையும் கிள்ளிப்போட்டு தொட்டிலையும் ஆட்டறது கணக்கா என்ன கண்ணு இது...!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் கதையை சவ்வு மாதிரி இழுத்து போடறாங்க கண்ணு...ஏனுங்க.. நானு ஏதும் தப்பா சொல்லி போட்டேனுங்களா...

இந்த சின்னவரு வீட்டு மாப்பிள்ளைங்க இருக்குறாருங்களே..அவிங்களே ஊரு பூராவுக்கும் போஸ்டர் அடிச்சு ஒட்டறாங்க... அதாங்காட்டியும் சரிதானுங்க மாமா நீங்களே போயி பொண்ணு கேட்டுப்போட்டு வந்துருங்க.. முத்து செல்வியை நானே கட்டிக்கறேன்னு சின்னவருதான் சொல்லிப் போட்டாருங்களே...

Kanmani: This is not good

இப்போ இந்த மாப்பிள்ளைங்க முத்துசெல்வியும் கூட கட்டிப் போடக்கூடாது.. ஒத்தையாளா நிக்கணும்னு கணக்கு போட்டு, பேசிபோடறாங்களே.. இந்த கதை எதுக்குங்க.. கெரகம்.. கதையை சவ்வு கணக்கா இழுக்கத்தானே...

ஏனுங்க ஒண்ணு சொல்லிப் போடறோம் கேளுங்க...ஆமாம் சொல்லிப்புட்டோம். பேசாம முத்து செல்விக்கு கண்ணனை கட்டி வச்சு போடுங்க.. இல்லீங்களா... முத்துசெல்வியே தன் தராதரம் தகுதின்னு எதுனாச்சும் சொல்லிப்போட்டு ஒதுங்கிக்கறாளாங்காட்டியும்னு சாதி சனம் நினைக்கற மாதிரி காட்டிப் போடுங்க.

Kanmani: This is not good

அதை விட்டு கெரகம் எங்க நேரத்தை நீங்க ஏனுங்க வீணடிக்கோணும். கதையை சவ்வு கணக்கா இழுத்தா இந்த இதும்பாங்கேளே...அதான் ரேட்டிங்கு...கீழ போயிருமுங்க.. கண்ணுக்கு எம்புட்டு அழகா ஊரு இருந்தாலும், சனங்க நல்லவங்களா இருக்கக்காட்டியும்தான் கோயமுத்தூர் ஊரே அழகுங்குறாங்க. என்னங்க நான் சொல்லிப் போடறது சரிதானுங்களே...அது மாதிரிதானுங்க.. லொக்கேஷன் நல்லாருந்தா போதுங்களா.. கதை மனசை அள்ளுறது கணக்கா இருக்கணுங்களே...என்ன நான் சொல்றது..

நாங்க சொல்றது கணக்கா சட்டு புட்டுன்னு ஒரு முடிவுக்கு வந்து போடுங்க..சும்மா மாப்பிள்ளைங்க..அதான் கெரகம் புடிச்சவனுங்க.. பேதியில போக.. போஸ்ட்டரை ஒட்டி அசிங்கப்படுத்த காட்டியும்தானே இப்போ முத்துசெல்விய கட்டிக்கறேன்னு சொல்றாரு சின்னவரு..

Kanmani: This is not good

இப்பகாட்டியும் அதை கெடுக்க வேற ஒரு திட்டம்னு கெரகம் புடிச்சவிங்களை வச்சு கதைய நீட்டுறீங்களே இது நல்லாவா இருக்கு. சரக்கு இல்லேன்னா...உடனே சவ்வு மிட்டாயா...என்னவோ போங்க...எனக்கு புடிக்கிலீங்க. .புடிக்கறவிங்க பார்த்து போடுவாங்க...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+