Kantara Chapter 1 OTT : ஓடிடிக்கு வந்த காந்தாரா சாப்டர் 1.. அதுவும் எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்? வெளியான தகவல்
சென்னை: உலக அளவில் வசூல் சாதனையைப் படைத்த கன்னடத் திரைப்படமான 'காந்தாரா' படத்தின் இரண்டாம் பாகமான காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி, உலகெங்கிலும் உள்ள சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காந்தாரா வசூல் சாதனை
2022ஆம் ஆண்டு வெளியாகி கன்னடத்தில் பிரம்மாண்ட வெற்றியைக் கண்ட 'காந்தாரா' திரைப்படம், ரசிகர்களின் பேராதரவால் தொடர்ந்து ஓடியது. இந்தப் படம் உலக அளவில் 683 கோடிக்கு மேல் வசூல் செய்து, இந்தியத் திரைப்பட வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லை பதிவு செய்தது.
திரை பயணம்
குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்தப் படம், எதிர்பாராத வெற்றியை பெற்றது. கர்நாடகா மட்டுமின்றி, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, பிரேசில், பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட 30 நாடுகளுக்கும் மேலான இடங்களில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
காந்தாரா சாப்டர் 1 கதை
'காந்தாரா' படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகு, அதன் இயக்குநர் மற்றும் கதாநாயகன் ரிஷப் ஷெட்டி, அடுத்த பாகமான 'காந்தாரா சாப்டர் 1-ஐ மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறார். முதல் பாகத்தில், தெய்வங்கள் மற்றும் மனிதர்களுக்கு இடையேயான உறவையும், நில உரிமை பிரச்சினையையும் மையமாகக் கொண்ட கதை அமைப்பு, ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. இரண்டாவது பாகம், முதல் பாகத்திற்கு முந்தைய கதையாக, அந்தக் கிராம தெய்வங்களின் பூர்வீகத்தைப் பேசும் என்றும், இது ஒரு 'ப்ரீகுவல்' படம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர்கள்
ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கும் இந்தப் படத்தில், ரிஷப் ஷெட்டி கதாநாயகனாக நடிக்கிறார் அதோடு அவருக்கு ஜோடியாக நடிகை ருக்மணி வசந்த் நடித்திருக்கிறார். இந்த படம் மக்களால் அதிகமாக ரசிக்கபட்ட நிலையில் இந்த படம் வெளியான 20 நாட்களில் உலக அளவில் 803 கோடிக்கு மேல் வசூலித்ததாக படக்குழு தெரிவித்து இருந்தது. இந்தப் படத்தின் ஆங்கில வெர்ஷன் வருகிற 31ஆம் தேதி உலகெங்கும் வெளியாக உள்ளது. கன்னட வெர்ஷனின் நீளம் 169 நிமிடங்களாக உள்ள நிலையில் ஆங்கில வெர்ஷன் நீளம் சற்று குறைத்து 134 நிமிடங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. அது போல ஆங்கிலத்தில் டப்பிங் செய்து திரையரங்குகளில் வெளியிடப்படும் முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையை காந்தாரா சாப்ட்வேர் பெறுகிறது.
காந்தாரா சாப்டர் 1 ஓடிடி ரிலீஸ் தேதி
இந்த நிலையில் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கு 'காந்தாரா சாப்டர் 1 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்டப் பல மொழிகளின் ஆங்கிலப் பதிப்பும் வெளியாக உள்ளது. இந்த படத்தின் ஓடிடி உரிமை உரிமையை அமேசான் பிரைம் பெற்றிருப்பதாகவும் வரும் அக்டோபர் 31ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications