கார்த்திகை தீபம் ஹீரோ கார்த்திக் தப்பானவர்ன்னு சொன்னாங்க! ஆனால்.. நடிகை மீரா கிருஷ்ணன் ஓப்பன்
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் மீரா கிருஷ்ணன் அந்த சீரியலில் தனக்கு மகனாக நடிக்கும் நடிகர் கார்த்திக் பற்றி பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
அந்த வகையில் சீரியல் நடிகர் கார்த்திக் ராஜ் கனா காணும் காலங்கள், ஆபீஸ் போன்ற பல சீரியல்களில் நடித்திருந்தாலும் அவருக்கு ஜீ தமிழில் கதாநாயகனாக நடித்த செம்பருத்தி சீரியல் பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. டிஆர்பியில் சன் டிவி சீரியல் தான் எப்போதும் முதலிடத்தில் இருக்கும் ஆனால் முதல் முறையாக செம்பருத்தி சீரியல் மூலமாக ஜீ தமிழ் டிஆர்பியில் முதலிடம் பிடித்தது.

இந்த சீரியல் மூலமாகவே அதிகமான ரசிகர்கள் கார்த்திக்கு உருவாக்கி விட்டார்கள். ஆனால் செம்பருத்தி சீரியலில் கார்த்திக்ராஜ் நடித்துக் கொண்டிருக்கும் போது சீரியல் தரப்பினரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடல் திடீரென்று சீரியலில் இருந்து தான் விலகப் போகிறேன் என்று சொல்லிவிட்டு விலகி இருந்தார். அதைத் தொடர்ந்து ஒரு திரைப்படத்தை நடித்து, இயக்கியிருந்தார். ஆனால் அது அவர் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.
இந்த நிலையில் மீண்டும் ஜீ தமிழில் கார்த்திகை தீபம் சீரியலில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு அம்மாவாக அந்த சீரியலில் மீரா கிருஷ்ணன் நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிக் கொண்டிருக்கும்போது கார்த்திக்ராஜ் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார். அதில் நான் இந்த சீரியலில் கமிட்டாகின போது கார்த்திக்ராஜ் பற்றி எல்லோருமே தப்பா தான் பேசுனாங்க.
அந்த நேரத்தில் அவர் பற்றி சில சர்ச்சைகள் வலம் வந்து கொண்டிருந்தது. அதனால அவர் தப்பானவர் என்கிற ரீதியில் சிலர் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் சீரியலில் நான் அவரோடு நடித்த பிறகுதான் அவரைப் பற்றி என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அவர் என்னை விட ஒரு இரண்டு மூன்று வயது சின்ன சின்ன பையன் தான். ஆனால் சினிமாவில் உள்ள பல விஷயங்களும் நமக்காக சொல்லித்தருவார்.
சீரியலில் நான் அவருக்கு அம்மாவாக நடிப்பதால் நிஜத்திலும் அம்மாவிடம் பழகுவது போல் தான் கார்த்திக் நடந்து கொள்வார். வெளியிலே தெரிவதெல்லாம் ஒரு மாயை தான். ஆனால் நிஜத்தில் நாம் ஒருவரோடு பழகும் போது தான் அவரைப் பற்றி நன்கு புரிந்து கொள்ள முடிகிறது. இப்போது கார்த்திக் ராஜ் பற்றி நான் நன்றாக புரிந்து கொண்டேன். நான் இதற்கு முன்பு தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்திருந்தேன்.
அந்த சீரியலில் என்னுடைய மகனாக தீபக் நடித்திருந்தார். அவர் என்னைவிட வயதில் மூத்தவர். நான் அவருக்கு அம்மாவாக நடித்தேன். இப்போது கார்த்திகை தீபம் சீரியலிலும் கார்த்திக்குக்கு அம்மாவாக நடிக்கிறேன். ஆனால் அவர் என்னோட சின்ன பையன் தான். ஆனாலும் அவர்கள் எல்லோருமே எனக்கு பல விஷயங்களை சொல்லி தருகிறார்கள். அதுபோல ஒரு குடும்பமாகத்தான் பழகுகிறார்கள் என்று நடிகை மீரா கிருஷ்ணன் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications