Pahalgam Attack: மத வெறுப்பாக திசை திருப்பாதீர்கள்! நான் ஏற்கனவே அங்கு போய் இருக்கிறேன்.. ஆண்ட்ரியா வேண்டுகோள்
சென்னை: காஷ்மீரின் பகல்ஹமில் நேற்று (ஏப்ரல் 22) தீவிரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் இதுவரை 28 சுற்றுலா பயணிகள் உயிரிழந்திருப்பதாகவும், 18 பேர் காயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த நிலையில் இது குறித்து பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் நடிகை ஆண்ட்ரியா தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் தான் சில வருடங்களுக்கு முன்பு பகல்ஹமில்க்கு சுற்றுலா போனபோது எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து மத வெறுப்பாக இதை திசை திருப்பாதீர்கள் என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
நேற்றைய பொழுது பலருடைய தூக்கத்தையும் தொலைக்க வைத்திருக்கிறது. நேற்று வெளியான செய்தி தான் இப்போதும் எல்லோரையும் கண்கலங்க வைத்துக் கொண்டிருக்கிறது. நேற்று காஷ்மீரில் பகத்ஹாமில் குதிரை சவாரி செய்து வைரசன் மலை உச்சியில் இருந்த சில சுற்றுலா பயணிகளை தீவிரவாதிகள் சுட்டு குவித்து இருக்கிறார்கள்.

வருத்தமான செய்தி
தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பிறகு வெளியான வீடியோக்கள் பார்ப்பவரை பதற வைத்துக் கொண்டிருக்கிறது. அய்யோ கடவுளே இதற்கு முடிவே இல்லையா? இந்த குடும்பங்களின் நிலைமை என்ன? என்பது பலருடைய வேதனையான குமுறலாக இருக்கிறது. ரத்த களறியாக குடும்பத்தினர் முன்பு ஆண்கள் உயிரை விட்டிருப்பது பலரையும் துடிக்க வைத்திருக்கிறது.
தீவிரவாதிகள் தாக்குதல்
கோடை காலத்தில் காஷ்மீர் பகுதியில் சுற்றுலா செல்வதற்கு பலர் விரும்புவார்கள். அதிலும் காஷ்மீரில் குதிரை சவாரி செய்து பைசரன் மலை உச்சி வரை சென்று அங்கு அமைந்துள்ள ரெசார்டில் தங்கி வருவது பிரபலமான சுற்றுலா பயணமாக இருந்து வருகிறது. இந்த இடத்தில் இராணுவ வீரர்களின் உடையில் வந்த சிலர் அங்கிருந்த ஆண்களை குறி வைத்து துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்து இருக்கிறார்கள்.
ஆண்ட்ரியா பதிவு
பஹல்காமில் தாக்குதல் குறித்து பல பிரபலங்களும் தங்களுடைய கண்டனங்களையும் வருத்தங்களையும் தெரிவித்து வருகிறார்கள். அதில் நடிகை ஆண்ட்ரியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் "பஹல்காமில்க்கு நானும் சுற்றுலா பயணியாக சென்றுள்ளேன். தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக என் இதயம் துடிக்கிறது.

ஒரு சமூகத்தின் மீது வெறுப்பு
அதேபோல இந்த நிகழ்வுக்கு பின் இன்னும் கூடுதல் கண்காணிப்பு சோதனைக்கு உள்ளாக்கப்பட உள்ள காஷ்மீர் மக்களை நினைக்கையில் என் இதயம் உடைகிறது. நமது நாடு மத ரீதியாக அதிகம் பிரிந்து அணி திரட்டப்படும் ஒரு சூழலில் ஒரு குறிப்பிட்ட மதம் சமூகத்திற்கு எதிராக வெறுப்பை திசை திருப்பாமல் இருப்பது ஒரு குடிமக்களாக நமது கடமை என்று கூறியிருக்கிறார்".
ஆண்ட்ரியா வருத்தம்
நான் என் கருத்தை அடிக்கடி சொல்பவள் அல்ல. ஆனால் இந்த சூழலில் இதை சொல்ல வேண்டும் என உணர்ந்தேன். இங்கே வெறுப்பிற்கு இடம் இல்லை. எனது பதிவில் பின்னோட்ட பகுதியிலும் இல்லை, நம் உலகிலும் இல்லை என்று தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறார். அப்போது பஹல்காமில் பகுதியில் தான் எடுத்த சில புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் காஷ்மீர் பகுதியில் உள்ள இரண்டு சிறுவர்களின் புகைப்படமும் இருக்கிறது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications